கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியுடன் 2013 நிறைவடைந்து 01-01-2014 புது வருடம் பிறக்கின்றது.

அபுதாஹீரை உங்களுக்கு தெரியுமா…?

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்! 

ஆட்சியாளர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்.

நீதி தேவன் மயக்கத்தில் தான் இருக்கின்றான் என நினைப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்...

அபுதாஹீரை உங்களுக்கு தெரியுமா…? 14 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் இவரின் இழப்புகளை குறித்து பேச ஆரம்பித்தால் உங்களால் நிச்சயம் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது - வல்வை அகலினியன் அவர்கள் இன்று http://tamizl.comல் எழுதிய உணர்ச்சி பூர்வமான யதார்த்தம் ....

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நேற்று திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார்.

அணைக்கரை பாலத்தில் கனரக போக்குவரத்து தொடங்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு

திருவிடைமருதூர் டிச. 27
சென்னை–கும்பகோணம் சாலையில் கும்பகோணம் அருகே அணைக்கரை பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 2 வருடங்களுக்கு முன் பழுதடைந்தது.இதனை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் இந்த பாலம் பழுது பார்க்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி, இல்லையேல் 10 தொகுதிகளில் தனித்து போட்டி – மாநில செயற்குழுவில் தீர்மானம்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் 22.12.2013 அன்று சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசு காப்பீட்டு திட்ட உதவியுடன் இதய நோய்களுக்கு ஆபரேஷன் இல்லாமல் நவீன சிகிச்சை

அரசு காப்பீட்டு திட்டத்தின் உதவியுடன் இதய நோய்கள் மற்றும் ரத்த குழாய் நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாத நவீன சிகிச்சை முறை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் கீதாலட்சுமி கூறியதாவது:-

துபாய் இந்திய தூதரக பெண்ணின் மன மாற்றம்! மாபெரும் அரங்கில் இஸ்லாத்தில் இணைகிறார்


திருச்சியில் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி

Islamic Expo in Trichy

உலக முஸ்லிம்களின் ஒருமைத்துவம்

இஸ்லாம் ஒருமைத்துவத்தையும், அமைதியையும் இதர வாழ்க்கை சம்மந்தமான அனைத்து இன்னோரன்ன சமூக ஒருமையையும் விரும்புகின்றது, காலை மலர்ந்து மாலை உதிரும் பூப் போல அல்ல உலக முஸ்லிம்களின் ஒருமைப்படும் வெற்றியும் நாம் ஒவ்வொரு தனி நபரின் மூலம்தான் ஒரு குழுவாக மாறும்.

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

காலம் ஓர் ஆயுதம்!

‘காலம் ஓர் ஆயுதம்’ என்ற தலைப்பின் கீழ் காலத்தின் அவசியம் பற்றியும், அதை எவ்வாறு இறைவழியில் செலவிடலாம் என்பது பற்றியும் சகோதாரி ஆயிஷாவும், சகோதாரி ஆமினாவும் அவர்களின் உரையாடல் மூலமாக விளக்குகிறார்கள்.

இ.யூ. முஸ்லிம் லீக் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை

சென்னை, டிச. 14- பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல் களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அணைக்கரை பாலத்தை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டும் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம், வணிகர் சங்க பேரவையினர் வலியுறுத்தல்

தஞ்சாவூர்,அணைக்கரை பாலத்தை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் வணிகர் சங்க பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.

மின்கட்டண தொகை தெரிந்து கொள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் செல்போன் எண் பதிய அழைப்பு

தஞ்சை, : மாதாந்திர மின்கட்டணம் குறித்த தகவல்கள் எஸ்எம்எஸ் வாயி லாக அறிந்து கொள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் செல்போன் எண்ணை பதிவு செய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய திறன் தேர்வு

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

புகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம்!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் மூலம்  இனி புகார்களை ஆன்லைனிலேயே பதிவு செய்ய இயலும். இதுவரை தமிழக முதல்வர் தனி பிரிவிற்கு ஏதேனும் துப்பு அல்லது புகார் தரவேண்டுமெனில் அவற்றை நேரடியாகவோ, தொலைபேசி  மற்றும் கடிதம் வாயிலாகவோ தான் அனுப்ப இயலும். அதுவும் அவற்றின் நிலை குறித்து நம்மால் அறிய இயலாது.

கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநாடு: பிப்ரவரி மாதம் நடக்கிறது

கும்பகோணத்தில் வருகிற பிப்ரவரி மாதம் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநாடு நடைபெறும் என்று முன்னாள் வக்பு வாரிய தலைவர் கவிக்கோ.அப்துல்ரகுமான் கூறினார்

இஸ்லாமிய இலக்கிய கழக தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான கவிக்கோ.அப்துல்ரகுமான் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: மாநில ஜமாத்துல் உலமா சபை கோரிக்கை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில ஜமாத்துல் உலமா சபை செயற்குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.

சவூதி வேலை இழந்த தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்


சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்!

சென்னை மாநகராட்சி மருத்துவமனைசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்!

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு! (Tamil & English)

பிரச்சினை உருவான விதம்  1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

அட... அங்கேயும் இப்படி தானா ?

முன்பெல்லாம் கிராமங்களில் “மணமகளே மருமகளே வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா…” எனும் பாடல் ஒலிக்கும். அப்போது மணப்பெண் புகுந்த வீட்டுக்குள் “வலது காலை” எடுத்து வைத்து நுழைவார். இதற்காகவே சுற்றிலும் பாட்டிமார் நிற்பார்கள். “முதல்ல.. உன் வலது காலை எடுத்து உள்ளே வைம்மா” என்று அட்வைஸ்கள் விழும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைவது வீட்டுக்கு வளத்தைக் கொண்டு வரும் என்பது நமது செண்டிமெண்ட்.