கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அரசியல் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின் கவனத்திற்கு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்திருப்பெயரால்

நடைபெறயிருக்கின்ற    நாடாளுமன்ற   தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்…

எந்த வயதிலும் 10, +2 படிக்கலாம்

உளவியல், இந்தியக் கலாசாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேஷன்ஸ் இது போன்ற துறையில் 12ஆம் வகுப்புப் படிக்க வேண்டுமா? தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling) அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தவறியவர்களும்/பாதியில் விட்டவர்களும் இந்தப் பள்ளியில் இணைந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தைப் பயிலலாம்.

சக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா?

தமிழ்நாட்டில் சமுதாயத்தின் பெயரால் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,ஜமா அத்துகள் போன்றவை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அதிமுக,திமுக என ஏதேனும் ஒரு கட்சியுடன் சீட்டுக்காகவும்,பணத்துக்காகவும் கூட்டணி வைத்துக் கொண்டு தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை வானளாவ புகழ்வது வாடிக்கையாகிவிட்டது.

11 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப்பு தேர்வு: நாளைக்குள் ஹால் டிக்கெட் விநியோகம்

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.

கோடை காலத்தில் கூடவே வரும் நோய் தொல்லைகள்!

கோடைகாலம் வந்து விட்டாலே வியர்க்குரு, அம்மை நோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, சூட்டு கட்டி, அதி வியர்வை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். கோடைகால வெயில் ஒருபுறம், கோடை கால நோய்களின் வேதனை மறுபுறம். இவையனைத்தும் கோடைகால தொல்லை.

இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. 

“ஓநாய்கள்” (Wolves) – ஆவணப்பட விமர்சனம்

கற்பனைகளை காட்சியாக்குவதுதான் சினிமா. சற்றே மாறுபட்டு நிகழ்வுகளை, காட்சித் தொகுப்பாக்குவதை “ஆவணப்படம்” என்கிறோம்.

கோணுழாம்பள்ளத்தில் மயிலாடுதுறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி ஆதரவு கோரினார்.

கோணுழாம்பள்ளம் ஜமாத்தார்கள் &மனிதநேய மக்கள் கட்சி சந்திப்பு இன்று காலை நடைபெற்றது  இதில் வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். ஜமாத்தார்களிடம் ஆதரவு கோரப்பட்டது.

தொகுதி கண்ணோட்டம் : மயிலாடுதுறை.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், குத்தாலம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன.

பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.

உதவித் தொகையுடன் பட்டப் படிப்பு

பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளைத் தவிர்த்து கலை அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவ-மாணவிகளுக்கும் விருப்பமாக இருப்பது பி.எஸ்சி. கணிதப் படிப்பு. பிளஸ்-2 கணிதப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கே நாம் நினைக்கும் கல்லூரிகளில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர இடம் கிடைக்கும். முன்னணித் தனியார் கல்லூரிகளில் இதுதான் நிலை

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது.

இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி ஒரு பார்வை!

கும்பகோணம் மகாமகக்குளம், பூம்புகார் துறைமுகம் போன்ற வரலாற்று சின்னங்களும், பழைமையான கோவில்களும் நிறைந்த தொகுதி மயிலாடுதுறை.

கோணுழாம்பள்ளம் மேலத்தெரு M.பக்கீர் முஹம்மது அவர்கள் மறைவு.

                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மேலத்தெரு அப்துல்அலீம்,ஷேக்அலாவுதீன்,முஹம்மது ஐயூப்,அப்துல்நாசர் தகப்பனார் M.பக்கீர் முஹம்மது அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை(09.03.2014) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 3.00   .மணியளவில் நடைப்பெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ 3 இடங்களில் போட்டி! மாநில பொதுக்குழுவில் முடிவு!...

சென்னை: நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வடசென்னை, இராமநாதபுரம், நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது என சென்னையில் இன்று (08/03/2014) நடந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனோடு நமக்கு என்ன தொடர்பு?

திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். அதன் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளே நிரம்பியிருக்கின்றன. வானவர் கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இது அருளப்பட்டது.