என்.சி.ஏ.இ..ஆர் என்ற தேசிய பயன்பாட்டு பொருளிய ஆய்புக்குழு, புதுடெல்லி 2009ஆம் ஆண்டு சமர்ப்பித்த ஆய்வில் தலித்துகள் 32 சதவீதம் வறுமைக் கோட்டுக்குக் கீழும், முஸ்லிம்கள் 31 சதவீதம் வறுமைக்கோட்டுக்கு கீழும் துவள்கின்றர் என்று கூறுகின்றது.
சமீபத்தில் தமிழகத்தில் எடுத்த மக்கள் தொகை கணக்குப் படி முஸ்லிம்கள் 34,70,647 பேர்கள் உள்ளனர்.
2008ஆம் ஆண்டு மைனாரிட்டி நலன் ஆயு;வு செய்த நீதிபதி ராஜேந்தர் சச்சார் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் இந்திய நாட்டில் தலித்துகளை விட பொருளாதாரம், வேலை வாய்ப்பிலும், வாழ்கைத் தரத்திலும் தாழ்ந்திருக்கின்றனர் என்று கூறியிருப்பது ஒவ்வொரு பள்ளிவாசல் வாயிலிலும், தர்கா வாயிலிலும், வியாபார தளங்களிலும், செல்வந்தர் வீடுக்கம் யாசகம் கேட்டு வெள்ளிதோறும் படையெடுக்கும் ஏழை முஸ்லிம்களை வைத்து உண்மையென தெரிந்து கொள்ளலாம். ஏன் தலித்துகள் முன்னேறியிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, தொழில் செய்ய பல சலுகைகள் இருப்பதால் தான் என்றால் மிகையாகாது. அந்த சச்சார் கமிஷனுக்குக் கூட இன்னும் பரிசீலனை எடுத்துக் கொள்ளவில்லை என்று பாராளுமன்றத்தில் பிரமர் அறிவிப்பு வெளியிட்டதாக சமீபத்தில் வந்த செய்திகள் சொல்லின.
அதனைத் தொடர்ந்து உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டு என்னன்ன சலுகைகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்கலாம் என்று பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. மிஸ்;ரா அவர்கள் தனது பணிக் காலத்தில் மிகவும் நேர்மையானவர் என பெயர் பெற்றவர். அவர் 2009 ஆம் ஆண்டு கடைசியில் சமர்ப்பித்த அறிக்கையில் முஸ்லிம் முன்னேற 10 சதவீதம் வேலை வாய்ப்பு கல்வியில் கொடுக்க வேண்டும். மற்ற மைனாரிட்டிகளுக்கு 5 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். அத்துடன் 50 சதவீதம் முஸ்லிம் நடத்தப்படும் நிறுவனங்களிலும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாதோர் நடத்தப்படும் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த ஒதிக்கீடு முஸ்லிம்-கிறித்துவ மதங்களுக்கு மனம் மாற்றம் அடைந்த தலித் இன மக்களுக்கும் பொருந்தும். அவர்கள் விருப்பப்பட்டால் பழைய சாதிச்சான்றிதழிலேயே சலுகைகள் பெறலாம் எனக்கூறி தடாலடி அறிக்கையினை சமர்ப்பித்தார்.
முஸ்லிம்கள் ஓட்டுக்களை பெறத்துடிக்கும் சில அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் மிஸ்ரா கமிஷனை நிறைவேற்ற வேண்டும் என ஆரம்பத்தில் குரல் கொடுத்தன. பாரதிய ஜனதா மட்டும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா இஸ்லாமியர், கிறித்துவர் தூண்டுதலின் பேரில் அவர்களுக்கு சாதகமான அறிக்கையினை சமர்ப்பித்துள்ளார் என கூக்குரலிட்டன. முஸ்லிம் சமுதாய இயக்கங்கள் ஆரம்பத்தில் பல ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையினை நிறைவேற்ற குரல் எழுப்பின. ஆனால் அந்தக் குரல் ஊதுபத்தி பொருத்தியவுடன் எரிந்து சாம்பலாகிப் போவது போன்ற கதையாகி உpட்டது. அவர்கள் குரல் வௌ;வேறு பிரச்னையிலும், சகோதர இயக்கங்களிடையே பகைமை வளர்ப்பதிலும், ஐகோர்ட்டில் வழக்குகள் தங்களுக்குள்ளே தொடர்ந்து கோர்ட்டு வரை நாற்றம் அடித்து விட்டது. பொதுக்கூட்டங்களிலும், தங்கள் இயக்க ஊடகங்களிலும் ஒருவருடைய கழுத்தினை மற்றொருவர் நெரிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்ற அரசியல் கட்சிகளைச் சார்ந்து அரசியல் நடத்துவதால் அவர்களுக்கு துதிபாடும் ஊது கோளாக மட்டுமே இருக்கின்றாரகள் என்றால் பொய்யாகுமா?
நீதிபதி சச்சார் முஸ்லிம்களை தலித்துகளின் முன்னேற்றத்தினை ஒப்பிட்டதும், அதே போல நீதிபதி மிஸ்ரா முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்தும் ஏன் என்று ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். 2010 மே மாதம் வெளியிடப்பட்ட நாட்டின் முக்கியமான ஐ.ஏ.எஸ், ஐ.பீ.எஸ் தேர்வினை எழுதியவர்கள் மொத்தம் 4,09,110 பேர்கள். அதில் முதல் நிலையில் தேர்வு பெற்று முதன்மை தேர்விற்கு தகுதியுள்ளவர்கள் எண்ணிக்கை 12,025 ஆகும். அந்த முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் முஸ்லிம்கள் 21, அதாவது 2.5 சதவீதமாகும். அந்த 21 நபர்களில் 100 ரேங்க் பட்டியலுக்குள் இடம் பிடித்த நான்கு பேர்கள் முஸ்லிம்களாகும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் கூறியிருப்பது போல நமக்கு 10 சதவீத ஒதிக்கீடு கிடைத்திருந்தால் நாம் 84 ஐ.ஏ.எஸ், ஐ.பீ.எஸ்களை பெற்றிருப்போம். ஏன் நம்மிடம் தகுதியானவர்கள் இல்லையா என்றால் இருக்கிறார்கள் என்பதினை ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் போல ஒரு உதாரணத்தினை சொல்லலாம் என நினைக்கின்றேன். 2010 மே மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாமதாக வந்தவர் காஷ்மீரைச்சார்ந்த சேக் பசல் என்றால் ஆச்சரியமில்லையா? இது போன்ற நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் நம்மிடையே இருக்கத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பும் வசதியும் இல்லாததால் அவர்கள் கைக்குள் திணிக்கப்பட்ட வேலைகளில் இருந்து வாடுகின்றனர் என்பது தான் உண்மை.
அது சரி ஏன் பி.ஜே.பியும் அதனைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையினை ஆக்ரோசமாக எதிர்க்கின்றனர்? என்ற கேள்வியினைக் கேட்கலாம்.
1) முஸ்லிம் அல்லாத நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் 15 சதவீத ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமே அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாகத் தானே அவர்கள் கருதுகின்றனர்..
2) மனம் மாறிய தலித்துகள் அவர்கள் முன்பு அனுபவித்த சலுகையே மீண்டும் பெறலாம். இந்து தலித்துகள் மனம் மாறுவதினையே எதிர்ப்பவர்கள் அவர்கள் முஸ்லிம் மார்க்கத்திற்கு வந்த பிறகும் அவர்களுக்குள்ள சலுகைகளை எப்படி அனுமதிப்பார்கள். ஆகவே தான் பி.ஜே.பி கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்கள்.
ஆனால் முஸ்லிம் நிறுவனங்களை நடத்துகிறவர்கள் 50 சதவீம் முஸ்லிம் ஒதுக்கீடு வழங்குவார்களா என ஆயும் போது நிச்சயமாக கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இப்போது 80 சதவீத முஸ்லிம் கல்வி, மற்றும் தொழில் நிறுவனங்களில் மாணவர்களாக இருப்பவர்களோ அல்லது வேலை பார்ப்பவர்களோ 40 சதவீதத்தினைத் தாண்டினால் அபூவரம் என்றே கூறலாம். கல்வி நிறுவனங்களை நடத்துகிறவர்கள் யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும், தொழில் நிறுவனங்கள் யார் அதிகம் படித்திருப்பார்களோ அல்லது யார் சிபாரிசு செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் முன்னுரினை கொடுப்பார். மேற்கூறிய இரண்டுமில்லாத முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையில் பின் யார் தான் வேலை கொடுக்க முன் வருவர். ஆகவே தான் முஸ்லிம் செல்வந்தர்களின் பின்னணியில் அரசியல் நடத்துவர்களும், சமூக அமைப்பு நடத்துபவர்களும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையினை நிறைவேற்ற தொடர்ந்து குரல் எழுப்பாது மவுனம் சாதிக்கின்றனர் என்று ஒரு உதாரணத்தினை மட்டும் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன்.
இன்று, 11.12.2010 மாநாடு நடத்தும் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் போஸ்ட்டரில் ஒரு அரசியல் கட்சி தலைவர் படம் பெரிதாக போடப்பட்டுள்ளது. ஆனால் என்ன கோரிக்கையினை வைத்து மாநாடு நடத்தப்படுகிறது என்று அந்தப் போஸ்ட்டரிலில் தகவலில்லை. இந்தியா-பாக்கிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் அரசியல் கட்சி இந்தியா தான் தங்கள் நாடு என அறிவித்தது. யார் தலைமையில் உள்ள கட்சி? பல லட்சங்களுக்கு சொந்தக்காரராக தோல் பிசனஸ் செய்து தன் கட்சிக்காக அத்தனை செல்வத்தினையும் அர்ப்பணித்த கண்ணிய மிகு காயிதே மில்லத் தலைமையிலான அன்றைய கட்சி. பெரிய தொழில் முனைவரான காயிதே மில்லத் அவர்கள் பல்லாவரத்திலிருந்து தான் தலைமையேற்ற அரசியல் கட்சி அலுவலகமான மரைக்காயர் லெப்பை தெருவிற்கு மின்சார ரயிலில் பயணம் செய்து பீச் ரயில் நிலையத்திலிறங்கி சைக்கிள் ரிக்ஸாவில் செல்வதினை நான் சென்னையில் புதுக்கல்லூரி மாணவனாக இருந்த போது 1966ஆம் ஆண்டு பார்த்திருக்கிறேன். அப்போது இளையாங்குடியினைச் சார்ந்த பி.என்.ஐ. அபுத்தாலிபு அவர்கள் பொருளாளராக இருந்தார். அவரையும் அந்த அலுவலகத்தில் பார்த்திருக்கின்றேன். அவரும் கடைசி வரை காசு சம்பாதிக்காமலே கட்சிக்காக வாழ்ந்தார். ஆனால் இன்று அந்த முஸ்லிம் அரசியல் கட்சி எப்போது வெளியில் தெரிகின்றது என்றால் ஒவ்வொரு தடவையும் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்திக்கும் போது சால்வை அணிவித்து அதனை போட்டாவாக வெயியிடும் போதும், இது போன்ற மாநாடுகளுக்கு அவர்கள் பெயர்களை பெரிதாக போடும் போதும் தான் மக்களுக்கு இப்படி ஒரு கட்சி இருக்கின்றது என தெரிகிறது. சமுதாய சேவைகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஈடுபட்டதாக தெரியவில்லை. அத்துடன் கொடி பறக்கும் சொகுசு கார்களில் பவனியும் வருகிறார்கள். அவர்கள் எங்கே பணக்கார தொழில் முனைவர் காயிதே மில்லத் மின்சார ரயிலில் தன் கட்சிக்கு வந்தாரே அவர் எங்கே. மடுவிற்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்றால் மிகையாகுமா?
தமிழ் நாட்டில் சமூக அமைப்பில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் தான் வெற்றி வாகை சூடியதாக வரலாறு. உதாரணத்திற்கு ஆரம்பத்தில் தமிழ் சமூக சேவையில் ஈடுபட்ட ஜஸ்ட்டிஸ் பார்ட்டியாக இருந்த இன்றைய திராவிட கட்சிகள் சிறந்து விளங்குகின்றன. வன்னியர் தனி ஒதுக்கீடுக்காக குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி 20 சதவீத ஒதுக்கீடு மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் தங்கள் சமூகத்தினை பிரதான பட்டியலில் சேர்த்து விட்டனர். இன்னும் ஐகோர்ட் நீதிபதி பட்டியலில் தங்கள் சமூகம் ஒதுக்கப் படுகிறது என்று தொடர்ந்து குரல் எழுப்புகின்றனர். ஆனால் எந்த சமூக சேவையிலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களை இணைத்துக் கொள்ளாததால் அவ்வளவாக அரசியலில் தனியிடமாக சோபிக்க முடியவில்லை. ஏன் கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் முஸ்லிம் அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்ட தொகுதியில் போட்டியிட ஆளில்லை என விட்டுக் கொடுத்தது எவ்வளவு பரிதாபமான நிலையானது என்று தெளிவாகிறது. சமீபத்தில் கூட தி.மு..க வேலை வாய்ப்பு முகாம்களை மாவட்டம் தோறும் நடத்தி எல்லா தொழில் முனைவர்களையும் வரவழைத்து பல பேர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியதாக செய்திகள் படத்துடன் வெளியிடப்பட்டன. அது போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் முஸ்லிம் தொழில் முனைவர்களை ஒருங்கிணைத்து வேலையில்லா படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு எங்காவது வேலை வாய்ப்பினை வழங்கியதுண்டா? ஆனால் 2ஜீ ஸ்பெக்ட்ரம் அலை ஒதுக்கீடில் சம்பந்த பட்டதாக கூறுப்படும் முதலாளிகளுக்கு மட்டும் பாராட்டு விழாக்கள், விருதுகள் வழங்கப்படுகின்றன. அது ஏன் என்று விளங்கவில்லை? விப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜீ கிராம கல்விக்கு இரண்டு மில்லியன் டாலர(ரூபாய் 8.80கோடி) தானமாக வலங்கியது போல அந்த பணக்காரர்கள் முஸ்லிம் சமூக. கல்வி தொண்டுகளுக்கு வழங்கியதுண்டா? அப்படி செய்திருந்தால் தமிழக முஸ்லிம்கள் அவர்களை தங்கள் தோள்மேல் தூக்கி ஊர்வலமாக சென்று பாராட்டு விழா எடுத்திருப்பார்கள்.
சென்னை செவன்வெல்ஸ் பகுதியில் உள்ள பி.வி. ஐயர் தெருவில் உள்ள பிரமாண்டமான பள்ளிவாசல் மாஸ்க்கான் சாவடி பள்ளி. அங்கே ஒவ்வொரு வெள்ளி தோறும் ஜூம்மா தொழுவதிற்கு இடைஞ்சலாக வாகனங்கள் சப்தம் எழுப்பி போய்க் கொண்டிருக்கும். ஆனால் 10.12.2010 அன்று ஒரு சமூக அமைப்பினர் அப்படி போகும் வாகனங்களை ஜூம்மா தொழும்போது தடுத்தி நிறுத்தி அமைதியாக தொழ வழிவகை செய்தது நான் நேரில் கண்டேன். அவர்களின் சமூக சேவை மக்கள் பாராட்டும் படியாக இருந்தது. அதே போன்று பல இடங்களில் சமூக அமைப்புகள் ரத்ததான முகாங்கள் நடத்துகின்றன, மருத்துவ அவசர சேவைகளுக்கு ஆம்புலன்ஸ வண்டிகள் வழங்குகின்றன, மவுத்தாகி விட்டால் இலவசமாக ஜனாசா பெட்டிகள் வழங்குகின்றன. ஆனால் எந்த முஸ்லிம் அரசியல் கட்சியாவது அதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட்டதுண்டா? ஆகவே முஸ்லிம் அரசியல் சட்சிகளும் சமூக அமைப்புகளும் முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்கு இணைந்து செயலாற்ற வேண்டும். நாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வையினையும,; அவனுடைய இறுதித் தூதர் ரஸூலல்லாவினையும் நம்பி ஈமான் கொண்டவர்கள். ஆகவே முஸ்லிம் சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற பகைமையினை மறந்து ஒத்த குரல் எழுப்ப வேண்டும். ஒரு சில எம்.எல்.ஏ சீட்டுக்களுக்காக நம்முடைய சமூதாயத்தினை எந்த சந்தர்ப்பத்திலும் அடகு வைக்கக் கூடாது தனித்தன்மையுடன் விளங்க வேண்டும். அவ்வாறு செயல் பட்டதால் தான் இன்று தொல். திருமாவளவன் தன் ஒட்டு மொத்த தலித் சமூதாயத்தின் குரலினை பாராளுமன்றத்திலும், அரசு சலுகையினை பெறுவதிலும், தன் சமூகம் ஒடுக்கப்படும் போது குரல் எழுப்புவதிலும் முனைப்பு காட்டி வெகு வேகமாக முன்னேறி வருகிறார்.
தேர்தல் வரும், போகும் ஆனால் முஸ்லிம் சமூகம் முன்னேற அறிக்கை சமர்ப்பித்த மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை காற்றில் பறக்க விடாது கட்டியாக பிடித்துக் கொண்டு நமது ஒருங்கிணைந்த குரலாக, வருங்கால தேர்தலின் ஒரே கோரிக்கையாக வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு செய்தால் மக்கள் தொகையில் 6 சதவீதம் இருக்கும் தமிழக முஸ்லிம்களுக்கு அதிகப்படியாக 3.5 சதவீதத்திலிருந்து 6 சதவீத கல்வி, வேலை வாய்ப்பு ஒதுக்கடாவது கிடைக்கும். மைனாரிட்டி சேர்மன் பதவியும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும். அது மூலம் தமிழக முஸ்லிம் மக்கள் நலனுக்கு அடித்தளமாக அமைவது உறுதியாகுமல்லவா?
- (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக