கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சட்டம் தன் கடமையை செய்யுமா?

சட்டம் தன் கடமையை இப்பொழுதாவது சரி வர செய்யும்மா? என்று உலகமே! எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. பாபர் மசூதி இடிப்பு அத்வானிக்கு நோட்டீசு சி.பி.ஐ. கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. அயோத்தியில் குவிந்து இருந்த கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தனர். அவர்களை பா.ஜ.க. தலைவர்கள் தூண்டி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

கரசேவகர்களிடம் மத உணர்வை தூண்டி விட்டு பாபர் மசூதியை இடிக்க செய்தனர் என்று பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. ரேபரேலியில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அத்வானி மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்த ரேபரேலி கோர்ட்டு சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அலகாபாத் ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. ஆனால் ஐகோர்ட்டும் சி.பி.ஐ.யின் மனுவை நிராகரித்தது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. தலைவர்கள் சதி செய்துள்ளதாக கூறி சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீதான விசாரணைக்கு பதில் அளிக்குமாறு பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரேக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புதிய வேகம் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்: