கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!
திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. கொமுக வேட்பாளர்கள் தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கொமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை பாமக 31, விடுதலை சிறுத்தைகள் 10, கொமுக 7, முஸ்லிம்லீக் 3, மூமுக 1 என மொத்தம் 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் லீக் உட்பட 4 வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். எனவே திமுகவுக்கு 4 தொகுதிகள் உறுதியாகியுள்ளது. 234 ல் 52 போக மீதம் உள்ள 182 தொகுதிகளை தான் காங்கிரசு மற்றும் திமுக பிரித்துக்கொள்ள வேண்டும். திமுக கடந்த தேர்தலை போல 132 (+4=136) தொகுதிகளில் போட்டியிட்டால் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யலாம் என தெரிகிறது.

0 கருத்துகள்: