கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அரசு தலையிடாவிட்டால்… ஆயிரக்கணக்கான கோடி வக்ஃப் வருமானம் நஷ்டமாகும்!

புதுடெல்லி: மத்திய அரசு உளப்பூர்வமாக தலையிடாவிட்டால் வக்ஃப் சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சச்சார் கமிட்டியில் சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றிய ஸக்காத் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் டாக்டர் ஸஃபர் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் இலவசம் – அது என்ன? அதாங்க “அட்வைஸ்”

இளைஞர்களுக்குப் பிடிக்காதது, முதியர்வர்களுக்குப் பிடித்தது. தெரிந்தவர்களோ தெரியதவர்களோ எங்கு போனாலும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதும், அனைத்து காலங்களிலும் பொழியும் மழை அதுதான் “அட்வைஸ் மழை”.

கீழணை பாலம் பாதுகாப்பு அவசியம் : பாசனத்தை காக்க போக்குவரத்தை தடை செய்தால் என்ன?

கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும், பழமையான கீழ்அணையை பாதுகாக்க, அப்பாலத்தின் மீது, போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். போக்குவரத்திற்காக, மாற்றுப் பாலம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மயிலாடுதுறையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளாம்!

மதுரை, மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி
மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கை மற்றும் கடலோர மாநிலங்கள் வழியாக, தென் மாநிலங்களில் நுழைந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மகாரஷ்டிர மாநில உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மத்திய அரசு சிறுபான்மையினருக்காக உருவாக்கும் 5 பல்கலைக்கழங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்காக மத்திய அரசு உருவாக்க உள்ள 5 பல்கலைக்கழகங் களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம். அப் துல் ரஹ்மான் எம்.பி. இன்று கோரிக்கை வைத்தார்.

சிறுபான்மையின சமுகத் தின் கல்வி மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு சிறுபான்மை யினருக்கென பிரத்யேகமாக நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக ஐந்து பல்கலைக் கழங்களை ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.

‘இன்ஷா அல்லாஹ்’ என்றால் என்ன?.

முஸ்லிம்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவதைக் கண்டிருப்பீர்கள். குறிப்பாக எதிர்காலத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தாலோ அல்லது நாடினாலோ இந்த வார்த்தையோடு சேர்த்துதான் அச்செயலை செய்வதாகக் கூறுவர். ‘இன்ஷா அல்லாஹ் நான் இன்று மாலை அங்கு வருகிறேன்’ என்றோ ‘இன்ஷா அல்லாஹ் நாளை எனக்கு திருமணம் நடைபெற உள்ளது’ என்றோ கூறுவதை கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தையின் பொருள் என்ன?

கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு ஜீனத்அம்மாஅவர்கள் மறைவு.

                                         அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு ஹஜ்ஜி முகம்மது அவர்களின் தாயாரும்,சகாபுதீன்&அப்துல்ரஷீத் பாட்டி  ஜீனத்அம்மா இன்று வெள்ளிக்கிழமை(23.08.2013) இரவு 9.00 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் நாளைசனிக்கிழமை(24.08.2013) காலை11,00மணியளவில் நடைப்பெறும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

மாணவர்களும், தொழுகையும்…!

தொழுகை, ஒவ்வொரு முஸ்லிமின் இரண்டாவது கடமை. மறுமையில் முதல் விசாரணை தொழுகை குறித்தே கேட்கப்படு மளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடமை.

தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மட்டுமே குர் ஆனில் 31 இடங்களில் வருகின்றன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையினை இறைவனருளால் நம்மில் பலர் கைக்கொள்கிறோம், அல்ஹம்துலில்லாஹ். ஆனால், நம் பிள்ளைகளிடம் இதை முறையாக நிலை நிறுத்துகிறோமா?

கோணுழாம்பள்ளத்தில்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி

கோணுழாம்பள்ளத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி ஈகைதிருநாள் அன்று நடைப்பெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைநாட்டாண்மை அப்துல்மாலிக், மற்றும் நிர்வாகிகள் இமாம்அலி,அப்துல்காதர், பஜ்லுல்ஹக், பரிசுகளை வழங்கினார்கள் ஜமாஅத்தார்களும், பெண்களும் திரளாகவந்து சிறப்பித்தினர்
இந்த நிகழ்ச்சியைகோணுழாம்பள்ளம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்ப்பாடு செய்து இருந்தனர்

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மரணம்!

சென்னை: பிரபல எழுத்தாளர், மனோதத்துவ நிபுணர், பேச்சாளர் பேராசிரியர் அப்துல்லாஹ் இன்று (19/08/2013) அதிகாலை மரணமடைந்தார்.

நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ், சில நாட்களுக்கு முன்பு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்தார். நேற்று உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் அப்துல்லாஹ்வுக்கு சிகிட்சை அளிக்கப்பட்டது. சிகிட்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

J. நியாஜ் அஹமது – நஜிமா பானு திருமணம்


பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

கோணுழாம்பள்ளம் ஈகை திருநாள் தொழுகை

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஃபித்ரா விபரங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்
கோணுழாம்பள்ளம் கிளையில் 08.08.13 வியாழக்கிழமை அன்று ஒரு நபருக்கு 491 வீதம் 90 குடும்பங்களுக்கு ரூ.44,185 க்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில்நடைபெற்ற பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுழாம்பள்ளம் கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்டசெயலாளர்
O.வரிசை முஹம்மது அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்…

நமது இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்

உமர் பின் கத்தாப் (ரலி): "உத்தம அரசியலின் அரிச்சுவடி"

{கட்டுரை சற்றே பெரிது, அவசியம் பொறுமையாக படித்து பார்க்கவும்.}

வரலாற்றின் தவறுகள் ஒரே மாதிரியானவை ஆட்களும் இடங்களுமே மாறுபடுகின்றன என "வார்த்தை சித்தர்" வலம்புரி ஜான் கூறுவார். இது, மற்றெவரையும் விட ஆட்சியாளர்களுக்கு சரியாகப்பொருந்தும்.

ரமழானை முடித்துவிட்டோம் இனி எங்கே?

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ரமழான்கள் வந்துவிட்டுப் போவது பருவகாலக் கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகவல்ல. தனது உள், வெளி வாழ்க்கையை இஸ்லாத்தினால் அழகுபடுத்தி வாழ நினைப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும், ஊட்டச்சத்தையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகவே.

இனிய ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

படைத்தவனையும் பசியில் இருப்பவனையும் நினைவில்கொள்ள பகலெல்லாம் நோன்பைநோற்று இரவு வணக்கத்தை இனிதே நிறைவேற்றி இன்ப(கியாமத்து நாள் ) நினைவுகள் மனதில் பூ பூக்க
இறைவா உன்பாதம் பணிந்தவனாக எங்கள் பாவங்களை மன்னித்து எங்களையும் நல்லோர் கூட்டத்தில் சேர்ப்பாயாக ...
இனிய ரமலான் சிறக்க எங்களுக்கும் அருள்புரிவாயாக ...
கோணுழாம்பள்ளம நண்பர்கள் கோணுழாம்பள்ளம் அயல்நாடுகளில்வாழும்
நண்பர்கள் இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்கள்
அனைவருக்கும் கோணுழாம்பள்ளம்POST மனமார்ந்த இனிய ஈகை-பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது