கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் பக்கவாதம்

உலகளாவிய நிலையில் பக்கவாத நோய்க்கு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். 65 வயது கடந்தவர்களையே பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதம் என்பது இன்றைய காலத்தில் பொதுவான ஒரு நோயாகிவிட்டது. பக்கவாதம் உடலின் எந்த பாகத்தை பாதிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நோயாளியும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்!

அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரஹீம் உட்பட 15 பேர் ஈடுபட்டு வரும் செய்தியோடு தொடர்புடைய சில விபரங்களை தமிழக மக்கள் அறிந்து கொண்டால், இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்.

ஆடுதுறை அஸ் – ஸலாம் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரியில் ஐம்பெரும்விழா!

உயர் நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

1. முதலாவது பட்டமளிப்பு விழா
2. கல்வி விழிப்புணர்வு மாநாடு
3. சமய நல்லிணக்க விழா
4. கல்லூரி விளையாட்டு விழா
5. கல்லூரி 5-ஆம் ஆண்டு விழா

அனைவரும் வாரீர்!

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலுள்ள ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை.


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 10 ஆண்டுளுக்கும் மேலாக நன்னடத்தையுடன் விளங்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்தார்.

இறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்..!

முதற்கண் ஒரு சிறு முன்னுரை.
ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ  நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.

சுகமும், துக்கமும்!

வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாகக் கழிக்கிறாள் 18 வயது நிரம்பிய அந்த இளம் பெண். நல்ல மார்க்க சூழ்நிலையில் அவளின் பெற்றோர்கள் அவளை வளர்த்தெடுத்தனர். அருமையான அண்டை அயலாருடன் அவளது வாழ்க்கை அமைதியாகக் கழிகிறது. கவலை என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு அவளை அவளின் பெற்றோர்கள் கண்ணே… பொன்னே… என்று கவனித்துக்கொண்டனர்.

பொது சிவில் சட்டம் வரவேண்டும் என்ற கருத்தை திணிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு திரும்பப் பெறப்பட வேண்டும்

கும்பகோணம், பிப்.24- ``இந்திய அரசியல் சாச னத்தில் 44-வது பிரிவில் கூறப்பட்டுள்ள இந்தியா முழுவதற்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு முயற் சிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நடைமுறைப் படுத்தக் கூடிய வகையில் சிறார் நீதிபரிபாலன சட்டம் அமைந்துள்ளது’

விழி : உங்கள் பார்வைக்கு!

சமூகத்தின் புற்று நோயாக மாறிக் கொண்டிருக்கும்  மது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விழி குறித்து வாசகர்களின் பார்வைக்காக...

அறிவுப் பெட்டகம் குர்ஆனைக் பெற்ற நாம் பின்தங்கி இருப்பதேன்?


 ‘நிலம் வெளுக்க நீர் உண்டு மக்கள் மனம் வெளுக்க குர் ஆன் வேதமுண்டு’  என்று நானிலம் போற்றும் வள்ளல் நபி அவர்களுக்கு அறிவூற்றினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சந்தததியர் கல்வி கேள்வியில் பின்தங்கியிருக்கலாமா?

 ‘சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்று பகன்ற கோமான் நபி பொன்மொழியினை புறக்கணித்து கண்ணிருந்தும் மூடர்களாக ஆகலாமா?

வக்ஃபு சட்டங்கள்-ஒரு பார்வை-1

[முஸ்லிம் சட்டம் என்பது இறைவனால் அருளப்பெற்ற விதிகளைக் கொண்டதாகும். எல்லாம் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைத் தருகிறான் என்றால், அதில் நிச்சயம் நமக்கு நன்மையே இருக்கும். தகுந்த காரணமும் இருக்கவே செய்யும். மனித மூளைக்குச் சில விஷயங்கள் எட்டவில்லை என்பதற்காக இறைச்சட்டங்களை நிராகரித்தல் கூடாது. இறைச்சட்டத்தை மாற்றவோ, திருத்தவோ,சேர்க்கவோ,குறைக்கவோ மனிதனுக்கு அதிகாரம் கிடையாது.]

இஸ்லாம், கிருஸ்தவ மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது!

இஸ்லாம், கிருஸ்துவத்திற்கு மதம் மாறும் தலித்துகளுக்கு இந்து தலித்துகளைப் போன்ற சலுகைகளை வழங்க மறுப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நாடாளுமன்ற மக்களவையில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., வாதிட்டார். நாடாளுமன்ற மக்களவை யில் நேற்று (பிப்.21) பகல் 3 மணிக்கு நேரமில்லா நேரத்தில் அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சியில் காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டிக்கிறோம் - தமிழக அரசே நடவடிக்கை எடு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட தினமான பிப் 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வரும் அன்றைய தினத்தில் கொடியேற்றுதல், ஒற்றுமை பேரணி, நலத்திட்ட உதவிகள், பொதுகூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றது.

இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.

நோயாளிகள் மருத்துவ நிதி உதவி ரூ 25,000/- பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு !

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பெரிய நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள மாநிலநோயாளர் நிதி உதவி அமைப்பின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

மாப்பிள்ளை கிளர்ச்சி!

வரலாற்று ஆய்வாளர்களால் கொச்சைப்படுத்தப்பட்ட கிளர்ச்சி மாப்பிள்ளை கிளர்ச்சி. தமிழகம் எங்கும் நாட்டுப்புறப்பாடல் ஒன்று இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அப்பாடல்,

"மலையாளக் கரைதனில் ரத்த ஆறு ஓட்டம், மாப்பிள்ளமார் செய்தது வீரமிக்க தியாகம்" என்கிற நாகூர் அனிபா பாடுகின்ற பாடலாகும்.

வீண் விரயமே… உனது மறுபெயர்தான் இன்டர்நெட் சாட்டிங்கா?

ஓலை உலகம் எப்போதோ ஓடிப் போய் விட்டது! புத்தக உலகம் இன்னும் சில வருடங்களில் புதைந்து விட காத்திருகின்றது. இதோ,  இப்போது இன்டர்நெட் உலகம், நம் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துக்கொண்டு – மன்னிக்கவும் அசுரத்தனமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது!

திருமணத்தை பதிவு செய்ய தேவையான முறைகள்..!

நம் ஊரில் தற்போது பல திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் பலர் அவர்களின் திருமணத்தை பதிவு செய்வது இல்லை. காரணம் விழிப்புணர்வு இல்லாமை. சிலர் அதான் பள்ளிவாசல் தப்தரில் பதிவு செய்து விட்டோமே, பிறகு எதற்கு மீண்டும் ஒரு பதிவு என்று வினவுவதும் உண்டு. நாம் திருமணத்தை பதிவு செய்யலாமா..? வேண்டாமா..? என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. நான் என்னுடைய தேவைக்காக திருமணத்தை பதிவு செய்ததின் அனுபவ கட்டுரையே இது.

யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு லாபம்?

ஒரு தீவிர ஹிந்து பக்தரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் இஸ்லாம் புகுந்துள்ளது.

அவருடைய இளையமகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுள்ளார். யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. இதுதான் இஸ்லாத்தின் சக்தி என்பது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை அல்லது விபத்தினால் ஏற்படும் மரணத்தின்போது அவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, நிரந்தர ஊனத்தால் பாதிக்கப்படும்போது நிதி அளித்தல் ஆகிய திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

வா ராஜா வா

நம்மில் சிலர் இஸ்லாத்தில் சேரும் நண்பர்களை " இஸ்லாத்திற்கு இவர்கள் வருவதால் இஸ்லாத்திற்கு எந்த ஆதாயமும் இல்லை " என்று பெரிய மேதாவித்தனத்தொடு சொல்வது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. நாம் நினைத்து ஒரு ஆளைக்கூட முஸ்லிமாக்க முடியாது... அல்லாஹ் நினைத்தாலே தவிர.

நீதித் துறையின் மாண்பு கேள்விக்குறியா?’’

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் தகுந்த நியாயம், நீதி கிடைக்க வேண்டுமா? நம் நாட்டு மக்களின் இறுதி நம்பிக்கையாக இருப்பது நீதிதுறைதான். அந்த நீதி துறையிலேயே அதர்மம் தலைதூக்கினால் தர்மத்தையும் நியாயத்தையும் நிலைநாட்ட நாம் எங்கே செல்வது? யாரிடத்தில் சொல்வது?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது மரணம்.

சென்னை, ஜன.3- இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில துணைத் தலைவரும், சமுதாயப் புரவ லரும், இலக்கிய ஆர்வலரும், பேச்சாளர், எழுத்தாளர், கவி ஞர், கொடை வள்ளல் என்ற பன்முகத்தன்மை கொண்ட வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது இன்று (03-02-2014) மரணமடைந் தார் என்பதை வருத்தத் துடன் அறியத் தருகிறோம்.