கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பூவையருக்கு 50 அறிவுரைகள்

1. எனது இனிய இஸ்லாமிய சகோதரிகளே!

எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்!
அல்லாஹ் கூறுகின்றான்:- தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றைப் பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அல்குர்ஆன் 4:14)

முஸ்லிம்களுக்கு ரிசர்வு தொகுதி வேண்டும் TNTJ மாநிலப் பொதுக்குழு


2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பொதுக்குழு நிகழ்வுகள் பற்றிய விரிவான தகவல் அறிய புத்துணர்வூட்டிய டிஎன்டிஜே பொதுக்குழு!

கணவனின் கடமை பற்றி இஸ்லாம் !


கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு அமானுல்லாஹ் அவர்கள்மறைவு.


                                    அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு அமானுல்லாஹ் அவர்கள் இன்று (11.04.2013)வியாழக்கிழமை காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை   5.30 மணியளவில் நடைப்பெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.