கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல..சற்று பொறுங்கள்:எம்.அப்துல் ரஹ்மான்MP

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களைப் பெற்று, கூட்டணியின் ஒற்றுமையை நிலை நிறுத்த காங்கிரஸ் கேட்ட மேலும் 3 தொகுதிகளுக்கான தீர்வு தி.முக – 1, பா.ம.க -1, என்றிருந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து தியாகம் செய்ததை நாடறியும், இந்த அரசியல் பெருந்தன்மை டெல்லியில், குறிப்பாக தேசிய அளவிலான அரசியலில் தாய்ச்சபைக்கு ஒரு தனிச் சிறப்பைத் தேடித்தந்தது.
ஒரு தொகுதி குறைந்தால் நம்மில் பலர் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக கொதித்தெழுகின்றனர், குமுறுகின்றனர். ஒரு தொகுதி குறைந்ததில் யாருக்கு மகிழ்ச்சி? எல்லோருக்கும் கவலைதான். ஆனால் தொலை நோக்குச் சிந்தனையோடு, மதவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என்ற ஒரே நோக்கில், மாநிலத்திலும், மத்தியிலும் நல்லாட்சிகள் நீடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு புது வியூகம் அமைத்து, தாமாகவே முன் வந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துப் பெரும்பங்காற்றி இந்திய அரசியல் வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது.
தாய்ச்சபை தலைமையின் இந்த முடிவு மூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல. அது வேறு என்பதனை நிரூபணம் செய்யும். சற்று பொறுத்திருந்து பாருங்கள்��.
-தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப் தமது அமைப்பை கலைத்து விட்டுஇந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் அவரை வரவேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆற்றிய உரையிலிருந்து. 
SOURCE:http://muslimleaguetn.com/news.asp?id=2172

0 கருத்துகள்: