அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தேமுதிக.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இடையே வெள்ளிக்கிழமை இரவு கையெழுத்தானது. கடந்த பிப். 24ம் தேதி தேமுதிகவினர் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்ட பேச்சு சுமுகமாக முடிந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் விஜயகாந்த் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. இதன் பிறகு தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக