அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
- அந்நூர் - ஆலிமா, மாணவிகள் பங்கேற்பு!
- ஜமாத்தார்கள் முந்நின்று நடத்தினர்!
- பொதுக்கூட்டம் போல் பெண்கள் பயான்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR9T-gHeovhN5DC4dnKAUJPMX28CsewN6TqAYdFKG04XZvAS9H7leRAS3eJV5MmhOWYxEmTeJcpxQmpcizmgXUsEzExGnEBrtneYFqyx-QMWb6StsmWDMGCjFZ-_ltYAVtdWpeTcK87mZd/s320/09.jpg)
தஞ்சை வடக்கு மாவட்டம்
கோணுழாம்பள்ளம் கிளை சார்பாக பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு, கோனுலாம்பல்லம் ‘மின்ஹாஜ் உலும் மதரஸா’ –வில் பயான் நடந்தது இதில் அன்நூர் இஸ்லாமியக் கல்லூரியை சேர்ந்த
சகோ: நஸ்ரின் நிஹாரா (மூன்றாம் ஆண்டு மாணவி)
“தொழுகையின் நன்மைகள்” என்ற தலைப்பிலும்,
சகோ: சுமையா (ஆலிமா)
“சகாபாக்கள் பெண்களின் தியாகம்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் மாவட்ட செயலாளர்
சுவாமிமலை ஜாபர், காட்டூர் சாதிக் மற்றும் திருப்பனந்தாள் கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர் இந்நிகழ்ச்சிளை கிளை
தலைவர் முபாரக் அலி, செயலாளர் நௌசாத் அலி, பொருளாளர் சலாமத்துல்லாஹ் மேலும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பெண்கள் 150 பேர்,
ஆண்கள் 50 பேர் என கலந்துக்கொண்டு இவர்கள் காட்டிய ஆர்வம் ஒரு குட்டி பொதுக்கூட்டமே நடத்து போல் இருந்தது.
குறிப்பு: இந்த பெண்கள் பயானுக்கு கோணுழாம்பள்ளம் ஊர் நாட்டாமை மற்றும் ஜமாத்தினர் கலந்துக்கொண்டதோடில்லாமல் அன்று நடந்த செலவினங்களை இவர்களே செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக