கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது மரணம்.

சென்னை, ஜன.3- இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில துணைத் தலைவரும், சமுதாயப் புரவ லரும், இலக்கிய ஆர்வலரும், பேச்சாளர், எழுத்தாளர், கவி ஞர், கொடை வள்ளல் என்ற பன்முகத்தன்மை கொண்ட வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது இன்று (03-02-2014) மரணமடைந் தார் என்பதை வருத்தத் துடன் அறியத் தருகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவரும், இஸ்லா மிய தமிழ் இலக்கியக் கழகத் தின் தலைவரும், சமுதாயப் புரவலருமான வடக்குகோட்டை யார் வ.மு. செய்யது அஹமது இன்று பகல் 1.30 மணிக்கு மரணமடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் கூத் தாநல்லூர் பெரிய தெருவைச் சேர்ந்த பாரம்பரிய மிக்க வடக் குகோட்டையார் முஹம்மது அப் துல்லாஹ்வின் புதல்வராக 1957-ல் பிறந்தார். வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக் கட்டளையின் அறங்காவலராக இருந்து அறப்பணிகளை செய்து வந்தவர். நபிகள் நாயகத்தின் மீது மிகப்பெரும் நேசரான இவர், அவர்களின் பிறந்த தின விழாக் களை ஒவ்வொரு ஆண்டும் ரபி வுல் அவ்வல் மாதத்தில் பன்னி ரெண்டு நாட்கள் மிகப் பெரிய அளவில் நடத்தி தலைசிறந்த பேச்சாளர்களை அழைத்து வந்து பேசச் செய்து பணி செய்து வந்தவர்.

இறைநேசச் செல்வர்களின் விழாக்கள், சமுதாய நிகழ்ச் சிகள், அறக்காரியங்கள், நூல் வெளியீடுகள் என இவர் செய்து வந்த தொண்டிற்கு ஈடு இணை யில்லை.

சிறந்த கவிஞரும், எழுத்தா ளருமான இவர் நல்ல இலக்கிய ஆர்வலர். இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவ ராக இருந்து இலக்கிய தொண் டாற்றி வந்தவர். விளம்பரத்தின் வெளிச்சமின்றி இவரால் வளர்க் கப்பட்ட இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஏராளம்.

சன்மார்க்கத்தைப் பரப்பு வது, சமய நல்லிணக்கத்தை வளர்ப்பது, ஏழை எளியோருக்கு சாதிமத வேறுபாடின்றி உதவு வது, தமிழ்த் தொண்டும், சமு தாயத் தொண்டும் ஆற்றுவது என்ற நன் நோக்கங்களை கொண்டு வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக் கட்டளை நிறுவப்பட்டது.

கட்டிடப் பராமரிப்பு துறை யின் முன்னோடியாக திகழ்ந்த இவர் சென்னையின் முக்கிய இடங்களில் பல வணிக வளா கங்களையும், குடியிருப்புகளை யும் உருவாக்கியவர்.

சிறந்த எழுத்தாளரான இவர் இஸ்லாமிய கலீபாக்களின் வர லாறு, நபிகள் நாயகத் தோழர் களின் வரலாறு, அரசியல் அறம், இனிய உறவில் இரு சமூகங் கள் போன்ற பல நூல்களையும், எண்ணற்ற கவிதைகளையும் எழுதிய பெருந்தகை.

காயிதெ மில்லத் மன்ஸிலில் உயிர் பிரிந்தது

முஸ்லிம் லீகின் மீது அளப்ப ரிய பற்றும், சேவையும் கொண் டிருந்த வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது இன்று பகல் 1 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை மையகமான சென்னை காயி தெமில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார்.

கண் அறுவை சிகிச்சை செய்து ஒருமாத ஓய்வுக்குப் பின் சென்னை திரும்பியுள்ள தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இன்று தலைமை நிலை யத்திற்கு வருகை தந்திருந்த மாநில, மாவட்டங்களின் நிர் வாகிகள், முன்னோடிகள் அனைவரையும் பார்த்து நலம் விசாரித்தார். நிர்வாகிகளிடம் அவர் உரை யாடிக் கொண்டிருந்தபோதே கடுமையான மாரடைப்பு ஏற்பட் டது. மருத்துவர்கள் விரைந்து வந்து முதலுதவி செய்தும் எந் தப் பயனும் அளிக்காமல் உயிர் பிரிந்து விட்டது.

அவரது ஜனாஸா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் வடக்குத் தெருவில் உள்ள 3/36 இலக்க வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய உறவினர் களுடன் கலந்து நல்லடக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

தலைவர்கள் நிலைகுலைந்தனர்

சற்று நேரத்திற்கு முன் கம் பீரமாக வருகை தந்து புன்னகை பூத்த முகத்தோடு நலம் விசா ரித்தவர் நம் கண் முன்னே வீழ்ந்து கிடக்கிறாரே என்பதை கண்ட இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், எம்.பி.,

மாநில துணைத் தலை வர்கள் சேலம் காதர் உசேன், லால்பேட்டை தளபதி மவ்லானா ஷபீகுர் ரஹ்மான், மாநிலச் செய லாளர்கள் காயல் மகபூப், திருப் பூர் எம்.ஏ. சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஜபருல்லாஹ், எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, அணிகளின் நிர்வாகி களான கே.எம். நிஜாமுதீன், வி.ஏ. செய்யது பட்டாணி, டி.கே. ஷாநவாஸ், கே.டி.கிஸர் முகம்மது, ஏம்பல் தஜமுல் முகம்மது, மாவட்டங்களின் நிர் வாகிகளான எம். ஜெய்னுல் ஆபி தீன், ஏ.எச். இஸ்மாயில், பூவை முஸ்தபா, ஹைதல் அலிகான், எம்.எஸ் அப்துல் வஹாப், வந்தவாசி பீர்முகம்மது, பெரியகுளம் நஸீர் உள் ளிட்ட அனைத்து நிர்வாகி களும் இச்சம்பவத்தால் நிலை குலைந்து போயினர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது அவர்களின் நற்சேவைகளை அங்கீகரித்து பிழைகளை பொறுத்து மேலான சுவனத்தை அளிப்பதற்கு அனைவரும் துஆ செய்யுமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் கேட்டுக் கொண் டுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

1 கருத்துகள்:

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ சொன்னது…

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத்தலைவரும் சமுதாய புரவலரும், கவிஞர், சமுதாயப் பாடகர், கூத்தாநல்லூர் வடக்குக் கோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளையின் அறங்காவலுருமான வடக்குக் கோட்டையார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய அல்ஹாஜ் வி.எம். செய்யது அஹமது அவர்கள் இன்று (திங்கள் 03.02.2014) காலை சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முஹ்யத்தீன் அவர்கள் கண் அறுவை சிகிச்சை முடிந்து இன்று காலை மாநில தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலுக்கு வருகை தந்தார்கள். தலைவர் அவர்களின் உடல் நலத்திற்கு அனைவரும் துஆ செய்தனர். தலைவர் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க தலைமையகம் வந்த வடக்குக்கோட்டையார் அவர்கள் தலைவரை சந்தித்து பேசி கொண்டு சோபாவில் இருந்தவாறே வஃபாத்தானார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், தாய்ச்சபை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (07.02.2014) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

நன்றி! வஸ்ஸலாம்.

அன்புடன்….

மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., – பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
——————————————————————————————————-
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.

Hotline : (+965) 97 87 24 82
Emails : q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Official Website : http://www.k-tic.com
Yahoo Group : http://groups.yahoo.com/group/K-Tic-group
Google Group : http://groups.google.com/group/q8tic
Facebook Page: https://www.facebook.com/q8tic
Facebook Group: https://www.facebook.com/groups/q8tic
Ustream (Live): http://www.ustream.tv/channel/ktic-live