கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கோணுழாம்பள்ளத்தில் மயிலாடுதுறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி ஆதரவு கோரினார்.

கோணுழாம்பள்ளம் ஜமாத்தார்கள் &மனிதநேய மக்கள் கட்சி சந்திப்பு இன்று காலை நடைபெற்றது  இதில் வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். ஜமாத்தார்களிடம் ஆதரவு கோரப்பட்டது.

ஜமாஅத் நிர்வாக சபை தலைமை நிர்வாகி ஜனாப் அப்துல் மாலிக் (அ.தி.மு.க) அவர்களும்,ஜனாப் ஜியாவுதீன் அவர்களும் மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள். ஜமாஅத் நிர்வாக சபை நிர்வாகிகள் அப்துல் காதர்(அ.தி.மு.க), பஜ்லுல்ஹக் (தி.மு.க), இமாம்அலி (த மு.மு.க) மற்றும் ஜமாத்தார்களும் பங்கேற்றனர்


குறிப்பு:அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள்  ஜமாத்தார்களை சந்திக்கும் போது அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் நெடுங்காலம் தொட்டு மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி வரவேற்கின்றோம்.

0 கருத்துகள்: