கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கடந்த தேர்தல் திருவிடைமருதூர் தொகுதி ஓர் பார்வை

Thiruvidaimarudur

இந்திய வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் எம்.பி,க்களை சந்தித்துள்ளது திட்டக்குழு

5560980420_a91ec02b0dமாலேகான்:சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த வாரம் முஸ்லிம் எம்.பி.க்களை திட்டக்குழு சந்தித்துள்ளது.
இது சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவற்கு சாதகமான வாய்ப்பாக அமைந்தது என்று பீஹார் காங்கிரஸ் எம்.பி, மவ்லானா அஸ்ரருல் ஹக் கூறியுள்ளார்.

ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் சலுகை

ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால் குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும், போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும், ஹஜ் பிரிவில் எட்டு மாதங்கள் செல்லத்தக்க, சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும். ஹஜ் பயணம் முடிந்ததும், விண்ணப்பதாரர்களின் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கையின் ஒப்புதல் உறுதி செய்யப்படும். அதன்பின் அவர்கள், ஹஜ் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் தரப்படும். இவ்வாறு தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.

பாரிமுனை பள்ளிவாசல் தகர்ப்பும்! முஸ்லிம்கள் முறியடிப்பு!!

 


சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் நேற்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வேதனைதான்..வேறு வழியில்லை!-மகளீரணி அமைப்பாளர் ஃபாத்திமாவுக்கு கடிதம்

எனது அன்பு மகள் ஃபாத்திமாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்…)
நான் பன்னெடுங்காலம் தலைவராகவும், உறுப்பினராகவும் ஊழியம் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மகளிர் அணி மற்றும் உறுப்பினர் பொறுப்பிகளிலிருந்து உன்னை நீக்கம் செய்த செய்தி நான் உருவாக்கிய மணிச்சுடர் நாளிதழில் 23-03-2011 அன்று வெளிவந்ததை கண்டு கண் களங்கினேன். அதற்கு இணையதள மூலம் நீ நியாயம் கேட்டு எழுதி இருந்ததை பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன்.
கட்சியின் தன்மானத்தை காப்பது தவறா? காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற சிறந்த தலைமை வேண்டுமென நினைப்பது தவறா? சொந்த சின்னத்தில் நிற்காமல் மற்றவர்களுக்கு பினாமியாக நிற்பதை கண்டிப்பது தவறா?

குழந்தையின் முதல் உணவு

தாய்ப்பால் தான் குழந்தையின் முதல் உணவு. அல்லாஹ்வின் படைப்பில் இது இவ்வாறு அமைந்தது மிக முக்கியமானது. தாயின் மார்புக் காம்பு ஈரிப்பாக நுண் கிருமிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இந்த நுண்கிருமிகள் ஒரு வித மணத்தை ஏற்படுத்தி பிறந்த குழந்தையின் இதழ்களை அதைநோக்கி ஈர்க்கின்றன. கண்களைக்கூட திறக்காத குழந்தை தாய்ப்பால் சுரக்கும் இடத்தை அறியும் விந்தை இதுதான். மேலும் பெரியவர்களுக்கு உள்ளதைவிட கைக்குழந்தைப் பருவத்தில் குரல்வலையானது சற்றுமேலே தள்ளியே இருக்கும். இதன் காரணமாத்தான் தாயிடம் பாலமுது பருகும்போது அவைகளுக்கு மூச்சு முட்டு வதில்லை, மூச்சிக்குழலிலும் நுரையீரலுக்குள்ளும் பால் வடிந்துவிடுவதுமில்லை.
குழந்தைப்பருவத்தில் கிருமிகள் வாயின் வழியாகவும் சுவாசக் குழாயின் வழியாகவும் நுரையீரலையும் வயிற்றையும் சென்றடைகின்றன. இதன் மூலம் கிருமிகளை எதிர்த்த முதல் கட்டப் போராட்டம் குழந்தையின் உடலுக்குள் துவங்குகிறது.

திருவிடைமருதூர் (தனி) சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை

* தொகுதி பெயர் : திருவிடைமருதூர்

* வரிசை எண் : 170

* அறிமுகம் :
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4-ம் இடத்தில் இத்தொகுதி உள்ளது. திருவிடைமருதூர் வட்டம், கும்பகோணம் வட்டத்தின் சில பகுதிகளை இது உள்ளடக்கியுள்ளது.

இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா !

நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார்.

தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு!! TNTJ !!

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்தும்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உம்பட நிர்வாகிகம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.

மதுரை முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு

கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை


samuthaayamதமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13-ஐ நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல.

தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஃபாத்திமா முஸஃபர் நீக்கம்

fathima muzabarஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் தலைவியும், அக்கட்சியின் அவை உறுப்பினருமான சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவித்து பிரச்சாரம் செய்ததால் அவர்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

1951 - 52லிருந்து தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்ற கட்சிகளின் விவரம்:-

1951 - 52லிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு உறுப்பினர்கள் தேர்வுக்கான பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
 வருடம்ஆளுங்கட்சி
 1 1952 காங்கிரஸ்
 2 1957 காங்கிரஸ்
 3 1962 காங்கிரஸ்
 4 1967 தி.மு.க.
 5 1971 தி.மு.க.
 6 1977 அ.இ.அ.தி.மு.க.
 7 1980 அ.இ.அ.தி.மு.க.
 8 1985 அ.இ.அ.தி.மு.க.
 9 1989 தி.மு.க.
 10 1991 அ.இ.அ.தி.மு.க.
 11 1996 தி.மு.க.
 12 2001அ.இ.அ.தி.மு.க.
 13 2006 தி.மு.க.


52 -லிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள்
 பெயர்முதலமைச்சர்களின் கட்சிபதவிக்காலம்
1திரு.சி.இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ்1952 - 54
2திரு.கு.காமராஜ்காங்கிரஸ்1954 - 63
3திரு.எம்.பக்தவச்சலம்காங்கிரஸ்1963 - 67
4திரு.சி.என்.அண்ணாதுரைதி.மு.க.1967 - 69
5திரு.மு.கருணாநிதிதி.மு.க.1969 - 76
6திரு.எம்.ஜி.ராமச்சந்திரன்அ.இ.அ.தி.மு.க.1977 - 87
7திருமதி. ஜானகி இராமச்சந்திரன்அ.இ.அ.தி.மு.க.ஜனவரி1988
8திரு.மு.கருணாநிதிதி.மு.க.1989 - 91
9செல்வி.ஜெ.ஜெயலலிதாஅ.இ.அ.தி.மு.க.1991 - 96
10திரு.மு.கருணாநிதிதி.மு.க.1996 - 2001
11திரு.ஓ.பன்னீர்செல்வம்அ.இ.அ.தி.மு.க.2001 - 2002
12செல்வி.ஜெ.ஜெயலலிதாஅ.இ.அ.தி.மு.க.2002 - 2006
13திரு.மு.கருணாநிதிதி.மு.க.2006 - இதுவரை

thanks:http://therthal.vikatan.com/

தமிழக சட்டமன்ற வரலாறு!


மிழகசட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும்  ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய  ஆந்திரப்பிரதேசம் ஆகியவை உள்ளடக்கியதாக இருந்தது 'சென்னை மாகாணம்'.

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம்...

சாலையோரம் கடை விரித்த ஒருவர், "ரெண்டு வாங்கினா ஒண்ணு இலவசம்' என்று கூவி நுகர்வோரைக் கவர முயன்றால், எதிரே அதே பொருள்களைக் கடை விரித்திருக்கும் மற்றொருவர் "ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்' என்று கூவினால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் இருக்கிறது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை!
 அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பற்றிச் சொல்வதென்றால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி சொல்லியிருப்பதைவிட அதிகமாக நான் இலவசங்களை அள்ளித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் என்று ஒரே வரியில் முடித்துவிடலாம்.

ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்கள்

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை : சலுகைகள் ஏராளம்
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை  ஜெயலலிதா வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
 
* குடும்ப ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை

07kkநாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து,இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்;”மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. முக்கியமான 14 மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம்.
ஆகவே இந்த நிலை மாற வேண்டுமானால்,மக்களவையிலும்,மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.” என்று தெரிவித்தார்.

ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும், பூகம்பத்தில் புதைந்து போகும்!


o வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்
o ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை

o நிதி சேகரிப்பு! நெருப்பில் சஞ்சரிப்பு!

o செலவிடாதவர்கள் நஷ்டவாளிகள்

o சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு

o இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை
o ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்
o பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம்

நமது மத்திய அரசு இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை வெறும் 29% தான் என அடிக்கடி கூறிவந்தது. ஆனால், ஐ.நா.சபையின் திருத்தப்பட்ட அடிப்படையின் கீழ் கணக்கீடு செய்யும்போது நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை 55% ஆக, அதாவது 64 1/2 கோடி பேர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சுனாமி அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை!


பாத்திமா ஷஹானா, கொழும்பு
''(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.'' (அல்குர்ஆன் 13:39) 
சுனாமி (tsunami) ... ஆறு வருடங்களிற்கு முன் இந்தப் பெயர் உலக மக்களைப் பொருத்த வரை பிரபல்யம் இல்லாத அந்நியமான ஒரு பெயராகவே இருந்தது. ஆனால் இன்று இப் பெயரை கேட்ட மாத்திரத்தில் எல்லோர் மனதிலும் பேரலைகள் அடிக்கத் தொடங்கும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பெயர் பிரபல்யம் வாய்ந்துள்ளது.
டிசம்பர் 26, 2004 ம் நாள் உலகிலுள்ள அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு நாள். ஆயிரக் கணக்கிலான உயிர் சேதங்களையும், பல மில்லியன் கணக்கிலான பொருட் சேதங்களையும் ஏற்படுத்திய நாள். எந்த மனிதனும் விரும்பாத அந்த நாள் மறுபடியும் கடந்த வெள்ளிக்கிழமை 11 03 2011 அன்று ஜப்பானில் திரும்ப வரும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

இவ் இயற்கை அனர்த்தங்கள் மூலம் அல்லாஹ் அவனது வல்லமையை நம் கண் முன்பாக தெளிவாகக் காட்டினான்.

கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்!

கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் மாறுவேடம் புனைந்து வருமாறு மாணவ - மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடுவதும், நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ - மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதையும் காண்கிறோம்.

தனது பிள்ளையை கிருஸ்ணனாக வேடமிட்டு, ஒரு முஸ்லிம்தாய் அழைத்து செல்வதைதான் படத்தில் பார்க்கிறோம். இந்த காட்சியை கண்டதும் நம் இதயம் ஒருகணம் இயங்க மறுத்தது!. கண்ணீர்த் துளிகள் இமையை ஈரமாக்கியது!!.

5000 முஸ்லிம்களை படுகொலை செய்ய சதி!! சி.பி.ஐ தகவல்!!

 ஹைதராபாத்: இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

அம்மி,உரல்களுக்கு இனி தமிழகத்தில் இடமில்லை – கலைஞரின் தாராள தேர்தல் அறிக்கை...

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பெண்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகத்தை கவரும் வகையில் சிறுபான்மை சமூக பெண்களுக்கு சிறப்புச் சலுகைகளோடு கல்வி மேம்பாட்டுத் திட்டம், சிறுபான்மை சமூக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு. முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலனை ஆகியன அடங்கும்.

சுனாமி: இயற்கையின் சீற்றமா? இறைவனின் நாட்டமா?

முகவை எஸ்.அப்பாஸ்
பரந்து விரிந்த நீர்ப்பரப்பு; பரவசமூட்டும் நீல நிறம்; காலை தழுவிச் செல்லும் அலைகள், மேனியை இதமாக வருடும் கடல் காற்று இவற்றின் மூலம் மனிதனின் இதயத்தை கொள்ளை கொண்ட கடல், என்னதான் வேகமாக கிளம்பினாலும் ஒரு எல்லைக்குள் வந்து திரும்பிய அலைகள், ஏணியை போல் ஒய்யாரமாக எழும்பி, ஒரு பெருந்தொகை மக்களை விழுங்கி செல்லும் அந்த சுனாமி நாளில்தான்,

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை : சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. அ.தி.மு.க.,- ம.ம.க.,வுக்கு திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கியது. இந்த 3 தொகுதிகளில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி-எம்.தமிம் அன்சாரி, ஆம்பூர்-அஸ்லம் பாட்ஷா ராமநாதபுரம்-பேராசிரியர் ஜவாஹிருல்லா
SOURCE:TMMK.

வாழ்க்கை

1. வாழ்க்கை என்பது ஒரு குறிகோள்:அதை அடைய வேண்டும்.

2. வாழ்க்கை என்பது ஒரு வாக்கு:அதை நிறைவாக்க வேண்டும்.

3. வாழ்க்கை என்பது ஒரு பயணம்:அதை முடிக்க வேண்டும்.

4. வாழ்க்கை என்பது ஒரு கடமை:அதை நிறை வேற்ற வேண்டும்.

5. வாழ்க்கை என்பது ஒரு சவால்:அதை சந்திக்க வேண்டும்.

6. வாழ்க்கை என்பது ஒரு பாடல்:அதைப் பாட வேண்டும்.

7. வாழ்க்கை என்பது ஒரு கனவு:அதை நனவாக்க வேண்டும்.

8. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு:அதை ரசிக்க வேண்டும்.

9. வாழ்க்கை என்பது ஒரு நீர் நிலை.அதை நீந்திச் செல்ல வேண்டும்.

10. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்:துணிவு,பொறுமை,தளராமனம் என்ற மூன்று கருவிகளுடன் போராட வேண்டும்.

விருப்பம்

1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.

2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.
3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்.
5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.

6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.

7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும்,துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.
8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும்,முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.

9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும்,தூயவனவற்றையும் உண்ணுங்கள்.

10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும்,உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்

தும்மல்

நிச்சயமாக அல்லாஹ் தும்முவதை உவக்கின்றான்.கொட்டாவி விடுவதை உவப்பதில்லை.எனவே உங்களில் எவரேனும் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப்புகழ்ந்தால் அதனை செவியுறும் ஒவ்வொரு முஃமினும் “யர்ஹமுகல்லாஹ்”என்று மறு மொழி பகர வேண்டியது கடமையாகும்.ஆனால் கொட்டாவி ஷைத்தானின் புறத்தால் வருவதாகும்.எனவே உங்களில் எவருக்கேனும் கொட்டாவி வரும் பொழுது இயன்ற அளவு அதனை அடக்கிக்கொள்ளுங்கள்.(வாயை மூடிக்கொள்ளவும்)ஹா..ஹா..எனக்கூற வேண்டாம்.இது செய்தானின் செய்கையாகும்.இதனைக்கண்டு ஷைத்தான் சிரிக்கின்றான்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மதி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தேர்வு

Indian_Union_Muslim_League_look_for_8_seats_from_DMK
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர் மட்டக்குழு கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை – 1, மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸிலில்  நடைபெற்றது. 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு.

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு – கருணாநிதி, ஸ்டாலின் தொகுதி மாறி போட்டி

திமுக போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியலை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
ஆயிரம் விளக்கு, தஞ்சாவூர், பாளையங்கோட்டை, மதுரை(மத்தி) ஆகிய நான்கு தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை திமுக நிறுத்தியுள்ளது.
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் பெண் வேட்பாளர்கள் 11 பேர். புதிய வேட்பாளர்கள் 53 பேர்.

மணி சங்கர் பதவி எப்படி? பறிபோனது விக்கிலீக்ஸ்!!

பெட்ரோலியத்துறை அமைச்சராக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மணி சங்கர் அய்யரை அத்துறையிலிருந்து நீக்கக் காரணம் அமெரிக்காவின் நிர்பந்தமாகும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணச் செய்தி கூறுகிறது.

இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் எரிவாயு பைப்லைன் திட்டத்திற்காக முயற்சி மேற்கொண்ட அமெரிக்க எதிர்ப்பாளரான மணி சங்கர் அய்யரை பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முரளி தியோராவை நியமித்தது அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவுச் செய்ய இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது. இதனைக் குறித்து கருத்துத் தெரிவித்த மணிசங்கர் அய்யர் இச்செய்தியில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தார்.
thanks; http://www.sinthikkavum.net/

வெறும் இரண்டு சீட்: முஸ்லிம்களை ஏமாற்றிய ஜெ

jayalalitha1வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடுகள் முடிவுற்ற நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தேர்வுச் செய்யும் பொழுது குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டுமென்பது முஸ்லிம் சமுதாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வேட்பாளர் செலவு கணக்கு பட்டியல்: ஒரு டியூப் லைட்டுக்கு 50 ரூபாய் நாற்காலி ஒன்றுக்கு 5 ரூபாய்; பட்டாசுக்கு ரூ.350; பூ மாலைக்கு ரூ.400

வேட்பாளர் செலவு கணக்கு பட்டியல்: 
ஒரு டியூப் லைட்டுக்கு 50 ரூபாய் 
நாற்காலி ஒன்றுக்கு 5 ரூபாய்; 
பட்டாசுக்கு ரூ.350; பூ மாலைக்கு ரூ.400
தமிழக சட்டசபை தேர்தலில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை நடத்தி கோடிக்கணக்கான பணத்தை கைப்பற்றி உள்ளது.

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ:முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

sdpi flag1சென்னை:எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட  6  தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்: 1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்):  நெல்லை முபாரக் 2இராமநாதபுரம்: அப்துல் ஹமீத் 3.பூம்புகார் (நாகை மாவட்டம்): முஹம்மது தாரிக் 4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்): உமர் கத்தாப் 5.துறைமுகம்(சென்னை): அமீர் 6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் :-நிரவி பதுர்தீன். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
thanks:http://www.thoothuonline.com/

2011-ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.n

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்வருகின்ற  சட்டசசபை தேர்தலுக்கான அ.தி.மு.க.  வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் வருமாறு:-
 
1. ஸ்ரீரங்கம்-ஜெ ஜெயலலிதா  2. கும்மிடிபூண்டி- வி. கோபால் நாயுடு  3. பொன்னேரி (தனி) -பொன். ராஜா,  4.திருவள்ளூர்- ரமணா 5. பூவிருந்தவல்லி (தனி)- இரா.மணிமாறன்  6.ஆவடி- எஸ். அப்துல் ரஹீம்   7அம்பத்தூர்- .எஸ். வேதாச்சலம்   8. மாதவரம்- வி. மூர்த்தி   9.திருவொற்றியூர் -  கே. குப்பன்   10.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - இ. மதுசூதனன்,

தஞ்சை மாவட்டத்தில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்கள் அறிவிப்பு

கும்பகோணம், திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அலுவலராக கும்பகோணம் ஆர்டிஓ அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு; தாவூத் மியாகான் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
 
 அ.தி.மு.க.வுக்கு ஆதரவு;
 
 தாவூத் மியாகான் அறிவிப்பு
தி.மு.க. தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு முதலில் 3 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்திருந்தது.   தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு செய்தபோது சிக்கல் ஏற்பட்டதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி காங்கிரசுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தது.

குறட்டையை தடுக்க வழிகள்


நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை பெற்றதை போன்று மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு ஒன்றை கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளனர்!

எம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.

ந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த பத்தாம் தேதியோடு முடிவடைந்துவிட்டது.
ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள்
புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்
விடுதிக்கு முன்னாலும் குறைந்தது ஐம்பது அறுபது பேர் ‘தேவ்டு’ காத்து நிற்கிறார்கள்.‘‘எம்.எல்.ஏ.வுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்குக் கொடுத்துடுவேன்.

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?

 
டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலீ, பிஎச்.டி, ஐ.பீ.எஸ் (ஓ)
[ இந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், இந்திய சுதந்திர வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், சுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், கண்ணிய மிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயக வாதிகள் நிறைந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், விஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களை பெற்ற சமுதாம் நமது சமுதாயம்,

இவர்களா நம் தலைவர்கள்?!

leader-with-followersஇன்றைய தேவையை அக்கறையுடன் எடுத்துரைக்கும் ஆக்கம்
[ கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே...!
செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்


பயனுள்ள எளிய மருத்துவக் குறிப்புகளை, சகோதரி (கல்லை) நூர்ஜஹான் அவர்கள் தொகுத்து நமக்கு அனுப்பியுள்ளார். நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள் பயனடைவதற்காக அவற்றை இங்குத் தருவதில் மகிழ்கிறோம்! - நன்றி சத்தியமார்க்கம்.காம்.

கலைஞருக்கு ஒரு திறந்த மடல்!- தமிழருவி மணியன்

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு, என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.

சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்

தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.

முஸ்லீம் லீக்கையும், முஸ்லீம் சமுதாயத்தையும் அவமானப்படுத்தும் நடவடிக்கையை தேசிய தலைமை மேற்கொண்டதாக லீகின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஃபாத்திமா முஸஃபர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டினார்.

தி.மு.க கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 இடங்கள் வழங்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை அளித்து பிரச்சனையை தீர்ப்பதற்காக லீகிற்கு கிடைத்த 3 இடங்களில் ஒன்றை தானமாக வழங்க தேசிய தலைவர் இ.அஹ்மத் சம்மதித்தார். மாநில தலைவர் பேராசிரியர் காதர்மைதீன், பொதுச்செயலாளர் அபூபக்கர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்காமல் இ.அஹ்மத் சீட் தானத்திற்கு சம்மதித்ததாக ஃபாத்திமா முஸஃபர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் ஒரு சீட்டை தானம் செய்துவிட்டு கேரளாவில் ஒரு சீட்டை அதிகமாக பெறலாம் என முஸ்லீம் லீகின் தேசிய தலைமை கூறுகிறது. கேரளத்தில் முஸ்லீம் லீக் பலமாக உள்ளது. கட்சியை பலப்படுத்துவதுதான் முஸ்லீம் லீக் தலைமையின் நோக்கமென்றால் கேரளத்திற்கு பதிலாக தமிழ்நாட்டில் கூடுதலாக ஒரு இடத்தை பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் கிடைத்த 3 சீட்டிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடத்தான் முஸ்லீம் லீகின் மாநிலக் கமிட்டி தீர்மானித்திருந்தது. இதற்கு விரோதமாக தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொண்ட பேராசிரியர் காதர் மைதீனையும், பொதுச்செயலாளர் அபூபக்கரையும் தலைமைப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என ஃபாத்திமா முஸஃபர் தெரிவித்துள்ளார்.
செய்தி:மாத்யம்

மூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல..சற்று பொறுங்கள்:எம்.அப்துல் ரஹ்மான்MP

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களைப் பெற்று, கூட்டணியின் ஒற்றுமையை நிலை நிறுத்த காங்கிரஸ் கேட்ட மேலும் 3 தொகுதிகளுக்கான தீர்வு தி.முக – 1, பா.ம.க -1, என்றிருந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து தியாகம் செய்ததை நாடறியும், இந்த அரசியல் பெருந்தன்மை டெல்லியில், குறிப்பாக தேசிய அளவிலான அரசியலில் தாய்ச்சபைக்கு ஒரு தனிச் சிறப்பைத் தேடித்தந்தது.
ஒரு தொகுதி குறைந்தால் நம்மில் பலர் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக கொதித்தெழுகின்றனர், குமுறுகின்றனர். ஒரு தொகுதி குறைந்ததில் யாருக்கு மகிழ்ச்சி? எல்லோருக்கும் கவலைதான். ஆனால் தொலை நோக்குச் சிந்தனையோடு, மதவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என்ற ஒரே நோக்கில், மாநிலத்திலும், மத்தியிலும் நல்லாட்சிகள் நீடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு புது வியூகம் அமைத்து, தாமாகவே முன் வந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துப் பெரும்பங்காற்றி இந்திய அரசியல் வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது.
தாய்ச்சபை தலைமையின் இந்த முடிவு மூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல. அது வேறு என்பதனை நிரூபணம் செய்யும். சற்று பொறுத்திருந்து பாருங்கள்��.
-தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப் தமது அமைப்பை கலைத்து விட்டுஇந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் அவரை வரவேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆற்றிய உரையிலிருந்து. 
SOURCE:http://muslimleaguetn.com/news.asp?id=2172

சீட் கொடுத்து விட்டு பிடுங்குவது அநியாயம்: ஐக்கிய ஜமாஅத் குற்றச்சாட்டு

முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்று பலனை அனுபவித்து வந்தவர்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்காமல் ஏமாற்றியுள்ளதாக முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவையினர் தி.மு.க., மீது குற்றம் சாட்டினர்.

விழுப்புரத்தில் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை தலைவர் அமீர் அப்பாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் துவங்கப்பட்டு, சமூகத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய மக்கள் முன்னேற்றத்திற்காக கடந்த மூன்றாண்டுகளாக பாடுபடுகிறது. கல்வி, அடிப்படை வசதிகளை பெற்றிட அரசியல் அதிகாரத்தில் இடம்பெற்றாக வேண்டும். மனு கொடுத்து கேட்கும் ஆளாகவே தொடர்ந்து முஸ்லிம் சமுதாயம் இருக்க முடியாது. விழுப்புரம் மாவட்டம் துவங்கி, கடந்த 22 ஆண்டுகளாக ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு கூட எந்த கட்சியும் வாய்ப்பளிக்கவில்லை. அனைத்து சாதி கட்சிகளும், அவரவர் சமூக நன்மைக்கே செயல்படுகின்றனர். தற்போது முளைத்தவர்களுக்கு எல்லாம், 7 சீட் கொடுக்கும் போது முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்கவில்லை.

தன்மானம் காக்குமா தாய்ச்சபை...?

அரசியல் களத்தில் முஸ்லிம்கள் இன்னும் எடுப்பார் கைபிள்ளைகள்தான்
என்பதை மீண்டுமொருமுறை நிருபித்துள்ளது தமிழகத்தின் தற்போதைய
சட்டப்பேரவை தேர்தல்களம்.
திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் முஸ்லிம்களின் தாய்ச்சபை எனும்
பெருமைக்குரிய இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அக்கூட்டணியில் தனக்கு
ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளிலும் திமுக சின்னமான உதயசூரியன்
சின்னத்திலேயே போட்டியிடுமென அறிவிக்கப்பட்டது.

சமுதாய பலம் இதுவே முதல் படி !

சமுதாய பலம் இதுவே முதல் படி !
தமிழகத்தை பொறுத்தவரை இஸ்லாம் சமுதாயத்திற்கு அரசியல் எட்டாக்கனியாகவே இருந்து
வருகிறது. காலம் காலமாய் நமது முன்னோர்கள் தமிழகத்திலே இருக்கக்கூடிய திராவிடகட்சிகளுக்கு அடிபணிந்தே இருந்து
வருகிறார்கள்.இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருப்பது
திராவிட கட்சிகளுக்கும் தன்னை தேசிய கட்சி என்று பிரகடன படுத்திக்கொண்டு
இருக்கும் சில கட்சிகளுக்கும் மிகப்பெரிய லாபமாகவே உள்ளது .தமிழகத்தை
பொறுத்தவரை நம் சமுதாயம் யாரை அடையாளம் காட்டுகிறதோ அவர்கள்தான் ஆட்சி
பொறுப்பில் வரமுடியும் என்பதை நமது சமுதாய மக்கள் புரியாமல் இருப்பது தான்

ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படு​ம் நிலை ஏற்படக்கூடா​து:அப்துர் ரஹ்மான் எம்.பி

ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படும் நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது வெளியுறவு அமைச்சர் நடத்திய கூட்டத்தில் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வலியுறுத்தல்

புனித ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படும் நிலை ஒரு போதும் ஏற்படக் கூடாது. ஹாஜிகளுக்கு பாஸ் போர்ட் வினியோக முறை எளிமையாக்கப்பட வேண் டும். ஹஜ் பயணிகளுக்கான தங்கும் இடங்கள் ஹரம் ஷரீப்களுக்கு அருகில் செய்து தர வேண்டும். என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., வலியுறுத்தியுள் ளார்.
ஹஜ் புனிதப் பயண ஏற்பாடுகளில் அரசு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடு குறித்த நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் அதிகாரிகள் இணைந்த கூட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூட்டியிருந்தார்.

தி.மு.க – காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட முழு முயற்சி மேற்கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கலைஞர் -சோனியா நன்றி

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வேண்டுமென அனைவரும் விரும்பினர்.  இந்த விருப்பம் நிறைவேறும் என்று இருந்த சூழ்நிலையில் பேச்சு வார்த்தை முறிவடைந்து மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க அமைச்சர்கள் விலகிக் கொள்வது என்று முடிவெடுத்தனர்.

மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எத்தகைய சிக்கலும் ஏற்பட கூடாது, அதே நேரம் தமிழகத்தில் டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என அக்கரை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தலையிட்டது.
m
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவரின் வேண்டுகோளின் அடிப்படையில்
தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்கள் டில்லியில்  காங்கிரஸ் – தி.மு.க தலைவர்களுடன் இதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டார்.
07-03-2011 திங்கள் முதல் தொடர்ந்து அவர் மேற்கொண்ட முயற்ச்சியின் பலனாக  நல்ல இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது.
m
08-03-2011 செவ்வாய் பிற்பகலில் உடன்பாடு காண வேண்டும் என்ற நோக்கத்தோடு காரியங்கள் முடுக்கி விடப்பட்டன.
மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் காங்கிரஸ் செயலாளர்கள் அஹமது பட்டேல், குலாம் நபி ஆசாத், தி.மு.க மத்திய  அமைச்சர்கள்  மு.க. அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரை உடன் இருந்து பேச வைத்தார் இ. அஹமது.
m
63 இடங்கள் வேண்டுமென்பதில் காங்கிரஸ் உறுதியுடன் நின்றது.  உடன்பாட்டை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற முடிவில்  தி.மு.க ஒரு இடத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி  ஒரு இடத்தையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்தையும் விட்டுக்  கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் இ. அஹமது அவர்கள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களிடம் தெரிவித்தார்.
m
ஒரு இடத்தை விட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மத்திய, மாநில அரசுகள் தொடரச் செய்வதே புத்திசாலித்தனமானது என்பதால் அந்த முடிவிற்கு தமிழ்நாடு மாநிலத் தலைமை சம்மதம் தெரிவித்தது.
இன்று 08-03-2011 மாலை 3.45 மணியிலிருந்து மத்திய அமைச்சர்கள் இ. அஹமது, பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், தயாநிதி மாறன் ஆகியோர் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களிடம் தொலைபேசியில் பேசி நிலவரங்களைக் கூறினர்.
m
நிலைமைகளை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உணர்ந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க மாலை 4.30 மணிக்கு  சம்மதம் தெரிவித்தார்.  அதன் பிறகே  தி.மு.க – காங்கிரஸ் உடன்பாடு சோனியா காந்தியின் இல்லத்தில் குலாம் நபி ஆசாத்தால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
m
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த மகத்தான முயற்ச்சிக்கு தி.மு.க தலைவர் கலைஞர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
m
இந்த முடிவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் இடையே வருத்தத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி இருக்கும் என்பது உண்மை.  ஆனால் இந்த கூட்டணியின் விளைவு எதிர் காலத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் ஒரு மிகப் பெரிய பலனைப் பெற்றுத் தரும்.
m
எல்லாவற்றையும் விட, இன்றைய  நெருக்கடியான சூழ்நிலையில் மதவெறி சக்திகள் தடுக்கப்பட்டு மதசார்பற்ற – அதிலும் குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான அரசுகள் நீடித்து நிலைப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்த தியாகம் வரலாற்றில் இதன் மூலம் இடம் பெறுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையை நாடியிருப்பான். அவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கும்
சோர்வின்றி உழைப்போம் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்.
m
- கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.
அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.

கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா!

கல்லூரி நாட்களின் போது பர்தா அணிந்து சென்ற சில பெண்களை பார்த்து நண்பன் ஒருவன் அடித்த கமெண்ட்.. 'எந்த கோர்ட்டுல வேலை பார்க்குறாங்கனு தெரியல!' அப்பெண்கள் பர்தாவை வக்கீல்கள் அணியும் மேலங்கி போல் அணிந்திருந்தது தான் அவனின் கருத்திற்கு காரணம். சில வருடங்கள் கழித்து வளைகுடாவில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் சொன்ன வார்த்தைகள். 'இந்த நாட்டுல மிகவும் கவர்ச்சியான ஆடை பர்தா தான்!!' பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பர்தாக்கள் அவற்றின் நோக்கத்திற்கு மாறாக நிற்பது தான் இத்தகைய விமர்சனங்களுக்கு காரணமாக அமைகின்றன.

ஹஜ் மானியங்களை நீக்கிவிட்டு வசதிகளை பெருக்குமாறு முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

:ஹஜ் புனிதயாத்திரைக்கு மானியங்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஹாஜிகளுக்கு குறைந்த் பயணக் கட்டணம், விசாலமான வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடுச்செய்ய விமான நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜிற்கு செல்லும் புனித யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியாவில் உயர்ந்த தங்குமிட வசதிகளை செய்வது, ஹாஜிகளுக்கு அளிக்கும் தற்காலிக பாஸ்போர்ட் நிரந்தரமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்துள்ளனர்.

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் எம்.பிக்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய சந்திப்பில் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மானியங்கள் தேவையில்லை அதற்கு பதிலாக நீண்டகால கொள்கைதான் தேவை என முஸ்லிம் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&பாலைவனத்தூது

முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?

அ.தி.மு.ககூட்டணியில் இணைந்திருக்கும் த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கிறது. த.மு.மு.க.தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விடம், “”முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?” என்று கேட்டபோது,

“தி.மு.க.வின் தொடக்க காலத்திலிருந்து அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் முஸ்லிம்கள். 1967ல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. அரியணையில் ஏறியதற்குக் காரணம் முஸ்லிம்கள்தான்.

தமிழக முஸ்லிம்களின் பலம்.

தமிழக முஸ்லிம்களின் பலம் ..தமிழக முஸ்லிம்களின் பலம் ..கண்டிப்பாக படித்து பகிர்ந்து கொள்ளவும்…

தமிழக முஸ்லிம்களின் பலம் ..தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்!!!

வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. அந்த வெற்றிலையின் விலைதான் இன்று ஒரு கட்டு 7000 ரூபாய்.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை உண்டு.

தி.மு.க-காங்கிரஸ் விரிசல்: ஆதரவும்-எதிர்ப்பும்

தி.மு.க-காங்கிரஸ் விரிசல்:
 
ஆதரவும்-எதிர்ப்பும்
தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த 7 ஆண்டுகளாக இருந்த நட்பு திடீரென முறியும் என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தி.மு.க-காங்கிரஸ் விரிசலை அரசியல் தலைவர்கள் பலரும் எதிர் பார்த்து காத்திருந்தவர்கள் போல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தி.மு.க-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வெளியாகி உள்ள கருத்துக்கள் அரசியலை மேலும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகுவதாக அறிவித்ததும், தமிழக காங்கிர தலைவர்கள் அனைவரும் வாயை இறுக மூடிக் கொண்டனர்.

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.