கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.

இராமநாதபுரத்தில் பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க தினமான இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. பேரணி துவங்கும் நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசமிகள் கூட்டத்தின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதை காரணம் காட்டி கூட்டத்தினர் மீது மிக கொடூரமாக காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியதோடு தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறி வைத்தும் தாக்கியுள்ளனர். துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு காவல்துறையால் அரங்கேற்றப்பட்டதாகவே தெரிகிறது. கல்வீசிய விசமிகள் சிலரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவல்துறையின் வன்முறை வெறியாட்டமும், துப்பாக்கிச்சூடும் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் மிக அமைதியான முறையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மாத்திரம் காவல்துறையினரின் தாக்குதலும், அணுகுமுறையும் வேதனைக்குரியது.

நாடு முழுவதும் எத்தனையோ, ஊர்வலங்கள் பேரணிகள் நடைபெறும்போது, முஸ்லிம்கள் நடத்தும் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் காவல்துறையினரின் நடவவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் தமிழக அரசிற்கெதிராக முஸ்லிம்களை திருப்ப முயற்சி செய்திருப்பது, அரசுக்கு எதிரான காவல்துறையின் சதியா என்ற கோணத்தில் தமிழக அரசு சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மையினர் மீதான இந்த தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்காததோடு, வன்முறைக்கு காரணமான இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை ஆகியோரை உடனடி இடமாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: