கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நமதூர் பள்ளிவாசல் புகைப்படங்கள்

                                    அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
நமதூர் பள்ளிவாசல் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது அயல்நாடுகளில் வசிக்கும் நமதூர் ஜமாஅத்தார்கள் பார்வைக்காக இப்புகைப்படங்கள் வெளியீடு செய்வதில் கோணுழாம்பள்ளமPOST மகிழ்ச்சிஅடைகிறது

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.

நற்செயல்களால் நம்மை அலங்கரிப்போம்!

நீங்கள் உடலால் பேரழகனா, இல்லை பேரழகியா என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். மாறாக நீங்கள் உள்ளத்தால் அழகானவரா என்பதை மட்டுமே அல்லாஹ் பார்ப்பான். எனவே, நீங்கள் உங்கள் உள்ளங்களை அழகு படுத்திக்கொள்ளுங்கள்.

எறும்பின் தன்னம்பிக்கை!

தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்து விடாதீர் கள்.

 இது உங்களுக்கானது. முழுவதையும் படியுங்கள். இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

கடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..!

                                               ஹாஜியா S.சான் பேகம்
 ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.

 இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே?

கோணுழாம்பள்ளம் ஜாமியாஆ மஸ்ஜித்


                               அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
நமதூர் ஜாமியாஆ மஸ்ஜித் புனரமைப்புப் பணி முடியும் தருவாயில் உள்ளது
உள்புற வேலைகள் முடித்து வெளிப்புற வேலைகள் நடைபெற்றுக்கொண்டு
இருக்கிறது.     அரைநூற்றாண்டு பழமையான பள்ளி வாசல்


ரமலான் சிறப்பு

                                                  அஸ்ஸலாமுஅலைக்கும்
 ரமலான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் : ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183 

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் வரலாறு

அன்னையின் சிறப்புகள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள்.

தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்…


முட்டை சைவமா? அசைவமா? என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர்.

 அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.

முஹம்மது நபி (ஸல் )அவர்களை நேசிப்பது எப்படி ?

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹு)
உங்கள் அனைவரும் மீது அல்லாஹுவுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ! நிச்சயமாக எவர்கள் (ஓரிரை)நம்பிக்கை கொண்டு ,நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து ,ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய( நற் ) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது -இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும்மாட்டார்கள் .அல்பகரா :277

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்!

வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாதம் துவங்கியது! இனி சூடேறிய பாலைவன பூமியில் ரமலானின் நன்மைகளின் வசந்த மழை


துபாய்:இனி சூடேறிய பாலைவன பூமியில் ரமலானின் நன்மைகளின் வசந்த மழை பொழியப் போகிறது. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் எகிப்து, ஜோர்டான் நாடுகளிலும் வெள்ளிக்கிழமை புனித ரமலான் மாதம் துவங்கியது.

ஹஜ்ஜுப் பயணிகளுக்கு உதவும் நிரலி


முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும், மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு உதவும் வகையிலும் புதிய திறன்பேசி பயன்பாட்டு நிரலி (Smart Phone Application) ஒன்றை ஜெர்மானிய கணினி அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

ரமளானும் அதன் சிறப்புகளும்


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? -


எம்.அப்துல்ரஹ்மான்.எம்.பி
பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
 ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, நாட்களையும் நேரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து சிறிதளவும் மாறிவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் சில நேரங்களில் பாதிப்புக்கும் உள்ளாகிறது. என்னதான் நம்மை நம் வழியிலேயே வைத்துக் கொண்டு, சமூகத்திற்கு முற்றிலும்

இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!


Post image for இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!சுப்யான் பின் அப்துல்லாஹ் ஸகஃபி(ரலி) அறிவிக்கின்றார்கள்: நான் நபிகளாரிடம், “”ஆபத்துமிக்கவையாக எனக்கு நீங்கள் எடுத்துரைத்தவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிக ஆபத்துமிக்கது எது?” எனக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்துச் சொன்னார்: “இது’ நூல் :திர்மிதி 

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!

மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.

அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?

( மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ )
 “(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே! மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்”. -அல்குர்ஆன் (55: 26,27)

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

 எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்!

நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும்