கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

காலையிலே பெட்ரோல் குடிங்க? சும்மாஎனர்ஜிக்கு!!

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு “பெட்ரோலாக” தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர். “பாஸ்ட்”டை (உண்ணாதிருத்தலை) “பிரேக்” (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.


காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில்,முழு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர்.

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபீஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.


உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.


பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். “கார்ன்பிளேக்ஸ்” போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கைகொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.


காலை உணவு சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராக இருக்கும். அதனால், “ஸ்லிம்”மை தொடர்ந்து பாதுகாத்து வரலாம். ஆனால், பலரும் காலை உணவை தவிர்த்தால் “ஸ்லிம்”மாக முடியும் என்று நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை தவிர்த்தால், மதிய வேளையில் அதிகமாக சாப்பிட தூண்டப்படுகிறது. அதனால் எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறியும் விடுகிறது. காலை உணவில், புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் தேவை. அப்படிப்பட்ட தானிய வகை உணவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் எரிசக்தியை வெளிப்படுத்தும் வைட்டமின் “பி” ஆன்டி ஆக்சிடென்டாக உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன.


காலை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம். அதற்கேற்ப, உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன. பாக்கெட், உணவு வகைகள், இப்போது கொழுப்பு நீக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம், சாப்பாடாகவும் காலை உணவை சாப்பிடலாம்.


காலை உணவில் பலவகை உண்டு. தானிய வகை சத்துக்களாக சமைத்து சிற்றுண்டியாக சாப்பிட்டாலும், முழு உணவாக சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் பயன்படுத்துவது கூடாது. அதனால், உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. முழு அளவில் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.


காலை உணவில் எல்லா சத்துக்களும் இருக்க வேண்டுமானால், தானிய வகை உணவு, பானங்கள், யோகர்ட், பால் உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் பழங்களையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு இன்னும் நல்லது. காலை உணவை சாப்பிட்டவுடன், ஓய்வு எடுப்பது தவறான பழக்கம். வேலைக்கு போகாத பெண்கள் என்றால், காலாற நடக்கலாம்; ஏதாவது வேலையில் இறங்கலாம். வேலைக்கு போவோராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், உட்கார்ந்தபடி பல மணி நேரம் ஒரே வேலையை செய்யக் கூடாது. உடலை இயக்கும் வண்ணம் அரை மணிக்கு ஒரு முறை நடக்க வேண்டும்; குறைந்தபட்சம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
காலையில பிச்சைக்காரன் சாப்பிடுகிற மாதிரியும்,பகல்ல நடுத்தர மக்கள் சாப்பிடுகிற மாதிரியும் இரவுக்கு டயாபடீஸ்காரங்க மாதிரியும் சாப்பிடனும்.

(பிச்சைக்காரன் எந்த உணவு கிடைத்தாலும்-ஒரு மொத்து மொத்துவான் அதே மாதிரி.,டயாபடீஸ்காரங்க சும்மா பேருக்குன்னு சொல்வாங்களே அந்த மாதிரி)
நன்றி:அன்போடுஉங்களை

இப்படித்தான் சாப்பிடணும் பழங்களை...!!!.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருள்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சாறெடுத்து சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை சாறு பிழிந்து சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகக் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை இது என்று வேர்க்கடலையைப் பற்றி கவிஞர் ஒருவர் பாடி வைத்தார். காந்தி தாத்தா தினம் கொறித்தது, கடலை என்பது மிகவும் பிரபல்யம்.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும். ஆச்சர்யமாக இருக்கிறதா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.

வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.

அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.

அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

உடல் பருமன் குறையும்.

இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், ''சாப்பிட்டது போதும்'' என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.

இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.

இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.

குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.

இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.

பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.

எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.

ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது.

அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா?ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.

ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.

கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.

எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

நன்றி: NIDUR.INFO

பாதங்களை பயமுறுத்தும் கால் ஆணி

பாதங்களை தாக்கும் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்பட காரணம்: பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை: கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.

பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
SOURCE:http://files.periyar.org.in/viduthalai/20090511/news26.html

பொன்னான நேரங்கள்-1

 ஜித்தாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையிலிருந்து
வீணாகும் காலங்கள்

வீணாகும் காலங்கள் என எனக்குத் தலைப்பு தரப்பட்டுள்ளது.
அப்படியானால் நமது பொன்னான நேரங்கள் மண்ணாகின்றன, வீணாகின்றன என்று தானே பொருள்படுகிறது.
நேரத்தின் விலையை, மதிப்பை மாண்பை வெகுமதியை, அது நிகழ்த்தும் அதிசயத்தை மக்கள் புரிந்து கொள்ளாததால் தான் நேரத்தை வீண்விரயம் செய்கின்றனர்.
அதன் ஆழமான பொருளை, அது வலியுறுத்தும் உண்மையை, அதை இழப்பதால் ஏற்படும் பேரழிவை, அதனால் விளையும் ஆபத்துகளை மக்கள் அவசியம் புரிந்து கொள்ளவேண்டும். மக்களைப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வித்தியாசமான தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது.
அதை நாம் இஸ்லாமியப் பார்வையில் அலசுவோம்.
நேரம் என்பதற்கு அரபியில் ‘வக்து’ (وقت) எனக் கூறப்படும்.எனவே விலைமதிக்க முடியாத நேரத்தின் தலைப்பை

الوقت في حيات المسلم

‘ஒரு முஸ்லிமின் வாழ்வில் நேரம்’ என வைத்துக் கொள்ளலாம்.
காலம் என்றால் என்ன?
ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியை காலம் எனக் கூறுகிறோம்.சூரியன் சந்திரனின் இயக்கத்தை வைத்தே காலம் கணிக்கப்படுகிறது. மனிதன் காலமின்றி வாழவே முடியாது. நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும், ஆண்டு தோறும் மீண்டு வரும் பெரும் பொழுதும் காலத்தின் அவசியத்தைக் காட்டுகிறதல்லவா?
1.காலத்தின் பார்வையிலிருந்து மனிதன் எதனையும் மறைத்து விடமுடியாது.
2.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர காலம் ஒரு போதும் அடங்கி நடக்காது.
3. காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எந்தப் பெருவீரனும்,பேரரசனும் றெ;றிருக்கவில்லை.
4.காலமும் கடல் அலையும் எவருக்காகவும் காத்து நிற்காது என்பார்கள்.
5.ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும், ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது என்பது சீனப் பழமொழி.
6.காலமென்பது ஓய்வற்றது. உலகின் உயிர் போன்றது.நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு. இவ்வாறெல்லாம் அறிஞர் பெருமக்கள் பலர் இயம்பியுள்ளனர்.
7. காலமகளின் பின்தலை வழுக்கையாக இருப்பதால் அவளின் முன் கூந்தலைப் பற்றிப்பிடித்துக்கொள்.
காலத்தின் அருமையயையும் நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும தெளிவு படுத்துகின்றன.
சிறு துள்ளி பெருவெள்ளமமாதல் போன்று பல மணித் துளிகள் ஒன்றிக் கலப்பதே காலமாகும். ஒரு நிமிட நேரம் அளவிற் சிறிதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்சிகள்,அதிசயங்கள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.
ஒரு நிமிஷம் தானே!
ஒரு நிமிஷம் தானே! கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களா? குடியா முழுகிப்போகும்?என்றெல்லாம் நம் நண்பர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுவதைப் பர்க்கிறோம்.பாருங்கள் ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்களை!
ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்கள்
1. ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத் தானே சுற்றிவிடுகின்றது.
2. பூமி தன்னைத்தானே சுற்றுவதில் நாம் நிமிடத்திற்கு 91,500 அடி நகர்ந்து போகிறோம்
3. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு நிமிடத்திற்கு 1110 மைல்கள் பிரயாணம் செய்கிறோம.
4. மனிதன் ஒரு நிமிடத்திற்கு 18 தடவைகள் சுவாசிக்கிறான்.
5. மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 72 தடவைகள் ஆகும்.
(ஒரு மணி நேரத்துக்கு 4320 தடவைகள் 24 மணிக்கு 10,3680 தடவைகள்.
ஆயுளில் 250 கோடி தடவைகள் துடிக்கின்றன. (4 நிமிட நேரம் இதயம்
இயங்காவிட்டால் மனிதனின் உயிரே போய்விடும்)
6. 1400 கன அடி மழை மாநிலத்தில் பொழிந்து விடுகின்றன.
7. 35000 தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றன.
8. 68 கார்கள் உற்பத்தியாகின்றன.
9. 4600 செருப்புகள் உற்பத்திச ;செய்யப்படுகின்றன.
10. 114 குழந்தைகள் பிறக்கின்றன.
11. 100 பேர் இறக்கின்றனர்.
12. 34 திருமணங்களும் 3 மணவிடுதலைகளும் நிகழ்கின்றன.
13. தேனீ ஒரு நிமிடத்தில் 13 பூக்களில் தேன் எடுக்கிறது.
14. 6000 விண்கற்கள் வீழுகின்றன.
15. அறுபது இலட்சம் சிகரெட்டுகள் பிடிக்கப்படுகின்றன.
16. 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்.
நாற்பதாண்டுகளுக்கு முன் (20.8.1966 ஆம் ஆண்டில்) ஒரு புள்ளி விவரக் கணக் கெடுத்து காலத்தின் அருமையினை உணர்த்தியுள்ளார் ஜெர்மானிய அறிஞர் ஒருவர்.
இன்று அதை பத்தாகப் பெருக்கிப் பர்க்க வேண்டும்.அப்போது தான் நேரத்தின் அருமை நமக்குப் புரியும்.
மனிதன் நேரத்தின் அருமையைஉணர்ந்து கொள்வதற்காகவே உலகில் எங்கு பார்த்தாலும் கடிகாரங்களைக் காண முடிகிறது.
எங்கும் கடிகாரங்கள்
கையிலே கடிகாரம்,
தெலைபேசியிலே கடிகாரம்,
கணிணியிலே கடிகாரம்,
வீடடுச்சுவர்களிலே கடிகாரம்,
வரவேற்பறையிலே கடிகாரம்
அலுவகத்திலே கடிகாரம்,
பள்ளிக்கூடத்திலே கடிகாரம்
வாகனத்திலே கடிகாரம்,
பேருந்திலே கடிகாரம்
விமானத்திலே கடிகாரம்,
ஊர் முகப்பிலே கடிகாரம்,
பூங்காக்களிலே கடிகாரம்,
காணும் பொருளிலெல்லாம் காலத்தை காட்டும் கடிகாரங்கள்.
பார்க்கும் பொருளிலெல்லாம் நம்மை உணர்த்தும் கடிகாரங்கள்!.
பேருந்து நிலையங்களிலும் இரயில்வே நிலையங்களிலும் விமான நிலையங்களிலும்அவ்வப்போது பயண அறிவிப்பு நேரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?காலத்தின் அருமையை யல்லவா காட்டுகின்றன.
இஸ்லாமியப் பார்வையில் நேரம்
இப்போது இஸ்லாமியப் பார்வையில் நேரம் என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நேரம் இறைவனின் மாபெரும் அருட்கொடை!
நேரம் என்பது இறைவனின் மிகப் பெரும் அருட்கொடையாகும். அந்த நேரத்தைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது (அதாவது குர்ஆனும்  ஸுன்னாவும் என்னகூறுகிறது)  என்பதைப் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதலாவது குர்ஆன் என்ன கூறுகிறது:-

وَسَخَّر لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآئِبَينَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ

சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து இயங்குமாறு அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.அவனே இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான் (14:33)

وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُوراً

சிந்திக்க விரும்புபவனுக்;கும், நன்றி செலுத்த விரும்புவனுக்கும் இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருமாறு அமைத்துள்ளான்;.(அல்புர்கான் 25:62)
வல்ல இறைவன், ‘இரவைப் பகலைத் தொடர்ந்து வருமாறும், பகலை இரவைத் தொடர்ந்து வருமாறும் ஒரு வினாடி கூட பிசகாது இயங்குமாறு செய்துள்ளான்.இந்த சுழற்சி நிகழ்ச்சியில் ஒருவினாடி கூட பிசகிவிட்டால் உலகமே நிலைகுலைந்துவிடும்.அதனால் தான் ஒவ்வொரு கோளங்களையும் ஒரு வட்டவரைக்குள் (எல்லைக்குள்) சுற்றிவருமாறு செய்துள்ளான்.

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

அவனே இரவையும் பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வாரு கோளங்களும் அதன் வட்டவரைக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. (21:33)
என்ற குர்ஆனின் அறிவியற் செய்தி உலகையே வயப்பிலாழ்த்துகிறது.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْراً فِي كِتَابِ اللّهِ

மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். (9:36)
அதற்கான கால வரையை அறிவதற்கு சூரியனையும் சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான. இரவை இருளாக்கி சுகம் பெறவும், பகலைப் பிரகாசமாக்கி அவனது அருட்கொடைகளைத் தேடவும் அல்லாஹ் காலத்தை வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வாறு அல்லாஹ் வழங்கிய காலம் மனித குலத்திற் கோர் அருட்கொடையாகும்.
காலத்தைக் குறித்து வரும் வசனங்கள் 18
நேரத்தின் முக்கியத்தைக் கருதியே குர்ஆனில் காலத்தின் மீது ஆணையிட்டுப் பல வசனங்கள் வருகின்றன. குர்ஆனில் ஆணையிட்டு வரும் மொத்தம் வசனங்கள் 92 ஆகும். இவற்றில் 18 வசனங்கள் காலத்தின் மீது ஆணையிட்டே வருகின்றன.
உதாரணமாக:-

وَاللَّيْلِ إِذَا يَغْشَى، وَالنَّهَارِ إِذَا تَجَلَّى

وَالْفَجْرِ ، وَلَيَالٍ عَشْرٍ

وَالضُّحَى، وَاللَّيْلِ إِذَا سَجَى

وَالْعَصْرِ، إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ

92:1-2, 89:1-2,93:1-2, 103:1-2 ஆகிய வசனங்களில் இரவின் மீது ஆணையாக! பகலின் மீது ஆணையாக, விடியற்காலையின் மீது ஆணையாக, முற்பகல் மீது ஆணையாக, மாலைவேளை மீது ஆணையாக என்று சத்தியமிட்டுக் கூறுகிறான் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை தனது அடியார்களுக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்.
காலத்தைப்பற்றி இறை தூதர் (ஸல்) கூறியது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விலைமதிக்க முடியாத நேரத்தின் மாண்பையும், அதன் முக்கியத்துவத்தையும் குறித்து எடுத்துரைக்கிறார்கள்.
கியாமத் என்னும் விசாரணை நாளிலே இறைவன் மிக முக்கியமானதாக அதுவும் முதன்மையாகக் கேட்கப்படும் நான்கு கேள்விகளிலே தலையாயதாக ‘நேரத்தைப் பற்றியே இரு கேள்விகள் அமைந்திருக்கும்’ என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்படடிருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

عن معاذ بن جبل أن النبي صلعم قال

لن تزول قدما عبد يوم القيامة حتي يسأل عن أربع خصال عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين إكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل به ( رواه البزار والطبراني باسناد صحيح واللفظ له)

மறுமை நாளில் நான்கு கேள்விகள்
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படாமல் ஒரு அடியானின் பாதங்கள் நகரவே செய்யாது.
1.அவனது வாழ்நாளை எப்படிச் கழித்தான்?
2.அவனது இளமையை எவ்வாறு செலவிட்டான்?
3.அவனது செல்வத்தை எப்படி திரட்டடினான் (சம்பாதித்தான்) ?
அதை எவ்வாறு செலவு செய்தான் ? என்றும் நேட்கப்படும்.
4.அவனது கல்வி கற்றதன் மூலம்; எவ்வாறு செயலாற்றினான்.?
(ஆதாரம் பஸ்ஸார், தப்ரானி)
ஆயுளை பொதுவாகக் கூறிய நபிகளார்(ஸல்) வாலிபத்தை குறிப்பாகக் குறிப்பிடக் காரணம் என்ன?
ஆயுளிலே உட்பட்டது தானே வாலிபம். அதற்குத் தனி முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்யப்படுவதன் நோக்கம்; என்ன ? ஒரு மனிதனின் ஆயுளில் அவனது வாலிபப் பருவமே மிகவும் முக்கியானது.அதில்தான் அவன் தீரத்தோடும் விவேகத் தோடும் செயல்படுகிறான்.அதுவே அவனது பொற்காலம்.சாதிக்க வேண்டிய வயது. குழந்தைப் பருவமும்; முதுமைப்பருவமும் பலவீனமான பருவங்கள். இந்த இரு பலவீனமான பருவத்திற்கிடையே வந்து போகும் திடமான பருவமே இளமைப் பருவம். எனவே, குறிப்பாக வாலிபப்பருவம் பற்றி வசாரணை செய்யப்படும் என்றார்கள் நபியவர்கள்.
வாலிபப் பருவம் பற்றி இறைமறை
வலிமைமிக்க வாலிபம் பற்றி இறைவன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفاً وَشَيْبَةً

பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான்.பின்னர் பலவீனத்திற்குப்பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் நரையையும் ஏற்படுத்தினான். (அவன் நாடியதைப்  படைப்பான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்). (அர்ரூம் 30:54)
பலவீனமான நிலையென்றால் குழந்தைப்பருவம் என்றும் பலவீனத்திற்குப்பின் பலம் என்றால் வாலிபப்பருவம் என்றும் மீண்டும் பலத்திற்குப் பின் பலவீனம் என்றால் முதுமை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்தே திடமான இளமப் பருவமே செயலாற்றவேண்டிய காலம் எனத்தெரிகிறது.வலிமையுள்ள காலத்தை நாம் வீண்விரயம் செய்து விடக்கூடாது.
இஸ்லாமிய வணக்கங்கள்
அடுத்து இஸ்லாமிய வணக்கமுறைகளும் நேரத்தின் மதிப்பையும் முக்கியத்து வத்தையும் வலியுறுத்துவதைப்; பாருங்கள்.
பர்ளான வணக்கங்களும், இதர கடமைகளும்; விலைமதிக்க முடியாத நேரத்தை ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் மனிதனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
உலகின் இயக்கம், அண்டஙகளின் சுழற்;சி,சூரிய சந்திரனின் ஓட்டங்கள், அதன் மூலம் இரவு பகல் மாறி மாறி ஓயாமல்; வந்து கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் கால ஓட்டத்தை உணர்த்தி மனிதன் சீராக இயங்கவேண்டு மென்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
ஃபஜ்ருத் தொழுகை
ஒவ்வொரு நாளும் இரவுப் பொழுது மறைந்து அதிகாலைப் பொழுது மலர்ந்தும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்ற பாங்கொலி முழக்கம் தூங்கிக் கொண்டிருப்போரை எழுப்பி விடுகிறது. உணர்வர்வற்ற மனிதனை உசுப்பி விடுகிறது. ‘மனிதா! இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய். தூங்கும் நேரம் முடிந்து விட்டது. எழுந்து செயலாற்றும் நேரம் வந்து விட்டது என முழங்குகிறது.
உலகெலாம ஒலிக்கும் அந்த முழக்கத்தை கேளுங்கள்.

حي علي الصلاة – حي علي الصلاة

அல்லாஹ்வைத் தொழ ஓடி வாருங்கள்!

حي علي الفلاح حي علي الفلاح

வெற்றியிச் சிகரத்தை நோக்கி பீடு நடை போட வாருங்கள்!

الصلاة خير من النوم

தூக்கத்தை விட தொழுகை மேலானது.
அப்பப்பா! எப்படிப்பட்ட வார்த்தைகள்! உயிரோட்ட முள்ள சொற்கள், எந்த மதமும் அழைக்காத ஒலி முழக்கங்கள். ஒரு நாளா இருநாட்களா? நாள் தோறும் முழக்கங்கள்! வரரந்தோறும் முழக்கங்கள்! மதந்தோறும் முழக்கங்கள!
ஆண்டு முழுவதும் சதா ஒலித்துக் கொண்டே  இருக்கிறது.  இதைக் கேட்ட பின்னருமா நம் மக்களுக்கு அதிகாலையில் தூக்கம் வருகிறது?
கல்லையும் கனியச் செய்யும் அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும்  இறைவனை நினைந்துருகும் இதயங்கள் நன்றிப் பெருக்கால் அந்த அழைப்பிற்கு பதில் கூறிக் கொண்டே உளுச் செய்துவிட்டு தொழுகைக்கு விரைந்து வருகின்றனர். தாலாட்டும் சைத்தானின் மாய வலையில் விழாது ஓடோடி வரும் காட்சிகள் இறைவனைப் பரவசப்படுத்துகின்றன.
அது மட்டுமா இரவில் சீக்கிரமே தூங்கி அதிகாலையில் எழுந்திருப்போருக்கு இறைவனின் பேரருள் கிடைக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

اللهم بارك لامتي في بكورها (رواه أحمد، وحاكم

இறைவா! என் சமுதாய மக்களுக்கு அதிகலை வேளையில் அருள் பொழிவாயாக! (ஆதாரம்: அஹ்மத், ஹாக்கிம்)
லுஹர் தொழுகை
அடுத்து  பகல் வேளையிலே வேலையில் மழுமூச்சுடன் முனைப்பாக ஈடுபட்டிருக்கும் மனிதன்நோக்கி மீண்டும் அதே பாங்கோசைகள்!

الله أكبر الله أكبر

பணம் தேடும் ஆசையில் படைத்தோனை மறந்து விடாதே! ‘மனிதா! இதுவரை ஊக்கத்தோடு உழைப்பதற்கு வாய்ப்பளித்த வல்லோனை வணங்கிட மீண்டும் ஓடிவா! உணவளித்துக் காக்கும் வல்லானின் முன் நின்று உன் தேவைகளை முறையிட வா! மறுஉலக வெற்றியை நோக்கிவா! என்ற லுஹர் நேர அழைப்பு! இது இரண்டாவது அழைப்பு!
அஸ்ர் தொழுகை
வேலையிலிருந்து வீடு திரும்பியதும் ஓய்ந்து விடாதே! உடல் வலிமையோடு பகலெல்லாம் உழைப்பதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு மீண்டும் நன்றி செலுத்த (அஸர்) மாலை நேரத் தொழுகையை நோக்கி வா! இது மூன்றாவது அழைப்பொலி!
மஃரிப் தொழுகை
பகல் நேரம் முடிந்து இரவின் துவக்கம்! மஃரிப் என்னும் அந்தி நேரம் வந்து விட்டது. அமைதியைத் தரும் அந்த நேரத்திலும் அல்லாஹ் வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பதற்காக மீண்டும் நான்காவது அழைப்பொலி !
இஷாத் தொழுகை
இறுதியாக உறங்கச் செல்லு முன் இரவின் இருளிலும் இறைவனை மறவாது ‘பகற் பொழுதை வெற்றிகரமாக கழித்ததற்கு நன்றி செலுத்தும் முகமாக கடைசிநேர பாங்கோசை!’ இது ஐந்தாவது அழைப்பொலி! இறை நினைவிலே வாழும் அடியான் கடைசி நேரத் தொழுகையை தொழுது விட்டு உறங்கச் செல்லுகிறான்.
ஒரு நாள் பொழுதை, அதிகாலைத் தொழுகையோடு துவங்கி இரவுத்தொழுகையோடு முடிக்கும் மனிதன் நாள் முழுவதும் ஐவேளை இறைவனை மறக்காது நன்றிப் பெருக்கோடு துதிக்கிறான். ஒவ்வொரு வேளையும் அவன் முன் நின்று,
இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம். நீயே ரப்புல் ஆலமீன்.அகிலத்தின் அதிபதி! நீயே மாலிக்கி யவ்முத்தீன்! நியாயத்தீர்ப்பு நாளின் பேரரசன்!

إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلّهِ رَبِّ الْعَالَمِينَ

இன்ன ஸலாத்தீ வநுஸ்கீ வமஹ்யாய வமமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன் ….(6:162) எனது வணக்கம், தியாகம்,வாழ்வு, மரணம் யாவும் உனக்காகவே உள்ளது என உறுதி மொழி எடுத்துக் கொண்டு அந்த நாயனுக்கு மாறு செய்ய  எப்படி மனம் துணியும்? பாவம் செய்ய எப்படி மனம் வரும்? விலை மதிக்கமுடியாத நேரங்களை வீணாக்குவதற்கு எப்படி அவன் மனம் துணிகிறது?
இறை உணர்வுகளோடு செயலாற்றும் அடியானின் பொன்னான நேரங்கள் நன்மையான காரியங்களில் பதிவு செய்யப்படுகின்றன். அவன் மனிதப் புனிதனாக வாழ்கிறான்.
ஜும்ஆத் தொழுகை
அடுத்து வாரந்தோறும் மக்கள் ஒன்று கூடும் சிறப்புத் தொழுகையான ஜும்மாத் தொழுகையை நிறைவேற்றுதற்கு வார அழைப்பு! பல சிறப்பு அம்சங்களோடு இத் தொழுகை நிறை வேற்றப்படுகிறது.இந்த நாளும் இறைவனின் பேரருளைப் பெறுவதற்கு ஒரு பென்னான வாய்ப்பை வழங்குகிறது. இதுவும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் மகத்தான பாக்கியமாகும்.
பர்ளான நபிலான வணக்கங்கள்.
இவை போதாதென்று இரவு வேளைகளில் தனித்திருந்து அமைதியாக இறைவனை வணங்கி வழிபட்டு,அவனோடு உரையாடவும் ஸலாத்துல்லைல் போன்ற இரவுத் தொழுகைகளை தொழுது அல்லாஹ்வின் நினைவுகளிலே தோய்ந்து அவனது அருளைப்; பெறும் மகத்தான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
இறைவனின் நல்லடியார்கள் அந்த பொன்னான வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. இது குறித்து இறைவன், அருள் மறை குர்ஆனில்

وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّداً وَقِيَاماً

(அந்த நடுநிசி வேளைகளில்) இறைவனின் நல்லடியார்கள் நின்றவர்களாகவும், பணிந்து (ஸுஜூது) சிரம் தாழ்த்தியவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள் (25:64) எனக்கூறிச் சிறப்பிக்கிறான்.
இவை போன்று இரவிலும் பகலிலும் அல்லாஹ்வின் நல்டியார்கள் அல்லாஹ்வின் அருளைத்தேடுவதற்கு ளுஹா,தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற நஃபிலான பல வணக்கங்களும் உள்ளன.
இவையெல்லாம் மனிதனை புனிதனாக்கும் சிறப்பு வணக்கங்களாகும். மனிதன் எந்தச் சூழலிலும் அவனது பொன்னான நேரங்களை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் ஒவ்வொரு சந்தர்பத்திலும் நேரத்தை பயனோடு செலவிடுவதற்கு அவனை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
புதுப்பிறையால் புத்தணர்வு.
மாதம் பிறந்து விட்டால் புதுப்பிறை தோன்றுகிறது.அப்போது ஒரு முஸ்லிம் மகிழ்ச்சிப் பெருக்கால் விண்ணை நோக்கி அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறியவனாக அந்த பிறையை நோக்கி “அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று கூறி சந்திரனைப் படைத்து பல நிலைகளாக அமைத்து அதை அல்லாஹ்வின் அத்தாட்சியாக ஆக்கியமைத்ததற்காக நன்றி கூறி,

الله أكبر ألله أكبر الحمد لله الذي خلقك، وقدرك منازل ، وجعلك آية للعالمين . أللهم أهله علينا بالأمن والايمان
والسلآم والاسلآم والتوفيق بما تحب وترضي ، هلال خير ورشد ربي وربك الله

இறைவா! இந்த பிறை தோன்றிய இம்மாதத்தை ஈமானோடும், அமைதியோடும், இஸ்லாமிய நெறிகளோடும், இறைவன் விரும்பும் அருளோடும், நன்மை பயக்கும் நேர்வழியோடும் எங்களை வாழச் செய்வாயாக! என்னுடையவும், உன்னுடையவும் நாயன் அல்லாஹ் வாகும். என்று இறைவனிடம் பிரார்த்தித்து புத்துணர்வு பெறுகிறான். (திர்மிதி, அறிவிப்பவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)

5094 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم-

كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ « هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ آمَنْتُ بِالَّذِى خَلَقَكَ ». ثَلاَثَ مَرَّاتٍ. ثُمَّ يَقُولُ « الْحَمْدُ لِلَّهِ الَّذِى ذَهَبَ بِشَهْرِ كَذَا وَجَاءَ بِشَهْرِ كَذَا

நன்மையை வழங்கி நேர்வழியைக் காட்டும் பிறையே! என்று மூன்று முறைகள் கூறிவிட்டு, உன்மைப்படைத்த நாயனை ஈமான் கொண்டேன் என்று சொல்லியவர்களாக சென்ற மாதத்தை போக்கி (அந்த மாதத்தைக் குறிப்பிட்டு) புது மாதத்தை வழங்கிய நாயனுக்கே புகழ் யாவும் என்று கூறுவார்கள்.(ஸுனனு அபூ தாவூது)
ஒரு மாதம் பிறந்ததும் அதை எவ்வாறு வரவேற்றுச் சிறப்பிக்க வேண்டும், எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைக் கற்றுத் தரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான்.
ரமளானின் வருகை
ஆண்டு தோறும் ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன.; ஷைத்தன்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அப்போது இறைவனின் அமரர்கள் கீழ்வானத்திற்கு இறங்கி வந்து

يا باغي الخير أقبل ! وياباغي الشر أقصر

நன்மை தேடுவோரே! முன்னோக்கி வா ! தீமையைத் தேடுவோரே! பின்னோக்கிச் செல்!. என்று கூறி நம்மை புத்தார்வத்தோடும் எழுச்சியோடும் இயங்கவேண்டும் என வாழ்த்துவார்கள்.
(அக்பில் : முன்னோக்கு.அக்ஸிர்: (அத்பிர்)- பின்னோக்கு)
ஹஜ்ஜுடைய காலம்
அடுத்து ரமளான் முடிந்ததும் ஹஜ்ஜுடைய காலம் வருகிறது. உலகோர் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே உடையில் ஒரே குரலில் விண்ணதிர தல்பியா கூறியவர்களாக வந்து நிற்பார்கள்.

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். (2:197) என ஹஜ்ஜின் காலத்தைக் குறிப்பிட்டுவிட்டு அதில் கடைபிடிக்கவேண்டிய விதிகளையும் கூறிவிட்டு அதையடுத்து அல்லாஹ’ கூறுகிறான்:

وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى

நீங்கள் செய்யும் நன்மையான காரியங்கள் யாவற்றையும் அல்லாஹ் அறிகிறான். ஹஜ்ஜிலே நல்லமல்களை திரட்டிக் கொண்டு, கிடைத்தற்கரிய இந்த அரிய வாய்ப்பை மகத்தானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். (2:197)
இவ்வாறே ஆண்டு தோறும் ஏழை எளியவர்களுக்காக வழங்கும் ஸகாத் ஏழை வரியையும் முறையாக வினியோகிக்க வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
அறிஞர் பெருமக்களில் சிலர் இந்த வணக்கங்களின் தத்துவத்தைக் குறிப்பிடும் போது
1. ஐவேளைத் தொழுகையை   ஒருநாள் திட்டம்   ميزان اليوم
(One day Programe) என்றும்

2. ஜும்ஆ தொழுகையை ميزان الأسبوع ஒரு வாரத்திட்டம் (One week Programe ) என்றும
3. ரமளான் மாதத்தையும், ஸகாத் கடமையையும்
ميزان العام ஓராண்டுத் திட்டம் ( One year Programe) என்றும்,
4. ஹஜ்ஜுக் கடமையை ميزان العمر ஆயுள் திட்டம் ( Life Programe) என்றும்வகைப்படுத்தி இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
ஒரு நாள் வணக்கம் என்றும்
வாராந்தோறும் நிறைவேற்றும் வணக்கம் என்றும்
ஆண்டிற்கொரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
ஆயுளிலே ஒரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
இவ்வாறாக அல்லாஹ்வுக்காக திட்டமிட்டு அதற்குரிய காலங்களில் நிறைவேற்ற வேண்டிய வணக்கங்கள் உள்ளன.அதை ஏனோ தானோ என்றில்லாமல் இது தான் நமது கடைசி வணக்கமாக இருக்கும் என்ற உணர்வோடு செயலாற்ற வேண்டும் என்பதை மனித சமுதாயத்திற்கு எவ்வாறெல்லாம் இஸ்லாம் உணர்த்துகிறது பார்த்தீர்களா? இவ்வாறு மனித குலம் மாண்பு பெறவேண்டுமென அல்லாஹ் மகத்தான பல சந்தர்பங்களையும் நேரங்களையும் நமக்குத்தந்து ஊக்குவிக்கிறான்.
பொருள் பொதிந்த வணக்கங்கள்! இறையருளையும் சுவர்க்கத்தையும்
பெற்றுத்தரும் அரிய இபாதத்துகள்! வாய்ப்புகள்!! இதனை கண் இமை போல் பேணிக் காத்து வாருங்கள்.
நன்றி;அல்பாக்கவி.காம்

பொன்னான நேரங்கள்-2

ஒரு மனிதனின் சராசரி ஆயுள்
ஒரு மனிதனின் சராசரி ஆயுளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது கூறினார்கள்.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عُمُرُ أُمَّتِى مِنْ سِتِّينَ سَنَةً إِلَى سَبْعِينَ سَنَةً

எனது சமுதாயத்தவரின் ஆயுள் காலம் அறுபதிலிருந்து எழுபது வரையாகும் ( அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி-2501)
இன்று நமது ஆயுளில் இறைவணக்கத்திற்கு நாம் செலவிடும் காலம் எவ்வளவு? ஒரு ஆய்வுக்கணக்கு கூறுவதைக் கேளுங்கள்.
நாம் உலகில் 70 ஆண்டுகள் வாழ்வதாக இருந்தால் நாம் எவ்வாறெல்லாம் வாழ்வோம் என்பதற்கு ஆய்வு தரும் தகவலைப் பாருங்கள்:-
1. தூங்குவதற்கு 24 ஆண்டுகள் ,
2. உழைப்பதற்கு 14 ஆண்டுகள்,
3. பொழுது போக்கிற்கு 8 ஆண்டுகள்
4. சாப்பிடுவதற்கு 6  ஆண்டுகள்,
5. போக்குவரத்திற்கு 5 ஆண்டுகள்’
6. பேசுவதற்கு 4 ஆண்டுகள்,
7. கல்விக்கு 3 ஆண்டுகள்,
8. படிப்பதற்கு 3  ஆண்டுகள் ,
9. தொலைக்காட்சிக்கு 3 ஆண்டுகள்
என நமது 70 ஆண்டு கால வாழ்வே முடிந்து விடுகிறது.
நாம் தினந்தோறும் ஐவேளை அல்லாஹ்வை தொழுவதாக இருந்தால் நமது 70 ஆண்டு கால ஆயுளில் (அதாவது 25,550 நாட்களில்) ஐந்து மாதங்கள் (0.59%) மட்டுமே செலவாகும்.
நமது  வாழ்நாளில் நம்மைப்படைத்த நாயனை வணங்குவதற்காக ஒரு 5 மாதங்களைக் கூட  ஒதுக்க முடியாதா என்ன? என்று கேட்கிறது அந்த ஆய்வு.
நமது  மார்க்கத்தில் எத்தனையோ கடமைகள் உள்ளன. அவற்றில் தலையாயது இந்த ஐங்காலத் தொழுகைகள். இதைக் கூட நிறை வேற்றாமல் நம்மில் எத்தனையோ பேர் அலட்சியமாக இருந்து வருகின்றனர். தொழுவோரில் கூட உரிய வேளையில் தொழாது காலம் கடந்து நினைத்த நேரங்களிலெல்லாம் கடமை மறந்து தொழும் உணர்வினைக் காணுகிறோம்.
தொழாமல் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்த நமது முஸ்லிம் சகோதரர்களைப் பார்த்து, சமீபத்தில் இஸலாத்தைத் தழுவிய டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் ” இந்த தொழுகையை  விட இவர்களுக்கு என்ன முக்கிய வேலை இருக்கிறது? இவர்களெல்லாம் இறைவனுக்கு நன்றியுணர்வுமிக்க அடியார்களாக இருக்கவேண்டாமா ? எனக் கேட்டது  நம்மை வெட்கித் தலைகுனி யுமாறு செய்கிறது.
தொழுகைக்கு நாம் செலவிடும் நேரத்தைப் போல், கூட்டிக் கழித்துப் பார்த்தால் நன்மையான காரியங்களுக்கு நாம் செலவிடும் நேரங்களும்  மிகமிகவும் குறைவானதாகவே உள்ளது.சொந்த தேவைகளுக்கும், பொருளைத் தேடுவதற்கும் இராப்பகலாக உண்ணாது உறங்காது அயராது பாடுபடும் மனிதன் தன்னைப் படைத்த நாயனுக்காக சிறிது நேரத்தைக்கூட ஒதுக்கக் கூடாதா?
நேரத்திற்கு உவமை.
ஒரு முறை 950 ஆண்டுகள் வாழ்ந்த இறைதூதர் நூஹ் நபியிடம் (மரணத்தூதர்) உயிரைக் கைப்பற்ற வந்த வானவர்

يا أطول الأنبياء عمرا ،  كيف وجدت الدنيا؟

நபிமார்களில் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த இறைதூதரே! உலகம் எப்படி இருந்தது என்று கேட்டபோது

كدار، لها بابان دخلت من أحدهما ، وخرجت من الآخر

“உலகம் ஒரு வீட்டைப் போன்றது. அதற்கு இரு வாசல்கள் உள்ளன. ஒரு வாசல் வழியாக உள்ளே சென்று மறு வாசல் வழியாக வெளியேறுகிறேன்” என்றார்கள்.
இறுதிநாளில் விசாரணைக்கு வரும்போது இவ்வுலகின் கால அளவை மிகவும் அற்ப நேரமாகவே கருதுவார்கள் என்பதை அல்லாஹ் கூறுவதைக்  கேளுங்ள்.

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا

அதை அவர்கள் காணும்போது ஒரு மாலைப் பொழுதிலோ, ஒரு காலைப் பொழுதிலோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும் (79:46)

وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُواْ إِلاَّ سَاعَةً مِّنَ النَّهَار يَتَعَارَفُونَ بَيْنَهُمِْ

அவர்களை அவன் எழுப்பும் நாளில் பகலில் சொற்ப நேரமே தங்கியிருந்தது போல்அவர்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள். (அவ்வாறு அவர்களுக்கத் தோன்றும்) 10:45

أن ما مضي لا يعود ، ولا يعوض

சென்று போன நேரம் திரும்பி வரவே செய்யாது.அதற்கு வேறு மாற்று பரிகாரமும் கிடையாது.
இன்று 2010 ஏப்ரல் 15 நேரம் 800 இரவு. இந்த நேரம் திரும்பி வருமா ?
நான்கு பொருட்கள் திரும்பி வராது.
1. சென்று போன வாழ்நாள்
2. சென்று போன நேரம்
3. வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள்
4. எய்யப்பட்ட அம்பு. என்றார் ஓர் அறிஞர்.
ஃபஜ்ரின் அழைப்பு
அறிஞர் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறும் செய்தி சிந்தனைக்குரியதாகும்.
ஓவ்வொரு நாளும் பொழுது விடியும் போது ஃபஜ்ரு ( விடியற்காலை ) மனிதனைப் பர்த்துக கூறும்
ஆதமின் மகனே! நான் புதிதாகப் பிறந்த ஒரு நாள். உனது ஒவ்வொரு செயலையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னை சரிகாகப் பயன் படுத்திக் கொள்வாயாக! நான் உன்னைவிட்டும் சென்று விட்டால் மீண்டும் கியாமத்-இறுதி நாள் வரை திரும்பி வரவே மாட்டேன் என்று.
சந்தர்ப்பம் ஓடிவிடுவதற்கோர் உவமை
கிரேக்க நாட்டுச்  சிற்பி ஒருவன் மனிதனிடம் வந்து போகும் சந்தர்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். அது தான் (Statue of opportunity) சந்தர்ப்பம் என்னும் சிலை.

அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.
உனக்கு இறக்கை எதற்கு ?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!
முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப்பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!
ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்பத்தைப் பயனபடுத்தாதோரிடமிருந்து கணநேரத்தில்      பறந்தோடி விடுவதற்காக!
பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?.
சந்தர்பத்தை தவறவிட்டவர்கள் என்னைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாருப்பதற்காக!
சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள்.இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.
ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால் அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-« نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ »

(திர்மிதி 2473 , புகாரி 6412 பைஹகீ 6760,இப்னு மாஜா 4309)

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

« إِنَّ الصِّحَّةَ وَالْفَرَاغَ نِعْمَتَانِ مِنْ نِعَمِ اللَّهِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاس ،

(முஸ்னத் அஹ்மத் 2381, அத்தாரமீ 2763)
மக்களில் பெரும்பாலோர் இரு பெரும் அருட்கொடைகளில் அலட்சியமாக உள்ளனர்.ஒன்று ஆரோக்கியம், மற்றொன்று ஓய்வு நேரம்.
உடல் நலத்தோடிருக்கும் மனிதன் தனக்குக் கிடைக்கும் பொன்னான நேரங்களை எவ்வாறெல்லாம் வீண் விரயம் செய்கிறான் பாருங்கள்.
வீணாகும் நேரங்கள்!
வெட்டிப் பேச்சிலே நேரம் வீணாகிறது.  
அரட்டையிலே நேரம் வீணாகிறது.  
சின்னத்திரையிலே நேரம் வீணாகிறது.  
இனடர்நெட்டிலே நெரம் வீணாகிறத.
வேலை முடிந்து வந்ததும் சிலர் தூக்கத்திலே கழிப்பார்கள். மற்றும் சிலர் கடைத் தெருவை சுற்றி வருவர்கள்.வேறு சிலர் ஷாப்பிங் என்று வெளியே கிளம்பி விடுவார்கள். இன்னும் சிலர் பூங்கா கடற்கரை என உலா வருவார்கள். இவற்றுள் பயன் கருதிச் செல்வோர் மிகச் சிலரே! பலரும் பொழுதை பயன்படுத்தற்காக அல்ல, பொழுதைப் போக்கு வதற்காக கிளம்பி விடுகன்றனர். இறுதியில் பஜ்ருத் தொழுகையை கூட கோட்டை விட்டுவிடுவார்கள்.நம்மில் எத்தனை பேர் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது வருகிறார்கள்?
நம் சகோதரிகள் பெரும் பகுதி நேரத்தைத் தொலைக் காட்சியிலோ, தூக்கத்திலோ தொலைத்து விடுவார்கள். இவ்வாறு தொலைத்து விடும் நேரங்கள் மீண்டும் திரும்பி வருமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
கடந்த காலம் செல்லாத காசோலை (கரன்ஸி நோட்டு) எதிர்காலம் வாக்குறுதிச் சீட்டு. நிகழ் காலம் நம் கையிலுள்ள ரொக்கப் பணம் என்றார் ஓர் அறிஞர். நம் கையிலுள்ள பணத்தை நல்ல முறையில் பயன் படுத்தினால் தக்க பயனைப் பெறலாம். ஒரு வேளை அதை இழந்துவிட்டாலும் மீண்டும் பெற வாயப்புகள் உண்டு. ஆனால் காலத்தை செலவழித்தால் மீண்டும் பெற வாய்ப்பில்லை யல்லவா?ஆகவே (காலத்தை பணத்தைச் செலவு செய்வதை விட) மேலானதாகக் கருத வேண்டும்.
நேரத்தின் முக்கியத்துவமும் மேலாண்மையும் (Important of time and it;s management)
நாளொன்றுக்கு நமக்கிருக்கும 24 மணிநேரங்களில் 86,400 வினாடிகள் உள்ளன. அவற்றை எவ்வாறு செலவு செய்கிறோம்? என்பதை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். நேரம் எல்லோருக்கும் பொதுவானது. சமமானது. சிலருக்கு நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சிலருக்கு நேரத்தைக் கழிப்பதே சிரமமாக இருக்கிறது. இவர்கள் நேரம் போகவில்லையே என அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் காலத்தை வகுத்துப் பயன்படுத்தத் தெரியாததேயாகும்
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

حاسبوا قبل أن تحاسبوا وزنوا أعمالكم قبل أن توزن عليكم ( وكان يضرب قدميه بالدرة اذا جن الليل ويقول لنفسه ما ذا عملت اليوم؟

விசாரணை நாளில் உன்னிடம் கணக்குக் கேட்கப்படுவதற்கு முன் உனது கணக்கைப் பார்த்துக்கொள். உனது அமல்களை நிறுத்துப் பார்ப்பதற்கு முன் உனது அமல்களை எடை போட்டுக்கொள்!
மனிதனை எச்சரிக்கை செய்யும் மணிவாசகங்கள் இவை! சிந்தித்துப் பாருங்கள்.தன்னைத்தானே எச்சரித்தவர்களாய்  தம்மைப் பர்த்து இன்று என்னன்ன காரியங்களை நிறைவேற்றினாய்? என்று கேட்பார்களாம்!
வேலை, தொழில், கல்வி,வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்ப வர்களுக்கு ஓய்வு நேரங்கள் கிடைக்கவே செய்கின்றன. அந்த நேரங்களை அவர்கள் சரியாகப் பயன்படுத்துவதே இல்லை.
சொந்த தேவைகளுக்கும், உறக்கதத்திற்கும், தொலைக்காட்சிக்கும், எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறார்கள் தெரியுமா? இதற்கு ஒரு கால அட்டவணையைத் தயாரித்தால் கண்டிப்பாக ஒவ்வொரு வருக்கும் ஏராளமான ஓய்வு நேரங்கள் கிடைப்பது தெரிய வரும்.அந்த ஓய்வு வேளைகளை திட்டுமிட்டுப் பயன்படுத்தினால் நாம் செயற்கரிய சாதனைகளைச் செய்யமுடியும்.
ஒரே ஒரு தடவை தான் பிறக்கிறோம்.
நாம் உலகில் ஒரே ஒரு தடவை தான் பிறக்கிறோம். மீண்டும் பிறக்கப்போவதில்லை. அந்த ஒரே ஒரு வாழ்க்கையை ஏனோ தானோ என்றா வாழ்ந்து விட்டுப்போவது? அவ்வாறாயின் நமக்கும் ஏனைய பிராணிகளுக்கும் என்னதான் வேற்றுமை?
ஓர் அறிஞர் கூறுகிறார்
எழுந்திரு! உலகோர் இயங்க உன்தோள் கொடுத்து உதவு! எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்வு? நீ உலகில் மனிதனாகப் பிறந்ததற்காக ஏதேனும் ஒரு நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்லவேண்டாமா? இல்லையேல் உனக்கும் மரத்திற்கும், மண்ணிற்கும்,கல்லிற்கும் என்னதான் வேற்றுமை?
எவ்வளவு ஆழமான வார்த்தைகள்? சிந்திக்க வேண்டிய வைரவரிகள்! நமது அற்புதமான வாழ்வை சாதாரணமாகவா வாழ்ந்துவிட்டுச் செல்வது? நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உள்ளன.
Robert Frost என்ற அறிஞர் கூறிய மணிவாசகங்களை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நெஹ்ரு தன் மேஜையின் மேல் எழுதிவைத்து நாள்தோறும் படித்து மிகப்பெரிய காரியங்களை சாதிப்பதற்காக தம்மைத் தயார்படுத்திக் கொள்வாராம். அது என்ன வாசகங்கள் தெரியுமா?

The woods are lovely and deep, 
But i have my promises to keep,
And miles to go before i sleep,  
And miles to go before i sleep.

நீண்டு செறிந்த எழிற்காடு- அதை                           
நீந்துவதே என் உறுதிப்பாடு ,  
தாண்டுவரைக் கல்லதுவும் நன்றோ?   
அதை தாண்டாதுறங்குவதும் நன்றோ?

‘என் வாழ்வில் நான் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.நான் செல்ல வேண்டிய நெடிய பயணமோ வெகு தொலைவில் உள்ளது. அதற்காக இராப்பகலாக தூங்காது உழைக்க வேண்டியுள்ளது. இந்த நிலையா உடல் தளரும் வரை நெடிதாய் நின்றுழைப்பேன்’ என்ற மணிவாசகங்களைப் பாருங்கள்.
நினைவுச் சின்னம் என்பது  நல்லறங்களாகும்.
இதைப்ப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

عن أبي هريرة رضيالله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم  اذا مات ابن آدم انقطع عمله ألا من ثلآث صدقة جارية  او علم ينتفع به أو ولد صالح يدعو له(رواه مسلم

ஒரு மனிதனின் மரணத்தின் பின் வருபவை மூன்று அவை:
1. நிலையான தர்மம்,2 கல்வி,3 நல்ல மகன் (சான்றோன்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல் :முஸ்லிம்)
இந்த மூன்றையும் உள்ளடக்கியவாறு  ஏழு அறச் செயலகள் மரணத்திற்குப் பின் தொடருவதாக வரும் நபி மொழி நம் சிந்தனைக்குரியதாகும்.

عن أنس بن مالك قال رسول الله صلعم ‘ سبع يجري للعبد أجرهن وهو في قيره بعد موته ، من علم علما ، أوأجري نهرا ، أو حفر بئرا ، أو بني مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته (حسنه ألباني رحمه الله في صحيح الجامع برقم3596

1. நிலையான தர்மம்,2 கல்வி,3 நல்ல மகன் (சான்றோன் ) என்பதைத் தொடர்ந்து மேலும் நான்கைக் குறிப்பிட்டார்கள் , 4.ஓடும் ஆறு 5. கிணறு 6. பள்ளி வாசல் 7.முஸ்ஹப் (நன்னெறி நூல்கள்) இன்னொரு அறிவிப்பில் கனி தரும் பழங்கள் என எட்டாவதாகக் கூறிய ஆதாரமிக்க நபிமொழிகளும் உள்ளன.
நபிமார்கள் அத்தனை பேரும் உலகில் சாதிப்பதற்காகவே “அல்லாஹ்வின் தூதுவச் செய்தியை மக்களிடம் சேர்ப்பதற்காக இடைவிடாது கண் துஞசாது தமது நேரங்களையெல்லாம் கருமமே கண்ணாயிருந்து சாதித்த வரலாறுகளை” குர்ஆன் நெடுகிலும் காண முடிகிறது.
அவற்றிற் கெல்லாம் மகுடம் வைத்தாற் போல் பெருமானார் (ஸல்) வாழ்வு அமைந்ததைப் பார்க்க முடிகிறது. அவர்களின் தூதுவச் பிரச்சாரத்தை நிறுத்துவதற்காக எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இறுதியில் ஆசைவார்த்தைகளைக் காட்டி
‘நீர் விரும்பினால் அரபு நாட்டிலேயே அழகிய பெண்ணை மணமுடித்துத் தருகிறோம்.அல்லது இந்த நாட்டிலேயே மிகப் பெரிய கோடிச் செல்வராக்குகிறோம்.அல்லது இந்த நாட்டின் மாமன்னராக் ஏற்றுக் கொள்கிறோம் என்றெல்லாம் கூறியபோதும்
“எனக்கு பெண்ணும் வேண்டாம்,மண்ணும் வேண்டாம் மணி மகுடமும் வேண்டாம்” என்று உதறிவிட்டு என்ன கூறினார்கள் தெரியுமா?

والله لو وضعوا الشمس في يميني والقمر في يساري علي أن أترك هذاالأمر

حتي يظهره الله أو أموت في سبيله ما تركته

‘உலக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சூரியனை வலக்கையிலும், சந்திரனை இடக்கையிலும் கொண்டு வந்து தந்தாலும் என் கொள்கையை விட மாட்மேன். ஒன்று அதில் நான் வெற்றி பெறுவேன். இல்லையேல் செத்து மடிவேன்’ என்று சூளுரைத்து 23 ஆண்டுகளிலே ஒரு நிமிடம் கூட வீண் விரயம் செய்யாது  போராடியதால் தான் ஆயிரம் ஆண்டுகளில் சாதிக்க முடியாத அரும் பெரும் காரியத்தை அவர்களால் சாதிக்க முடிந்தது.
அவர்கள் கைகட்டிக்கொண்டு இருந்திருந்தால் இன்று வரை கோடானு கோடி மக்கள் இஸ்லாத்தை ஏற்றிருப்பர்களா? இன்று 1823 மில்லியன் மக்கள் வரை இஸ்லாத்தைத் தழுவியிருப்பர்களா? இந்த டாக்டர் அப்துல்லாஹ் பெரியார் தாசன் தான் இஸ்லாத்திற்கு வந்திருப்பர்களா?
வீணாகக் கழியும் காலங்கள்
இன்றைய காலத்தில் பொழுதைக் கழிப்பதற்குத்தான் எத்தனையோ வகையான ஆபாசமான கேளிக்கை நிகழ்சிகள் மலிந்து கிடக்கின்றன.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் (டெலிவிசன்)பெரும்பாலான மக்கள் தங்கள் பொழுதைக் கழிப்பது தொலைக்காட்சியில் தான். அதில் வரும் விதவிதமான அலைவரிசைகளில் மனதைப் பறிகொடுத்து மெய்மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் முதல் கூன் வீழந்த கிழவர்கள் வரை இதற்குப் பலியாகிறார்கள்.
சிறந்த அலை வரிசைகளில் அறிவியல் நிகழ்சிகளும், அவசியமான நிகழ்சிகளும் இருந்தாலும் விரும்பிப் பார்ப்பது ஆடல், பாடல், நகைச்சுவை நிகழ்சிகள், திரைப்ப டங்கள், சீரியல்கள், கிரிக்கட் போட்டிகள் போன்றவை தான். இவற்றால் நம் எதிர்காலத்துக்குப் பயனுண்டா என ஆராய்ந்தால் எதுவுமே இல்லை. பொன்னான நேரங்கள் வீணாவது தான் மிச்சம்.
இதனால் எத்தனையோபேர்களின் அற்புதமான திறமைகள் பாழாகின்றன. சாதனைகள் தோல்விகளில் முடிகின்றன.

குழந்தைகள் பாதிப்பு
அமெரிக்காவில் குழந்தைகள் வாரம் ஒன்றிற்கு சராசரியாக 25 மணிநேரம் தொலைக் காட்சிகள் பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளது. குடும்பச்சூழல்கள் பல பாழாகியுள்ளன.

இன்டெர்னெட்டினால் பாதிப்பு
அடுத்து கணினியின் அசுர வளர்ச்சியால் உலகில் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டாலும் இன்டர்நெட் தொடர்புகள் நமது இளைஞர்களை அதள பாதாளத்தில் தள்ளிக்கொண்டி ருக்கின்றன.

கைபேசியினால் பாதிப்பு
அடுத்து தொலைபேசித் தொடர்பு சாதனமான மொபைல்-கைப்பேசி அது மக்களைப் படுத்தும் பாடு சொல்லி முடியாது. இளைய சமுதாயத்தையும் சிறுவர்களையும் பாழ்படுத்தும் ஆபத்தான தீமையை விளைவிக்கும் நச்சுப் பொருளாகிவிட்டன.

தொலைபேசியினால் பாதிப்பு
அடுத்து நமது பொன்னான நேரங்கள் தொலைபேசியிலே தொலைந்து விடுகின்றன. ஆண்கள் வேலைக்குச் சென்றுவிட்டால் பெண்கள் நேரங்களைப் பாழாக்குவது தொலைபேசியில் தான். அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவதிலும், ஆடம்பரப் பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் தான் கழிகின்றன.

வீண்பேச்சுகளும், வேண்டா வெறுப்புகளும்
நம்மில் இருவர் சந்தித்தால் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வீண் பேச்சுகளில் ஈடுகிறோம். பேச்சுத்துணைக்கு ஆளில்லை என தேடிக் கண்டு பிடித்து அரட்டை அடிக்கிறோம். முதலில் வீணான பேச்சுகள் பின்னர் அடுத்தவர் பக்கம் திரும்பி புறம் பேசுதலில் முடிகிறது.அது நரகிற்கே வழி கோலும் என்பதை நம்மில் எவரும் உணருவதில்லை.
நபி (ஸல்) கூறுகிறார்கள்
ஒருவன் தாம் பேசுபவை நன்மையான பேச்சா அல்லது தீமையான பேச்சா என ஆராயாமல் பேசினால் அதன் விளைவாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் உள்ள தூரத்தைவிட அதிக தூரத்தில் நரகில் விழுவான். (புகாரி) அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நம்மில் பெரும்பாலோர் தங்களின் பொன்னான நேரங்களை அறிந்தோ அறியாமலோ வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
நரகவாசிகளில் ஒரு சாராரிடம் நீங்கள் எதற்காக நரகத்திற்கு அழைத்துவரப்பட்டீர்கள் எனக் கேட்கும் போது அவர்கள்,

ُكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ

“நாங்கள் வீணாகப் பொழுதைக் கழித்தவர்களுடன் இருந்தோம்” (74: 45) என்று கூறுவார்கள்.

மற்றவர்களின் நேரத்தை வீணாக்குவது
தங்களின் நேரத்தை வீணாக்குவதுடன் மற்றவர்களின் நேரத்தையும் பாழாக்குவதையும்; இன்று அதிகமாகக் காணமுடிகிறது.
கண்ட கண்ட நேரங்களிலோ இரவு தூங்கும் வேளைகளிலோ போன் செய்து தொல்லை தருபவர்களைப் பார்க்கிறோம்.
ஒரு நாள் நள்ளிரவு அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.மணி இரண்டு இருக்கும். தொலைபேசி எண் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதேனும் எமர்ஜென்சி செய்திகளாக இருக்கும் எனப் பதறிப் போய்  எடுத்தால், ஸலாம் சொல்லிவிட்டு ஹலோ யார்? மறுபுறம் தூங்கிறீங்களா?என்ற குரல் கேட்டது. ஆமாம் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டு தூங்கிறீங்களா எனக் கேட்டார்.நான் மீண்டும்  ஹலோ யார் பேசுறது? எனக்கேட்டேன். மறு முனையிலிருந்து ‘ யார் பேசுறதுன்னு கண்டு பிடியுங்களேன் அடுத்த போட்டி வினா.
இது Quiz Programe நடத்திற நேரம்மில்ல. முதல்ல உங்க பேர சொல்லுங்க.. எதாவது அவசரச் செய்தியா? இல்லை சும்மா தான் கூப்பிட்டேன் என்றாரே பார்க்கலாம் சர்வ சாதாரணமாக. அதற்கு இதுவா நேரம்? தயவு செய்து தூக்கத்திலே டிஸ்டர்ப் செய்யாதீங்க. உருப்படியா எதாவது வேலையைப் பாருங்க! என்று போனை வைத்து விட்டேன்.
பாருங்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள். இவர்களைப் பார்த்து தான்

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ ».

லா ளரர வலா ளிரார தனக்கும் தீங்கு செய்யக் கூடாது. பிறருக்கும் தீங்கு செய்யக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா-2431)
முன்னறிவுப்பு இன்றி வீட்டிற்கு வருவது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتاً غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

அனுமதியின்றி அயலார் இல்லம் செல்லுவது கூடாது என குர்ஆன் கண்டிப்பதை 24:27 வது வசனத்தில் காண முடிகிறது.
ஆனால், தொலைபேசித் தொடர்பு வசதிகள் இருந்தாலும் எந்தவித முன்னறிவிப்பும் யுppழinஅநவெ ம் இல்லாமல் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளைப் பர்க்கிறோம். நாம் குடும்பத்துடன் அவசரமாக வெளியே செல்வதற்கு ஆயுத்தமாக இருப்போம். அந்த நேரத்தில், ஒரு வேலையாக வந்த இடத்தில் உங்கள் வீட்டிற்கும் வரலாமென்றி ருக்கிறோம். வீட்டில் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு வாசலில் தான் நிற்கிறோம். கதவைத் திறக்கிறீர்களா? எனக்கேட்பார்கள்.
எவ்வளவு தர்ம சங்கடமான நிலை பார்த்தீர்களா? இதனால் தான் நேரம் காலம் பார்த்து ஓய்வு நேரம் பார்த்து அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் என்பதையும், அனுமதிகிடைக்காமலும், நமது ஸலாத்திற்கு பதில் வராமலும் பிறரது இல்லம் செல்லாதீர்கள். அவர்களின் இந்த திடீர் வருகை இருவரது நேரங்களையும் வீணாக்குகிறது.
அடுத்து குறித்த நேரத்திற்கு வீட்டிற்கோ விருந்திற்கோ வருவதாக வாக்களிப்பார்கள். இதோ ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறோம் என்பார்கள். ஆனால் அவர்கள் வீ;டடிலிருந்தே புறப்பட்டிருக்க மாட்டார்கள். இவ்வாறு குறித்த நேரத்தில் வராது நமது நேரங்களை வீணடிப்பவர்களையும் நம்மிடம் பார்க்கலாம்.
இவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அமரிக்க அதிபர் வாஷிங்டன் கடைபிடித்த நெறியைப்பாருங்கள்.
ஒருமுறை குறிப்பிட்ட நேரத்தில் விருந்தினர்கள் வராததால் தனியாக உணவருந்தத் துவங்கிவிட்டார். விருந்தினர்கள் சிறிது தாமதித்து வந்ததும் அவர்களிடம் சாப்பிட்டுக் கொண்டே வாஷிங்டன் கூறினார். ‘என்னுடைய சமயற்காரன் விருந்தினர்கள் வந்து விட்டார்களா எனக் கேட்கமாட்டான்.சாப்பிடும் நேரம் வந்துவிட்டதா என்று தான் கேட்பான்’.வந்தவர்கள் தாமதத்தின் விளைவைப் புரிந்து கொண்டார்கள்.
ஒருமுறை பிரஞ்சு மன்னன் நெப்போலியன் தமது தளபதிகளை விருந்துக்கு அழைத்திருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வந்து சேராததால் தனியாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து விட்டார். அவர் முடிக்கும் தறுவாயில் அவருடைய தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்தனர். சாப்பாட்டு மேசையிலிருந்து எழுந்து கொண்டே தளபதிகளே! சாப்பிடும் நேரம் முடிந்து விட்டதுஃ வேலை செய்யும் நேரம் துவங்கிவிட்டது. வாருங்கள். நாம் ஒரு நிமிடம் கூட வீணாக்காது இனி வேலையில் ஈடுபடுவோம் என்றாரே பார்க்கலாம்.
தாமதத்திற்கு கொண்டிக் காரணங்கள்.
சிலர் தாமதத்திற்கு நொண்டிக் காரணங்களை கூறிக் கொண்டிருப் பார்கள். தம்முடைய ஊழியன் ஒருவன் தாமதித்து வந்ததற்கு தம்முடைய கடிகாரத்தை நொண்டிச் சாக்காகக் கூறியதும், ‘ நீ வேறு ஒரு கிளாக்கை (கடிகாரத்தை) வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் நான் வேறு ஒரு கிளர்க்கை (குமாஸ்தாவை) வைத்துக் கொள்ளுவேன்’ என்று கூறினார் வாஷிங்டன்.

ஒத்திபோடுவது.
உடனுக்குடன் செய்யவேண்டிய காரியங்களை ஒத்தி போடுவதும் ஒருவனை படுகுழியில் தள்ளிவிடும். காலம் என்னும் கடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ‘இப்பொழுது’ என்னும் சொல். இப்பொழுது என்பது வெற்றி வீரனின் தாரக மந்திரமாகும். ‘பின்பு’ என்பது தோல்வி அடைபவனின் ‘சாபச் சொல்’.
ஒருவேலையை ஒத்தி போடுவது என்றால் என்ன? அதைப் புதை குழியில் போட்டு மூடிவிடுவது தான். பின்பு பார்ப்போம் என்பதன் பொருள் என்ன? பின்பு ஒரு போதும் அதை ஏறிட்டுப்பார்ப்பதில்லை என்பது தான்.
நாளை (புக்ரா)
ஒருநாளின் மதிப்பு தெரியாததால் நாளை புக்ரா என சர்வசாதாரண மாகக் கூறிவிடுவார்கள்.
நாளை என்பது எத்தனை பேரின் வாழ்க்கையைப் பலி கொண்டிருக்கிறது? அதன் காரணமாக எத்தனை பேரின் தீர்மானங்கள், திட்டங்கள் எல்லாம் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன? அது எத்தனை சோம்பேறிகளுக்கும், திறமையற்றவர்களுக்கும், அடைக்கல நிலையமாக அமைந்திருக்கிறது.
நேரத்தை உரிய முறையில் கழித்திடுவோம்
காலத்தின் மீது சத்தியமிட்டு காலத்தைப் பேணிக் கொள்ளுஙகள (அல்குர்ஆன் 103:1-3)கூறுகிறான்.
வீணாய்க் கழிந்துவிட்ட காலங்களை எண்ணி வருந்தி விரக்தியடையாதீர். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள்.
ஓர் அறிஞர் கூறினார்.
எதிர்காலத்தை எண்ணி வாழ்பவன் கோழை.இறந்த காலத்தை எண்ணி வேதனைப்படுபவன் நடமாடும் பிணம். நிகழ் காலத்தை எண்ணி வாழ்பவன் வாழப்பிறந்தவன்.
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்.
கடந்த காலம் கடந்து விட்டது. வருங்காலம் சந்தேகத்திற்குரியது. எனவே இருக்கும் காலத்தில் செயலாற்றிக் கொள்.
ஓய்வு வேளைகளில் நற்பணியாற்றுவது

وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلاً مَّا تَشْكُرُونَ

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் -எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். (அல்குர்ஆன் 7:10)
நமக்குக் கிடைத்திருக்கும் ஓய்வுநேரங்களை அல்லாஹ்வுக்கு விருப்பமான மற்றும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிகளில் பயன்படுத்தி அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.
குர்ஆன் ஓதுதல் மற்றும் மனனம் செய்தல்,                                           உபரியான வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்
அழைப்புப்பணியை மேற்கொள்ளுதல்,
இறை நினைவுகளில் திக்ர் செய்தல் (பிரார்த்தனை செய்தல்)
சமூகப்பணி செய்தல்

وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاء أَجَلُهُمْ لاَ يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلاَ يَسْتَقْدِمُونَ

( அல்அஃராப் 7:34),(யூனுஸ்10:49) அந்நஹலு 16:61
மரணவேளை வந்துவிட்டால் மலக்குகள் மனித உயிரை ஒருகணம் முந்தவோ பிந்தவோ காலம் தாழ்த்தாமல் அவனுக்குக் குறிக்கப்பட்ட நேரத்தில் அவன் உயிரை கனகச்சிதமாக பிடுங்கி எடுத்துவிடுவார்கள். அந்த நிலை நமக்கு வரும்முன் மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கைப் பயணத்தில் கிடைக்கப் பெற்ற இந்த அரிய நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த இன்றே ஆயத்தமாகுவோம். திசை தெரியாத பயணத்தை மேற்கொள்வது போல நம் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் மறுமையில் வெற்றியடையக் கூடிய வழிகளறிந்து அதன்படி நடந்து மறுமையில் சொர்க்கத்தை அடையும் பாக்கியத்தை நமக்கு நல்கிட அவனே போதுமானவன்.
காலம் கண்போன்றது நேரம் பொன் போன்றது என்பார்கள். ஆனால் அந்தபொன்னைவிட,முத்துக்கள் பவளங்களை விட ஏன் வைரக்கற்களைவிடவும் விலையுயர்ந்தது.
விலைமதிப்பற்ற நேரம் சென்று விட்டால் மீண்டும் திரும்பி வராது: திருமறை குர்ஆன் இரு நிலைகளைக் குறிப்பிடுகிறது.
முதல் நிலை.
உலகில் இருக்கும் காலத்தைத் தவறவிடுவதால் பேரிழப்பு ஏற்படுகிறது.மரணவேளையில், எனக்கு இன்னும் சிறிது அவகாசம் கிடைத்தால் இழந்த காலத்தை ஈடு செய்து தவறவிட்ட நன்மைகளை யெல்லாம் நிறைவேற்றி வருவேனே என்று மனிதன் துடிதுடித்து
அங்கலாய்க்கும்  நிலையை அல்லாஹ் படம் பிடித்துக் காட்டுகிறான். (முனாபிகூன் 9,10)
அடுத்த நிலை
மறுமையில் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் உலகில் செய்த
செயல்களுக்கெல்லாம் நீதி வழங்கி கூலி கொடுக்கப்படும் போது நல்வவர்கள்சுவர்க்கத்திற்கும், தீயவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். அந்த வேளையில்நரகவாசிகள் வேண்டுவர்களாம். இந்த உலகிற்கு மீண்டும் ஒரு முறை அனுப்பப்பட்டால்நாங்கள் புதியதோர் வாழ்க்கை வாழ்ந்து நல்ல அமல்கள் செய்து வருவோமே என்று கதறுவர்களாம்.
அப்போது அவர்களிடம் கூறப்படும்.

قد انتهي زمن العمل وجاء زمن الجزاء

‘வேலை செய்யும் காலம் முடிந்து விட்டது.இப்போது கூலிவழங்கும் நேரம் வந்து விட்டது.

وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحاً غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ.

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்’ என்று கூறிக் கதறுவார்கள். (35:37)
(அதற்கு அல்லாஹ்) ‘சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வரவில்லையா? ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள். ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை’ (என்று கூறுவான்).     நன்றி;அல்பாக்கவி.காம்

பொன்னான நேரங்கள்-3

நேரம் ஒதுக்குங்கள்!
1. வாழ்க்கையில் நல்லதை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்.
இது வெற்றியின் இரகசியம்!
2. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது ஆற்றலின் ஆணிவேர்!
3. படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது மெய்யறிவின் அடித்தளம்!
4.சமூகப் பணிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது இறைவனின் அன்பைப் பெற்றுத்தரும்!
5. நட்பாக இருக்க நேரம் ஒதுக்குங்கள்.
இது மகிழ்ச்சியின் இருப்பிடம்!
6. அன்பு செலுத்த நேரம் ஒதுக்குங்கள்.
இது வாழ்வின் உயரிய இன்பம்!
7. வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
இது வெற்றியின் வெகுமதி!
8.விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது இளமையின் இரகசியம்!
9. திக்ரு (தியானம்) செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
இது இறைவனுடன் சங்கமிக்கும் வழி!
10. இறைவணக்கத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது மறுமைப் பேறுகளுக்கான முதலீடு.
11. குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.   இது மறுமையில் உங்களுக்காகப்  பரிந்து பேசும்!
12. அனைத்தையும் அறிந்து கொள்ள குர்ஆனைப் படியுங்கள்.               இது அறிவியல் உண்மைகளை உலகுக்குக் காட்டும் கண்ணாடி. நன்றி;அல்பாக்கவி.காம்

52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம் - ராணுவத்தில் 12 பேருக்கு பதக்கம்

சிறப்பான சேவைபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 52 பேராவர்.

குடியரசு தலைவர் பதக்கம் 4 பிரிவுகளில் வழங்கப்படும்.
1.வீரத்தீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம்
2.வீரத்தீரச் செயலுக்கான போலீஸ் பதக்கம்
3.மேன்மையான சேவைக்கான குடியரசு தலைவர் போலீஸ் பதக்கம் 4.சிறப்புமிக்க சேவைக்கான போலீஸ் பதக்கம் ஆகியனவாகும்.

முதல் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் எவருக்கும் பதக்கம் இல்லை. இரண்டாவது பிரிவில் 18 பேரும், மூன்றாவது பிரிவில் 2 பேரும், நான்காவது பிரிவில் 32 பேரும் பதக்கத்தை பெறுகின்றனர்.

தமிழகத்தில் குடியரசு தலைவர் பதக்கம் பெற்றோர் பெயர் விபரம்:எஸ்.எம்.முகமது இக்பால்(காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை).

எஸ்.நிஜாமுதீன் (காவல்துறைக் கண்காணிப்பாளர்-திருச்சி மாவட்டம்).

ப்.எம்.ஹுசேன் (காவல்துறைக் கண்காணிப்பாளர் - தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை).

எஸ்.அப்துல்கனி (கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியன், உளுந்தூர்பேட்டை).

கே.காதர்கான் (தலைமைக் காவல் அதிகாரி, சிறப்பு அதிரடிப்படை- ஈரோடு).

ராணுவத்தில் வீரதீரச் செயல் மற்றும் சிறப்பான சேவை புரிந்தோர் 440 பேருக்கு வழங்கப்பட்ட குடியரசு தலைவர் பதக்கத்தில் 12 முஸ்லிம்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ சேவைக்காக வழங்கப்படும் 3-வது பெரிய பதக்கமான ஸவ்ரிய சக்ரா பதக்கம் பெற்றவர்களில் முஹம்மது ஷஃபியும் ஒருவராவார்.

செய்தி:twocircles.net&பாலைவனத் தூது

இறுதி நாளின் அடையாளங்கள்

இறுதி நாளின் அடையாளங்கள்
1.மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50
2.பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளைமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டிவாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 50
3. குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
4.விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
5.தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ‘எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496
6.பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681
7.காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)
8.கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
9.நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல்: புகாரி 1036, 7121
10.பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.
11.நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306
12.பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808
13.ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098
14.உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 11365
15.பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 1511
16.தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
17.பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
18.சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 7115, 7121
19.இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 3609, 7121
20.முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319
21.யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ‘முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926
22.கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ‘கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179
23.யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 7119
24.கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 3517, 7117
25.அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183
26.எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191
27.செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். ‘நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424
28.மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936
29.பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176
30.மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 2451
31.அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546
32.மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது
6 – யஃஜுஜ், மஃஜுஜ்
7 – கிழக்கே ஒரு பூகம்பம்
8 – மேற்கே ஒரு பூகம்பம்
9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 – இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாகஅமைந்திருக்கும்.
(அல்குர்ஆன் 44:10,11)
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனதுசெவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)
நூல்: தப்ரானி
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)
ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(அல்குர்ஆன் 43:61)
மூன்று பூகம்பங்கள்
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்
பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்
நன்றி : ஹக்கீம்&அல்பாக்கவி.காம்

‘பிறப்புரிமை'. புறக்க‌ணிக்க‌ப்ப‌டும் முஸ்லீம் சமூகம். VIDEO.

முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌நிலை. VIDEO

அப்பட்டமான உண்மைகள்.

கண்ணீரில் முஸ்லீம் சமூகம்:
“விடியுமா? தெரியல வேதனை தீரல‌”

இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக‌ ஏங்கி காத்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

நாட்டிற்காக‌ சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற‌ மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம் .

நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டில் 20 சதவிகிதத்திற்கு மேலாக‌ முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் நிலையில் அரசின் புள்ளி விபரங்களோ 13 சதவிகிதத்தினரே இருப்பதாக கூறுப்படும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

அந்த கணக்குபடி பார்த்தாலும் 540 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இது நிறைவு பெறாத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இந்த தொகை இருந்திராத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் தயாரிப்பான‌
'ஊடகங்களில் 'பிறப்புரிமை'
Documentary Film .
காணொளியில் செவியுற்று தொகுத்து எழுதியது. வாஞ்ஜூர்.

'ஊடகங்களில் 'பிறப்புரிமை' !
'PIRAPPURIMAI'          Documentary Film
எண்ண‌ம் இயக்கம் :ஆளூர் ஷாநவாஸ்.

Directed by - Aloor Shanavas
Produced by - Media Steps
Duration - 30 minகோணுழாம்பள்ளம்post ன் ந‌ன்றி : :ஆளூர் ஷாநவாஸ். க்கு

வாசகர்களே! இப்பதிவை பலர் சென்றடைய உதவுங்கள்.
பதிவர்களே! தங்களின் பதிவுகளில் இதை மீள்பதிவு செய்யுங்கள்

பேரீத்தையும் அதன் சிறப்பும்

நோன்பு திறக்கும் போது இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பேரீத்தம் பழத்தைகொண்டு நோன்பு திறக்க சொன்னார்கள்.அந்த அருளான,திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் எனும் நோன்பு மாதம் இதோ மிக அருகில்....
நபிகள் நாயகம் சொன்ன அந்த பேரீத்தையின் மருத்துவ குணம் என்ன? ஒரு சிறு அலசல்..........

இறைவனின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.  பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.  அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது. 

வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.  இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.  இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.   சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.  இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

Tamil                 - Perecham pazham
English               - Date palm
Malayalam         - Ita pazham
Sanskrit             - Kharjurah
Telugu               - Ita
Botanical Name - Phoenix dactylifera


இதன் காய் கர்ச்சூரக்காய் என்று வழங்கப் படுகின்றது.

பேரீந்தெனுங்கனிக்குப் பித்தமத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
இரத்தபித்த நீரழிவி லைப்பறும் அரோசி
உரத்த மலக் கட்டுமறும் ஓது.
        - அகத்தியர் குணபாடம்

கண்பார்வை தெளிவடைய

பொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். 

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும்.  இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.  மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மெலிந்த குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள்.  பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள்.    இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள்.  ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர். 

வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது.   இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால்  குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.  மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.  இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.  மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.  அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.   இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.  நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.  இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை.  இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.  இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.  கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது.  அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும்.  மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள்.  சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது.  இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.
நன்றி : அன்போடு உங்களை இணையத்தளம்.

இறைவனின் அதிசயப் படைப்புகள்!

வான்மறையில் பூமியைப்பற்றி ..
பூமி எவ்வாறு விரிக்கப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் (ஆராய்ந்து) பார்க்க வேண்டாமா?
(அல்குர்ஆன் 88: 20)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதில் இரவு பகல்
மாறிவருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)
வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிடப் பெரியது.
(அல்குர்ஆன் 40: 57)
இவ்வாறாக திருக்குர்ஆனில் 461 தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தையும் அதிசயங்களையும் அறியலாம்.
இதோ இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில:
1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.
4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
6. இப்போது நாம காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொறுக்கு. சுமார் 25 மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.
7. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
8. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.
9. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
10. இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை. ஆனால், ரஷ70 அடிவரை அதிக ஆழம் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.
13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.
14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365 நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.) 16. சந்திரனோ பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
18. பூமியிலிருந்து சற்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு அப்பால்இருக்கிறதது.
19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம் மேற்பரப்பில் தான் உயிரினங்கள் வாழ்கின்றன. (பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.)
20. பூமியின் மேற்பரப்பை நான்கு கோளங்னாகப் பிரிக்கலாம். 1. பாறைக்கோளம்.2. நீர்கோளம். 3. வளிமண்டலம் (யவஅழளிhநசந) உயிர்கோளம்
எத்தனை பிரயாணங்கள் ?
21. தன்னைத்தானே சுற்றும் பிரயாணம்!
22.சூரியனை சுற்றும் பிரயாணம்!
23. சூரியன், சதிரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் பிரயாணம்.! இங்கேயும் முடிவில்லை.
24. பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளைய மடித்துக்கொண்டு போகும் பிரயாணம்!
ஆக நான்கு பிரயாணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அதே நேரம் நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிஙோம்.
25. நாம் நினைப்பது போல் பூமி ஒன்றா ? ஒரே ஒரு பூமி மட்டுமல்ல. ஒரு சூரிய குடும்பத்துக்கு ஒரு பூமி. உலகில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சூரிய குடும்பத்துக்கும் ஒவ்வொரு பூமி உள்ளது. ஒரு பால் வெளியில் (புயடயஒல) 200 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. பால் வெளி; (புயடயஒல)என்பது ஒன்றா? நூறா ? அதுவே 200 பில்லியன் பால் வெளிகள்; (புயடயஒல க்கள்) உள்ளன. அப்டியானால் உலகில் எத்தனை பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும். படைத்தவனுக்கே வெளிச்சம்
அல்லாஹ்வின் கணக்கில்லா இந்த அற்புதப் படைப்புகளின் எண்ணிக்கை பற்றியோ, அவற்றின் அற்புதத் தகலவல்கள் பற்றியோ விஞ்ஞானிகள் கூறுவதைக்கேட்டாலே தலை சுற்றுகிறது. இனியும் என்னன்ன கண்டுபிடிக்கப் போகிறார்களோ ? அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் பற்றி சிந்தித்து அவனைப் புகழ்ந்து அவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா ?
நன்றி;அல்பாக்கவி.காம்வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
 
தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.
 
(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)
 
ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.
 
நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.
 
வீதியில் உலாவரும் வீடியோ கேமரா
கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத­ல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.
 
மணமகன் இல்லத்தி­ருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!
 
வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத­ல் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.
 
அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.
 
இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி, மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.
 
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ”(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்” என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 4758
 
இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ர­லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.
 
தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?
 
ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போ­லித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போ­லித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்­லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?
 
ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி 9
 
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா? இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: முஸ்­லிம் 3971
பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.
 
ரோஷம் இழந்த ஆண்கள்
இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
 
”என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ர­லி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, ”ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ர­லி), நூல்: புகாரி 6846, 7416
ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான்.
 
இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.
 
திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.
 
போட்டோக்கள்
கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது சமீபத்தில் வந்த புதிய கலாச்சாரம் என்றால் போட்டோ எடுத்தல் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது.
இங்கும் மணமகளை கேமராக்காரன் முதன்முத­ல் பார்த்து தனது கேமராவைப் போலவே கண் சிமிட்டிக் கொள்கின்றான். வீடியோ கேஸட்டாவது பிளேயரில் போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்த போட்டோக்களோ ஆல்பங்களில் சேகரிக்கப்பட்டு அவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
 
போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.
நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர­லி), நூல்: புகாரி 3322
 
ஆயிஷா (ர­லி) வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.
 
எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.
 
இது மட்டுமின்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால் ஏற்படும் அனைத்து தீமைகளும் திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!
முஃமின்களே! நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)

SOURCE:(U.I.M.) &முத்துபேட்டை.org