கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஆயுத போராட்டத்தை நோக்கி தள்ளப்படும் இந்திய முஸ்லிம்கள்!!

கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங் தாகூர் என்பவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இவரை சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மற்றும் இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்ட சுனில் ஜோஷி என்பவரை சுட்டு கொன்ற வழக்கில் மீண்டும் சிபிஐ வழக்கு பதிவு செய்து தங்களது கஸ்டடியில் எடுத்துள்ளது.

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

'கண்ணீர் கடலில் தத்தளித்த அந்த 9 வருடங்கள்!' - அபலைத் தாய் பீபி காத்தூனின் கண்ணீர் பேட்டி!

கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் அல்லது உலகத்தில் எந்தவொரு சம்பவம் நடந்தாலும் – அது குண்டு வெடிப்பாக இருக்கட்டும், ரயில் எரிப்பாக இருக்கட்டும், விமானத் தாக்குதலாக இருக்கட்டும், ஏன், பக்கத்து வீட்டு காலணி தொலைந்தாலும் அரசின் பார்வையும், அதிகாரிகளின் பார்வையும் முதலில் திரும்புவது அப்பாவி முஸ்லிம்கள் மீதுதான்.

இனி என்ன செய்யப் போகிறாய்?

என் அருமை சகோதரர்களே!. நம் இணையத்தில், முஸ்லிம்களின் நமக்கு நாமே எதிரி திட்டம் (தமிழக தேர்தல்களும் கழகங்களும், ஜமாத்களும் ஓர் பார்வை) என்ற தலைப்பிலும், இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள் (முஸ்லிம்களுக்கு எத்தனை இடம்) என்ற இரு கட்டுரைகள், தமிழக முஸ்லிம் சகோதரர்களின் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அறிவீர்கள். இந்த கட்டுரைகள் 25 க்கும் மேற்பட்ட நம் சகோதர இணையதளங்களில் வெளிவந்தும், சுமார் 8 க்கும் மேற்பட்ட குழுமங்களில் (Group) இது பதியப்பட்டு சகோதரர்களால் விவாதிக்கப்பட்டும், பெரும்பாலானவர்களுக்கு மின் அஞ்சல்கள் மூலமும் இச்செய்தி அனுப்பப்பட்டும் வருகின்றது. ஏன், எனக்கே இது மின்னஞ்சலில் வந்தது!. அல்ஹம்து லில்லாஹ்!. 

இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்!

எத்தனை சீட் முஸ்லிம்களுக்கு?.


அரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக இன்றைய முஸ்லிம்கள் முற்றிலும் வலு விழந்தவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். இது போதாதென்று முஸ்லிம்களின் இயக்கங்களும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று தங்களின் பங்கிற்கு பிளவுபட்ட முஸ்லிம்களை, மேலும் சிறு சிறு குழுக்களாக பிரித்தாண்டு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நம்மை முடமாக்க எத்தனிக்கின்றனர். முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஜமாத்களும் நம்மை வழி நடத்திய காலம் போய், இன்று நாம் அவைகளை வழிநடத்த அல்லது ஒற்றுமையுடன் இருக்க ஆலோசனை கூறும் நிலைக்கு தமிழக முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

முஸ்லிம் லீகிற்கு 3 தொகுதிகள் முதல்வர் கலைஞர்-தலைவர் பேராசிரியர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்

MUSLIM
தமிழக சட்டமன்ற தேர்த லில் தி.மு.க., தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதி களில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உடன்படிக்கை யில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான டாக்டர் கலைஞர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் கையெ ழுத்திட்டனர்.

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்த லில் திமுக தலைமையி லான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

பேச்சு வார்த்தை
திமுக-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையி லான முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த கடந்த 22ம் தேதி நடைபெற்றது. தலைவர் பேராசிரியர், மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இன்று பகல் 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத் தில் நடைபெற்றது.

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!‏

cargo-ship
தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பொருளீட்டும் வழிமுறைகள் கடந்த 200 ஆண்டுகளாக பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. அடிப்படையில் முஸ்லிம்கள் தொடக்க காலம் முதல் வியாபார ரீதியான சமுதாயம் என்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருள் வாங்கி விற்பதன் மூலம் உழைத்துச் சம்பாதிப்பதை உயர்வாகவும் பாதுகாப்பகவும் முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
இன்றைய முதலாளித்துவம் வலியுறுத்தும் எல்லையற்ற, முறைகேடான இலாபம் என்ற கீழ்த்தரமான தத்துவமும் குறுகியகாலத்தில் வளர்ச்சி என்ற விவேகமற்ற போக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுரண்டல் மற்றும் பதுக்கலில் ஈடுபடாத நேர்மையான வியாபரிகள் என்றுதான் இன்றளவும் முஸ்லிம் சமுதாயம் தன்னை முன்னிலைப்படுத்துகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழு கூடியது இயக்கம், சமுதாயம், அரசியல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..
1245
இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில பொதுக் குழு கூட்டம் மாநில தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் இன்று கூடியது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள இந்த பொதுக் குழு கூட்டத்தால் நாகூர் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இயக்கம்-சமுதாயம் அரசியல் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்படவுள்ள இந்த பொதுக்குழு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள் ளது.

நடைப்பயிற்சிஉடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.
பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கருணாநிதி அரசின் முஸ்லிம் விரோத போக்கு!!!

கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: 'கடந்த 22.06.2007அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.

நல்ல மனைவி

”இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911)
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)

தூக்கம் விற்ற காசுகள் [கவிதை]

                                                                                                                                                  

மடியில் கனமில்லை... அப்துல் ரஹ்மான்.எம்.பி. பிறைமேடை தலையங்கம்

பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு! வல்ல இறைவனின் அளப்பரிய பேரருள் நம் அனைவர் மீதும் இலங்கட்டுமாக! சமுதாயத்தில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் தீர்வுகளை நோக்கி ஏக்கத்தில் மூழ்கி இருப்பதை நாம் நன்கறிவோம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில், ஒரே கோணத்தில் பார்க்க முடியவில்லையென்றாலும் அவைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து, நிரந்தர தீர்வுகளைக் காண வேண்டிய பொறுப்பிலிருந்து எந்நிலையிலும் பின்வாங்காமல், தொடர்ந்து பணியாற்றி அதன் இலக்கை அடைவது என்பது நமது தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தொடர் வரலாறு. சமுதாயம் சந்திக்கும் இப்பிரச்சினைகளைக்கூட முன்னுரிமை தரப்பட வேண்டிய முறையைப் பின்பற்றியே எப்போதும் கையாள்கிறோம்.

சமுதாயதலைவர்களே… ஜமாஅத் நிர்வாகிகளே…

மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரிய சமுதாயதலைவர்களுக்கும்…
முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும்
எனது இம்மடல் ஏக இறையவனின் சாந்தியோடும் சமாதானத்தோடும்
பூரண உடல் நலத்துடனும் உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற ஒரே தலைவர்
எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலான துஆ பரக்கதுடனும்
சந்திக்கட்டுமாக…
மரியாதைக்குரியவர்களே…
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் இன்ஷாஅல்லாஹ் விரைவில்
நடைபெற உள்ள இத்தருணத்தில் நமது சமூகத்தின் நலனை
அரசியல் அங்கிகாரத்தை முன்னெடுத்து செல்வது மிகமுக்கியமென
கருதியே எழுதுகிறேன்…

தி.மு.க.,வுடன் மு.லீக் தொகுதி பங்கீடு பேச்சு

SOURCE:DINAMALAR

உடல் நலம் – இனியாவது விழித்துக் கொள்வோம்!

உலகில் ஆதிக்க வர்கத்தால் உருவாக்கப்படும் அனைத்து விதமான அடிமைத்தனத்திலிருக்கும் மக்களை விடுதலை செய்யும் ஆற்றலும் வல்லமையும் இணையற்ற வாழ்வியல் நெறியான இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது.
இஸ்லாத்தின் வீரியமிக்க அனைத்து கருவிகளும் எல்லா காலத்திலும் உயிர்ப்புடன் இயங்க வைக்கப்பட்டால் உலகில் எந்த ஒரு மனிதனையும் யாராலும் அடிமைப்படுத்திட இயலாது. ஆனால் இஸ்லாத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக் கடமையுடைய முஸ்லிம்கள் அதன் வீரியம் அறியாமல் வீணாக்கி வரும் அவலத்தை உலகம் முழுவதும் கண்டு வருகிறோம்.

கலீபாக்களின் ஆட்சி எங்கே?

நம் நாட்டுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன், "சுதந்திரம் கிடைத்த பின், இந்தியாவில் எப்படிப்பட்ட ஆட்சி நடக்க வேண்டும்' என, காந்தியிடம் நிருபர்கள் கேட்டபோது, "கலீபாக்களின் ஆட்சி போன்று இருக்க வேண்டும்' எனக் கூறினார்.ஆம்... கலீபாக்கள் யாருமே, பத்தடுக்கு மாளிகையிலும், பஞ்சு மெத்தையிலும், குளு குளு அறையிலும் உட்கார்ந்து லஞ்சம், ஊழலில் புரண்டு ஆட்சி நடத்தியதாக வரலாறு இல்லை.

39 மனைவிகளைக்​ கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தி​ற்கு சொந்தக்கார​ரான இந்தியர்

இச்செய்தியை வாசிப்பவர்கள் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஒரு மனைவியை கட்டியே ஒழுங்காக குடும்பம் நடத்த முடியவில்லை என அங்கலாய்ப்பவர்கள் நம்மில் பலருண்டு. ஆனால் சியோன்னா சனாவுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்


சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதுமையை வெல்ல நெல்லிக்கனி

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.

முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

கிளைகளும்,கோத்திரங்களும்………

அட நீ இந்த வூட்டு புள்ளயா? உன்னோட தடிச்ச உதட்ட வச்சே கண்டு புடிச்சிட்டேன்.சரியா?
அட நீ அந்த அவோ வூட்டுப் பையன்தானே,உன்னோட கண்ணை வச்சி தெரிஞ்சி போச்சு.
இப்பிடி சிலபேரோட முக சாடை,மூக்கு அளவு,முரசு,உதடு,முடி,தொந்தி,உயரம்-குள்ளம்,நடை,பேச்சு,கலர் இதையெல்லாம் வச்சி,ஒவ்வொரு குடும்பத்தையும் நாம அடையாளம் காண முடியும்.
இதெல்லாம்,இந்த வித்தியாசமெல்லாம் நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இறைவன் படைத்துள்ளான்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட சில குணாதியசங்கள் உண்டு.இந்த மாதிரியான சில வித்தியாசங்களை வைத்து,ஒருவர் மற்றவரை பழிக்கவோ,அல்லது இது மூலம் உயர்த்தி-தாழ்த்தி நடப்பது அறிவீனம்.
ஆனால் இப்படி மக்களில் பலர் சில குடும்பங்களில் உள்ள குணாதியசங்களை வைத்தோ,அல்லது அவர்களின் தனிப்பட்ட உடல் வாகை வைத்தோ சாடி பேசுவதைக் காண்கிறோம்.அது மிக தவறு.
உதாரணமாக,குள்ளமான ஒருவரை பார்த்து.ஜப்பான்காரன் வர்றான் பாரு என்றோ வெள்ளை நிறத்தில் ஒருவனைக் கண்டால் “வெள்ளப்பாச்ச”என்பது கருப்பாய் இருந்தால் “அடுப்புக்கரி”என்பதும் இப்படி நிறைய சொல்லலாம்.இதை நாம் உடனே கை விடவேண்டிய தீய பண்பாகும்.அல்லாஹ் இதை விரும்புவதில்லை.

இறைவன் முன் அனைவரும் சமம்.இறை அச்சம் உள்ளவர் யாரோ,அவர் ஏழையாக இருந்தாலும்,அழகற்றவராக இருந்தாலும்,கருப்பராக இருந்தாலும் அவரே மனிதர்களில் உயர்ந்தவர்,சிறந்தவர்.
இதுதான் இஸ்லாம் காட்டும் வழி.
மனிதர்களே!
உங்களை ஓர்ஆண் ஒருபெண்ணிலிருந்தே

படைத்தோம்.

நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதர்ககாக

உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்

உங்களில்[இறைவனை] அதிகம்அஞ்சுவோரே

இறைவனிடன் சிறந்தவர்.

இறைவன் அறிந்தவன்;நன்கறிபவன்.

திருக்குர்ஆன்
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் இறையச்சம் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
மனிதர்களே!
உங்களை ஓர்ஆண் ஒருபெண்ணிலிருந்தே

படைத்தோம்.

நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதர்ககாக

உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்

உங்களில்[இறைவனை] அதிகம்அஞ்சுவோரே

இறைவனிடன் சிறந்தவர்.

இறைவன் அறிந்தவன்;நன்கறிபவன்.

திருக்குர்ஆன்
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் இறையச்சம் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
நன்றி:  http://anboduungalai.blogspot.com

தோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன! குர்ஆன்

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு.

இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.

அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம்.

வாக்காளர் பட்டியலில் நம்மைபற்றிய விவரங்கள் சரிபார்க்க

நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா – வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் – முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.துபாயில் வேலை செய்யும் ஒருவருக்கு சைதாப்பேட்டையில் ஒட்டு இருக்கும். மகன்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்வளவு பொறுப்பாக சென்று நமது பெயர் விவரங்களை சரிபார்ப்பர்காள என்றால் இல்லை. நமது பெயர்பார்க்கும் வேலையைஅரசு வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை விவரத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்க நாம் சைதாப்பேட்டை வரவேண்டியதில்லை. துபாயில் இருந்தே விவரங்களை சரிபார்க்கலாம். இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்

பெருமானார் மனைவியர் (உம்முஹாத்துல் முஃமினீன்)

பெருமானார் மனைவியர் (உம்முஹாத்துல் முஃமினீன்)
வ.எமனைவியர் பெயர்கள்வாழ்ந்த  ஆண்டுகள் இறந்த ஆண்டுகள்
01கதீஜா பின்த குவைலித் (ரலி)68ஹிமு3
02ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)68ஹி-54
03ஆயிஷ பின்த் அபீபக்ர் (ரலி)67ஹி-57
04ஹஃப்ஸா பினத் உமர் (ரலி)60ஹி-45
05ஸைனப் பின்த் குஸைமா(ரலி)32ஹி-04
06உம்மு ஸலமா பின்த் அபீ உமையா (ரலி)91ஹி-61
07ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி)50ஹி-20
08ஜுவைரிய்யா பினத் ஹாரித் (ரலி)72ஹி-50
09அன்னை ஸபிய்யா பின்த் ஹுயைய் (ரலி)60ஹி-52
10உம்மு ஹபீபர (ரம்லா) பின்த் அபீ ஸுஃப்யான்,  (ரலி)74ஹி-44
11மைமூனா பினத் ஹாரித் (ரலி)69ஹி-51
பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவியரை உலக முஸ்லிம்களின் அன்னையர் என திருமறை திருக்குர்ஆன் போற்றிப் புகழ்கிறது.

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ

நம்பிக்கை கொண்டோருக்கு இந்த நபியவர்கள் தங்களின் உயிர்களைவிட மேலானவர்கள்.அவர்களின் மனைவியா அவர்களுக்கு அன்னையர் ஆவார்கள் ( அல்அஹ்ஸாப் -32:6 )
அவர்கள் சாதாரணப் பெண்களைப் போன்றவர்கள் அல்லர். மிகவும் மாண்புமிக்கவர்கள்.உலகிலுள்ள ஏனையப் பெண்களைவிட எல்லா வகையிலும் மிகவும் சிறந்து விளங்குபவர்கள்.அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் உயர்ந்தவர்கள். இதை அல்லாஹ்வே அருள்மறையில் உலகுக்கு அறிவிக்கிறான்.

يَا نِسَاء النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاء

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றவர்களல்லர். (33:32) இவர்களை ஏனையப் பெண்களுடன் எந்த வகையிலும் ஒப்பிடமுடியாது. அன்னையர் அந்தஸத்தில் இருப்பதால் தான் இவர்கள் யாவரும் “உம்முஹாத்துல் முஃமினீன்” (முஃமின்களின் தாய்”) என கெளரவிக்கப்படுகிறார்கள்.நபியின் மரணத்திற்குப் பிறகு இவர்களை எவரும் திருமணம் செய்யவும் அனுமதிகிடையாது.
எனவே நமது அன்னையர் நிலையில் வைத்து அவர்களை நேசிப்பதும், போற்று வதும் நம் அனைவர் மீதும் கடமையாகும். அவர்களின் வரலாறுகளை இங்கே சுருக்கமாகக் காண்போம்.
கதீஜா பின்த் குவைலிது (ரழி)
நபி (ஸல்) அவர்கள் தங்களின் 25வது வயதில் 40 வயது நிரம்பிய கதீஜா (ரழி) அவர்களை மணமுடித்தார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை நபி (ஸல்) வேறு எவரையும் மணமுடிக்கவில்லை. கதீஜா (ரலி) அவர்களின் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு இரு ஆண் களம் நான்கு பெண்களும் பிறந்தனர். ஆண் குழந்தைகள் காஸிம் , அப்துல்லாஹ் இருவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். அவர்களின் உடல்கள் மக்காவிலுள்ள ஜன்னத்துல் முஅல்லாவில் அடக்கம் செய்யப்பட்டன.
பெண் பிள்ளைகள் ஸைனப் (ரலி), ருகைய்யா(ரலி), உம்மு குல்தூம்(ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோராவர்.
ஹிஜ்ரத்துக்கு முன்னர் அபுல் ஆஸ் இப்னு ரபீஆவுக்கு ஸைனபை நபி (ஸல்) மணமுடித்து வைத்தார்கள். இவர் ஜைனபுடைய சிறிய தாயாரின் மகனாவார். ருகையா, உம்மு குல்சூம் ஆகிய இருவரையும் ஒருவர் பின் ஒருவராக உத்மான் (ரலி) அவர்களுக்கு  மணமுடித்து வைத்தனர். பத்ரு, உஹுதுப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஃபாத்திமாவை அலீ (ரலி) அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள் ஃபாத்திமாவுக்கு ஹசன், ஹுசைன்,முஹ்ஸின், ஸைனப், உம்மு குல்தூம் என்ற ஐந்து பிள்ளைகள் பிறந்தனர்.
மற்ற முஃமின்களை விட நபி (ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட பல காரணங்களை முன்னிட்டு நான்குக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது அனுமதிக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) பதினொன்று திருமணங்கள் செய்திருந்தார்கள். அதில் கதீஜாவும், ‘ஏழைகளின் தாய்’ என புகழப்பட்ட ஜைனப் பின்த் குஸைமாவும் நபி (ஸல்) உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே மரணித்து விட்டார்கள். ஏனைய ஒன்பது மனைவிகள் உயிருடன் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தனர்.
2) ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)
கதீஜா (ரழி) அவர்கள் இறந்து ஒரு மாதத்திற்குப் பின் நபித்துவத்தின்  பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் இவர்களை மணமுடித்தார்கள். ஒன்றுவிட்ட சகோதரன் மகன் ஸக்ரான் இப்னு அம்ருக்கு இவரை மணமுடித்து வைக்கப்பட்டது. அவர் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 54, ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.
3) ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரலி)
ஸவ்தா (ரழி) அவர்களை மணமுடித்து ஓராண்டுக்குப் பின் நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில், ஹிஜ்ரத்துக்கு இரண்டாண்டுகள், ஐந்து மாதங்களுக்கு முன் ஆயிஷாவை அவரது 6 வது வயதில் மணமுடித்தார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின் ஏழு மாதங்கள் கழித்து ஆயிஷாவின் 9 வது வயதில் அவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரழி) மட்டுமே நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் கன்னிப் பெண்ணாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை மிக அதிகம் நேசித்தார்கள். இச்சமுதாயப் பெண்களில் அவர்களே அதிக மார்க்க ஞானமுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். 2210 நபிமொழிகளை அறித்த பெருமைக்குரிய பெண்மணியாவார்.
ஏனைய உணவுகளை விட ‘தரீத்’ என்ற உணவுக்குரிய சிறப்பைப் போன்று ஏனைய பெண்களை விட ஆயிஷா (ரழி) மிகச் சிறப்புப் பெற்றிருந்தார்கள். ஹிஜ்ரி 57 அல்லது 58 ஆம் ஆண்டு ரமளான் பிறை 17ல் மரணமானார்கள். ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
4) ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
இவரது கணவர் குனைஸ் இப்னு ஹுதாஃபா சஹ்மி (ரலி). பத்ர்-உஹுதுக்கு இடைப்பட்ட காலத்தில் மரணமாகிவிடவே, இவர் விதவையானார். இத்தா முடிந்து, ஹிஜ்ரி 3, ஷஅபான் மாதத்தில் இவரை நபி (ஸல்) மணமுடித்துக் கொண்டார்கள். ஹஃப்ஸா (ரழி) ஹிஜ்ரி 45ல், ஷஅபான் மாதம் தமது 60வது வயதில் மரணமானார்கள். இவர்களையும் ஜன்னத்துல் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.
5)ஸைனப் பின்த் குஸைமா (ரலி)
இவர் ஹிலால் இப்னு ஆமிர் இப்னு ஸஃஸஆவின் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் ஏழைகள் மீது அதிகம் இரக்கமும் கருணையும் உடையவராக இருந்ததால் (உம்முல் மஸாகீன்) ‘ஏழைகளின் தாய்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டார். இவர் உபைப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். கணவர் உஹுத் போல் ஷஹீதான பின்பு அவரை நபி (ஸல்) ஹிஜ்ரி 4ல் மணமுடித்தார்கள். மணமுடித்து ஏறக்குறைய 3 மாதங்கள் கழித்து ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவருக்குத் தொழ வைத்து பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.
6) உம்மு ஸலமா ஹிந்த் பின்த் ஸஹ்ல் அபூ உமையா (ரலி)
இவர் நபி(ஸல்) அவர்களின் பால் குடி சகோதரர் அபூ ஸலமாவின் மனைவியாக இருந்தார். அந்தத் தம்பதியருக்கு பல பிள்ளைகள் இருந்தனர். ஹிஜ்ரி 4, ஜுமாதால்அல்ஆகிராவில் அபூ ஸலமா (ரழி) மரணமானார். அதே ஆண்டு ஷவ்வால் மாதக் கடைசியில் நபி (ஸல்) உம்மு ஸலமாவை மணமுடித்தார்கள். இவர் மார்க்க ஞானமும் நுண்ணறிவும் கொண்ட பெண்ணாகத் திகழ்ந்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 59 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 62) தமது 84 அல்லது 91-வது வயதில் மரணமடைந்தார்கள். இவரையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.
7) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் இப்னு ருபாப் (ரலி)
இவர் அஸத் இப்னு குஜைமாவின் குடும்பத்தைச் சார்ந்தவர். நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஜைத் இப்னு ஹாரிதாவின் மனைவியாக இருந்தார். ஜைத் (ரலி) தலாக் விவாக ரத்து செய்து , இத்தா காலம் முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்கு அவரை அல்லாஹ் மணமுடித்து வைத்ததாக பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
‘ஸைது’ (என்பவர்  தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். (அல்குர்ஆன் 33:37)
வளர்ப்பு மகன் தொடர்பான சட்டங்கள் அத்தியாயம் அஹ்ஸாபில் அருளப்பட்டன. அதனை அடுத்துப் பார்ப்போம். ஹிஜ்ரி 5 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 4, துல்கஅதா மாதம் நபி (ஸல்) ஜைனப் (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அதிகம் தர்மம் செய்பவராகவும் அதிகம் வணக்கம் புரிபவராகவும் விளங்கினார். தங்களது 53வது வயதில் ஹிஜ்ரி 20ல் மரணமெய்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் நபியை அடுத்து மரணமெய்தி யவர்களில் இவரே முதலாமவர். இவருக்கு உமர் (ரழி) தொழுகை நடத்தி பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.
ஜுவைய்யா பின்த் அல்ஹாரித் (ரலி)
இவர் தந்தை ஹாரித், குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்தலக் கிளையினரின் தலைவராவார். நபி (ஸல்) பனூ முஸ்தலக் மீது படையெடுத்த போது கைதியான இவர், ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரழி) என்ற நபித்தோழருக்கு (கனீமா) வெற்றிப் பொருளில் பங்காகக் கிடைத்தார். இவரைச் சில தொகைகள் பெற்றுக் கொண்டு உரிமையிட தாபித் முடிவு செய்தார். அத்தொகையை நபி (ஸல்) செலுத்தி விட்டு ஹிஜ்ரி 6, (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 5) ஷஅபானில் மணமுடித்துக் கொண்டார்கள். இத்திருமணத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவியின் உறவினர்களை எங்ஙனம் அடிமையாக வைத்திருப்பது என்று எண்ணி முஸ்லிம்கள் தங்களிடம் அடிமைகளாக இருந்த நூறு பனூ முஸ்தலக் குடும்பத்தார்கள் அனைவரையும் விடுதலை செய்து விட்டனர். எனவே, தனது சமூகத்தாருக்கு அல்லாஹ்வின் அருள் பொருந்தியப் பெண்ணாக இவர் விளங்கினார். தனது 65வது வயதில் ஹிஜ்ரி 56 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 55  ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார்.
9) உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூஸுஃப்யான் (ரலி)
இவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். அவர் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தை பிறந்ததால் உம்மு ஹபீபா என்றழைக்கப்பட்டார். இவர் தனது கணவருடன் அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார். அங்கு உபைதுல்லாஹ் கிறிஸ்துவராக மாறினார். சில காலத்திற்குப் பின் அங்கேயே இறந்து போனார். உம்மு ஹபீபா (ரழி) இஸ்லாத்தில்உறுதியாக இருந்தார்.
ஹிஜ்ரி 7, முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமைய்யா ளம்ரீ என்ற தோழரை மன்னர் நஜ்ஜாஷியிடம் அனுப்பி, அங்குள்ள முஸ்லிம்களை அழைத்து வரச் சொன்ன போது உம்மு ஹபீபாவை மணமுடிக்கும் விஷயமாகவும் நஜ்ஜாஷியிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில் நபி (ஸல்) குறிப்பிட்டிருந்தார்கள். அவர் நபி (ஸல்) சார்பாக நானூறு திர்ஹங்கள் மஹர் கொடுத்து உம்மு ஹபீபாவை நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்து ‘ஷுரஹ்பீல் இப்னு ஹஸ்னா’ என்ற தோழருடன் அனுப்பி வைத்தார். இக்குழுவினர் நபி (ஸல்) கைபர் போரில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்தனர். போரிலிருந்து திரும்பிய பின் நபி (ஸல்) இவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 42ல் இவர் மரணமெய்தினார். சிலர் ஹிஜ்ரி 44 என்றும், சிலர் 50 என்றும் கூறுகின்றனர்.
10) ஸஃபிய்யா பின்து ஹுயய் (ரலி)
இஸ்ரவேலர்களின் பனூ நுளைர் கூட்டத்தாருடைய தலைவன் மகள். கைபர் போரில் கைதியானார். இவரை நபி (ஸல்) தனக்காக எடுத்துக் கொண்டு இஸ்லாமுக்கு வரும்படி அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளவே நபி (ஸல்) அவரை உரிமைவிட்டு கைபரிலிருந்து திரும்பும் போது ஹிஜ்ரி 7ல் மணமுடித்துக் கொண்டார்கள். மதீனாவுக்குச் செல்லும் வழியில் கைபரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் இவருடன் நபி (ஸல்) வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
11) மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி)
 இவர் உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் ஹாரிதின் சகோதரியாவார். நபி (ஸல்) உம்ரத்துல் களாவை முடித்துத் திரும்பும் போது ஹிஜ்ரி 7, துல்கஅதாவில் இவரை மணமுடித்தார்கள். மக்காவிலிருந்து 9 மைல் தொலைவிலுள்ள ‘ஸரஃப்’ என்ற இடத்தில் இவருடன் நபி (ஸல்) இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 61ல் இதே ஸரஃப் என்ற இடத்திலேயே இவர் மரணமடைந்தார் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். மரணமடைந்த ஆண்டு சிலர் ஹிஜ்ரி 38 என்றும், சிலர் 63 என்றும் கூறுகிறார்கள்.
ஆக, மேற்கூறிய 11 பெண்களை நபி (ஸல்) மணமுடித்து வாழ்க்கை நடத்தினார்கள். இவர்களில் கதீஜா, ஸைனப் பின்த் குஸைமா (ரலி) ஆகிய இருவரும் நபி (ஸல்) வாழும்போதே மரணமானார்கள். மற்ற மனைவிமார்கள் அனைவரும் வாழும்போது நபி (ஸல்) மரணமானார்கள்.
இவர்களைத் தவிர, கிலாஃப் குடும்பத்தாரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், கிந்தா குடும்பத்தைச் சேர்ந்த ஜுவைனிய்யா என்ற பெண்ணைiயும் நபி (ஸல்) மணமுடித்தார்கள். ஆனால், அவர்களுடன் வாழ்க்கை நடத்தவில்லை. இது தொடர்பாக பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அவற்றை இங்கு விவரிக்க இயலாது.
மாரியத்துல் கிஃப்திய்யா(ரலி)
நபி (ஸல்) அவர்களுக்கு இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். ஒன்று: மன்னர் முகவ்கிஸ் வழங்கிய மாரியத்துல் கிஃப்திய்யா. நபி (ஸல்) அவர்கள் மூலம் இவருக்கு ‘இப்றாஹீம்’ என்ற ஆண் மகவு பிறந்து பாலப்பருவத்திலேயே (ஹிஜ்ரி 10, ஷவ்வால் பிறை 28 அல்லது 29, (கி.பி. 632 ஜனவரி 27ல்) இறந்து விட்டது.
ரைஹானா பின்த் ஸைது(ரலி)
இரண்டாவது அடிமை: ரைஹானா பின்த் ஸைது. இவர் பனூ நுளைர் அல்லது பனூ குறைளா சமூகத்தைச் சேர்ந்தவர். பனூ குறைளாவுடன் போரில் கைது செய்யப்பட்ட இப்பெண்ணை நபி (ஸல்) தனது பங்கில் எடுத்துக் கொண்டார்கள். இவரை உரிமையிட்ட பிறகு நபி (ஸல்) மணமுடித்தார்கள், எனவே, இவர் நபி (ஸல்) அவர்களின் மனைவியாகி விடுகிறார் என்று வேறு சிலர் கூறுகின்றனர். அறிஞர் இப்னுல் கய்யிம் ” (ரஹ்) ‘முந்திய கூற்றே சரியானது’ என்க்கூறுகிறார். அபூ உபைதா (ரஹ்) என்ற அறிஞர் “மேலும் இரண்டு அடிமைப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தார்கள் ஒருவர் ஜமீலா, இவர் போர்க் கைதியாக கிடைத்தவர். மற்றொருவர் பெயர் தெரியவில்லை, அவரை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்” எனக்கூறப்படுகிறது. (ஸாதுல் மஆது)

by Dr. Ahmad Baqavi PhD.

இந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியா விடுதலைப் பெற்ற நேரத்தில் அரபு நாடுகளின் மையப் பகுதியில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாக திணக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வல்லரசுகளின் இந்த அடாவடித்தனத்தை அந்த நேரத்தில் புதிதாக சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அரபு நாடுகளோடு பாரம்பரிய தொடர்பு வைத்துள்ள இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து யூதர்களுக்கென்று மத ரீதியாக உருவாக்கப்படுவதை கொள்கை ரீதியாக எதிர்த்தது.
தேசத் தந்தை காந்தியடிகள் யூதர்களோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தாலும் மத அடிப்படையில் ஒரு நாடு உருவாவதை கடுமையாக எதிர்த்தார். காரணம் அந்த நேரத்தில் மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. அது மட்டுமல்லாமல் வேறொரு வேறொரு வலுவான காரணமும் இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்ப்பதற்கு இந்தியாவிற்கு இருந்தது. இந்திய நாடு பிரிவினையின் போது முறையாக தீர்க்கப்படாமல் விடப்பட்ட கஷ்மீர் பிரச்சினை மிகப் பெரிய அளவில் வெடித்து சுதந்திரம் பெற்ற உடனேயே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. இதனால் கஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்கு இந்தியா எடுத்துச் சென்றது.
கஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் என்பதால், இதில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அரபு நாடுகள் அனைத்தும் கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று இந்திய அரசியல் வல்லுனர்கள் கருதியதால் இஸ்ரேல் உருவாக்
கத்தை தொடக்கத்தில் இந்தியா எதிர்த்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் உருவாவதை இந்திய அரசியல் தலைவர்கள் பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள், அந்த அமைப்போடு சிந்தாந்த ரீதியாக தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் என்று பலரும் ஆதரித்தனர் வரவேற்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் 1950ல் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்து பம்பாயில் இஸ்ரேல் நாட்டின் துணை துதரகம் அமைத்திட ஒப்புதல் அளித்தது.
ஜவஹர்லால் நேரு அவர்கள் 1954ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில்; “இஸ்ரேலின் உருவாக்கம் என்பது ஒரு சர்வதேச விதிமீறல் என்ற சட்ட முன்வடிவை ஒரு கட்சி என்ற முறையில் ஆதரிக்கமாட்டோம்” என்று பகிரங்கமாக கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் இந்திய வெளியுறவுக்குறித்த தெளிவான கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்ற வாதம் எழுந்தது. அதன் பிறகு உருவானது தான் முதலாளித்தும் வல்லரசு சாராத சுதந்திரமான அணி சேராக் கொள்கை.
கட்சியிலும் நாட்டிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டதிற்கு இந்தியா பகிரங்க ஆதரவு தெரிவித்து வந்தாலும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுடன் மறைமுகமான தொடர்புகளை வைத்திருந்தனர். இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் பகிரங்கமாகவே தொடர்பு வைத்து வந்தனர் என்பதும் வெளிப்படையாக தெரிந்த செய்தி தான்.
வல்லரசுகளுக்கு மத்தியில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில் சோவியத் ஆதரவு நிலையை எடுத்திருந்த இந்தியா தனது அண்டை நாடுளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள சோவியத் ரஷ்யாவிட மிருந்து தனது இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை பெற்று வந்தது. இன்றைக்கும் இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் ஏற்றக்குறைய 70 விழுக்காடு ஆயுதங்கள் சோவியத் ரஷ்யா தயாரிப்பு தான். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு அந்நாட்டில் நவீன ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் சீர் கெட்டு போர் அபாயம் அதிகரித்தது. சோவியத் ரஷ்யா எந்த அளவிற்கு இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ததோ அதற்கு சற்றும் குறையாமல் பாகிஸ்தானுக்கும் சற்று கூடுதலாக சீனாவிற்கும் வழங்கியது. இது இந்தியாவிற்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது.
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் அதன் ஆயுதங்களுக்கு மாற்றாகவும் அதைவிட நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாட்டின் உறவு இந்தியாவிற்கு தேவைப்பட்டது. சோவியத் யூனியனோடு இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவிற்கு நவீன ஆயுதங்கள் கொடுப்பதற்குத் தயங்கிய நிலையில் அமெரிக்காவின் தயவால் பல நவீன ஆயுதங்களை வைத்துள்ள இஸ்ரேலின் பக்கம் இந்தியாவின் கவனம் திரும்பியது.
ஏற்கனவே இஸ்ரேல் அரசுடன் இரகசிய உறவு வைத்திருந்த இந்தியாவிற்கு (பார்க்க : இரகசிய உறவு) இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது. இஸ்ரேலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தயவு கிடைப்பதின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதோடு அரபு நாடுகளுடனான இந்திய உறவில் விரிசல் ஏற்படுத்த முடியும் என்று திட்டமிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இந்தியாவிற்கு பெருகி வரும் ஆபத்துகள் என அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது இஸ்ரேல். அதன்பிறகு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் காரணமாக இன்றைய நிலையில் இந்தியாவிற்கு இராணுவ தளவாடங்கள் விற்பதில் உலகின் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. இதை துறை வாரியகப் பார்ப்போம்.
இரகசிய தொடர்பு :
1969-ல் “ரா” என்ற உளவு அமைப்பை தொடங்கிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ராமேஷ் வர் நாத் காவோ என்ற அதிகாரியை அதற்கு தலைவராக நியமித்தார். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் உடன் இரகசிய உறவுகளை உருவாக்கிட காவோ விற்கு பிரதமர் இந்திரா உத்திரவிட்டார். “ரா”-மொஸாத் கூட்டணி சீனா, பாகிஸ்தான் வட கொரியா ஆகிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இரகசியமாக தொடர்ந்த இந்த “ரா” – மொஸாத் உறவு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த நேரத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டது.பாகிஸ்தான் அரசு கட்டா என்ற இடத்தில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை இரகசியமாக நிறைவேற்றி வந்தது. இதை அறிந்த அன்றைய அமெரிக்க ஜிம்மி கார்டர் அரசு பிரான்ஸ் உதவியை தடுத்துவிட்டது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு இதை இரகசியமாக வைத்திருந்தது. இந்தச் செய்தியை மோப்பம் பிடித்த மொஸாத் “ரா” காதில் போட அது நேராக மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வர அவர் நேரிடையாக பாகிஸ்தான் அதிபர் ஜியா-வுல் ஹக்கிடம் “நீங்கள் கட்டா நகரில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று எனக்கு தெரியும். எங்களது “ரா” அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று வெளிப்படையாக தெரிவித்ததற்கு பிறகு தான் “ரா” மொஸாத் உளவு அமைப்புகளின் கள்ளக் கூட்டு வெளி உலகிற்கு தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு மொஸாத்தோடு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் உறவு ஏற்படுத்திக் கொண்டது வேறுகதை.
திருப்பு முனை :
Organaisation of Islamic Conference (OIC)என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு 1986ல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்திய – இஸ்ரேல் உறவுகளில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஐ.நா. சபையின் அறிக்கையின் அடிப்படையில் கஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து ளிமிசி அறிக்கை வெளியிட்டது. இந்தியா இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ளிமிசி குற்றம் சுமத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்தச் செய்தி இந்திய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட இந்தியா, இது பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின் காரணமாக எழுதப்பட்டது என்று கருத்துக் கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு தொடர்பான தனது அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்திய அரசு.
துதரக தொடர்பு :
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக 1992 ஜனவரியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இஸ்ரேலோடு முழுமையான துதரக உறவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்து வந்த அரசுகள் இஸ்ரேலோடு பல்வேறு துறைகளில் பல உடன்படிக்கைகளை செய்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர் வருகை :
1997 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதர் ஐஸர் வைஸ்மென் இந்தியா வந்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் இவர் தான். முதன் முறையாக ஆயுத ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பராக் – 1 என்ற நவீன ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் கப்பலில் இருந்து பாயும் ஹார்ப்பூன் என்ற ஏவுகணையை இடை மறித்து தாக்கும் வல்லமை பெற்றது இந்த பராக் – 1 ஏவுகணை. இந்திய – இஸ்ரேலின் இந்த ஒப்பந்தத்தை கண்டு கதி கலங்கிய பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து றி3-சிமிமி ளிக்ஷீவீஷீஸீ என்ற போர் விமானத்தையும், மேம்படுத்தப்பட்ட ஹார்ப்பூன் ஏவுகணைகள் 27 ஐயும் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பலமுறை இஸ்ரேலிற்கு பயணம் செய்து புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்து வந்து உருவாக்கப்பட்ட பிருத்வி மற்றும் அக்னி ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டது.
கடற்படை :
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்திய கடற்படைக்கு மேலும் வலுவூட்டி தங்களது நாட்டின் சரக்கு போக்குவரத்து மற்றும் கடல் வழி போக்கு வரத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்திட இந்திய கடற்படையோடு சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் இஸ்ரேலிய கடற்படை சுதந்திரமாக ஈடுபட்டு வருகிறது. காரணம், மத்திய தரைக் கடல் பகுதியில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அங்கே, இஸ்ரேலால் சுதந்திரமாக செயல்பட முடியலவில்லை. சமீப காலமாக இந்திய பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணைச் சோதனைகளை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
விமானப் படை :
1997 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 32 ஆளில்லா உளவு விமானங்கள் வாங்கப்பட்டன. றிலீணீறீநீஷீஸீ கிணிகீமிசி என்ற அதி நவீன ராடார்கள் வாங்கப்பட்டன. இவை பாகிஸ்தான் உடனான கார்கில் போரின் போது இந்திய இராணுவத்திற்கு பெரிதும் உதவியாய் இருந்தது. ரஷ்யாவின் மிக் 32 ரக விமானங்களை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில் நுட்பமும் பெறப்பட்டன. இந்திய வான் எல்லையிலிருந்தே பாகிஸ்தான், மற்றும் சீனாவின் 400 கிலோ மீட்டர் து£ரத்தில் இருக்கும் இடங்களை மிக துல்லியமாக கண்காணிக்கும் அதி நவீன கிகீகிசிஷி என்ற 6போர் விமானங்களை இந்தியா இஸ்ரேலிடமிருந்து பெற்றுள்ளது.
உளவு சாட்டிலைட் :
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் சந்திராயன் விண்கலம் ஏவுவதில் உதவி செய்வது மேலும் இஸ்ரேலின் Tec SAR என்ற உளவு சாட்டிலைட்டை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO கடந்த 2008 ஜனவரி 22 அன்று விண்ணில் ஏவியது. இஸ்ரேலில் ராக்கெட் ஏவுதளம் இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஏவுவது பாதுகாப்பானதும் செலவு குறைவானதுமாக கருதப்படுகிறது. 2008ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவியோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட RISAT – 2 அதி நவீன சாட்டிலைட்டை இந்தியா ஏவியது. இந்த சாட்டிலைட்டிலிருந்து இரவு நேரத்தில் கூட அடர்ந்த மேக மூட்டம் காணப்பட்டாலும் அவற்றையும் தாண்டி மிக துல்லியமாக படமெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
இந்துத்துவ தொடர்பு :
2007ல் உலக யூத – இந்து மத தலைவர்கள் சிந்திப்பு என்ற பெயரில் யூத – பிராமணர்கள் சந்திப்பு நடைபெற்றது. 2007 பிப் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற இச்சந்திப்பில் இஸ்ரேலின் தலைமை ராபி யோனா எட்ஸ்கர் மற்றும் பிராமண சாமியார் தயானந்த சரஸ்வதி ஆகியோர் தலைமையில் யூதர்களும் பிராமணர்களும் சந்தித்து. யூத மதம் மற்றும் பிராமணர்களின் ஆரிய மதம் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
விடுதலை பெற்ற இந்தியாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடக்க காலத்தில் ஜவஹர்லால் நேரு வகுத்து தந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் முதலாளித்துமும் சோசலிசமும் கலந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றி வந்தது. பின்னர் அந்த வழிமுறைகளிலிருந்து மாறி சோசலிஸ ரஷ்யா சார்பு வெளியுறவுக் கொள்கைகையும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றி வந்தது. பின்னர் 1992ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையையும் உலக மயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கையையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே இந்திய அரசின் கொள்கையாகவும் மாறிப்போய் விட்டது. இந்தியாவின் துவக்ககால கொள்கை நிலைப்பாடுகளால் உலகின் பல நாடுகளிடம் பாரம்பர்யமாகக் கொண்டிருந்த தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டது இந்தியா. ஆனால் பிற்காலத்தில் அந்தக் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதால் உலக நாடுகளிடம் கொண்டிருந்த பாரம்பர்யத் தொடர்புகளை இழந்தது மட்டுமல்லாமல் சில எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டுவிட்டது. அந்த எதிர்ப்புகளில் தீவிரவாதமும் அடங்கும். மேலும் துவக்க காலத்தில் அமெரிக்க, ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் இஸ்ரேலின் உருவாக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்த இந்தியா, பிற்காலத்தில் அவற்றோடு சமரசம் செய்து கொண்டது. குறிப்பாக உலக சமுதாயத்தாலும் 180 கோடி முஸ்லிம்களாலும் கடுமையாக வெறுக்கப்படுகிற பயங்கரவாத இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும்.
நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் சமூக வாழ்க்கையை மேம்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டுமே தவிர வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக வல்லரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதால் உண்மையான வளர்ச்சி ஏற்படாது. நம் நாட்டின் பாரம்பரியத்தன்மைக்கும் மரபு சார்ந்த உறவுகளுக்கும் ஒவ்வாத சிந்தனை உள்ளவர்களோடு கூட்டு சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல… இன்றைக்கும் இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தந்து அதன் மூலமாக அதிக அளவிற்கான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரபு நாடுகள்தான் இந்தியாவின் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாகவும் திகழ்கின்றன. அத்தகைய அரபுநாடுகளின் அதிருப்தியையும் இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களின் வெறுப்பையும்தான் இந்திய இஸ்ரேல் உறவு வெளிப்படுத்தி உள்ளது.
CMN சலீம்
நன்றி;சமூகநீதி

முஸ்லிம்களின் “ நமக்குநாமே எதிரி ” திட்டம்!.

தமிழக தேர்தலும் கழகங்களும் ஜமாத்களும் ஓர் பார்வை!.


இந்தப்படை போதுமா?. இன்னும்கொஞ்சம் வேணுமா?.

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர். த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அ.தி.மு.க வுடனும் முஸ்லிம் லீக் தி.மு.க வுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.

இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி (டிமான்ட்வைத்து) வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள்!. ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறை சின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.

மேலும் மனிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.
இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.

மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.

முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.

மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.

இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.

தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால், எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.

கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.


முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்:


1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3. தேசியலீக் கட்சி
4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)
8. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மனிதநேய மக்கள் கட்சி
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)
16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)
19. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி)
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை
(ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)
ஏம்பா, இனி நாம ரெண்டுபெரும்தான் மிச்சம்!. நாமளும் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு “பக்கீர்ஷா பேரவை ஜமாத் கழகம்” என்று ஆரம்பிச்சா என்ன?.

இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.


இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்!. ஆனால் ஊட்டச்சத்து இல்லாமல்தான் சவளைப் பிள்ளையாக நாம் இருக்கின்றோம். முதலில் இந்த சமுதாய இயக்கத்திற்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் நிலைதான் தற்போது உள்ளது. எனவே சிந்திப்பார்களா!. இவர்கள் ஒன்றினைந்து என்கட்டுரையை பொய்ப்பிப்பார்களா?.

--அதிரை முஜீப்

Thanks:http://adiraimujeeb.blogspot.com/2011/02/blog-post_06.html

மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஒரு அவசர வேண்டுகோள்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இன்று முதல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சரியான விவரங்களை வழங்குமாறு அனைவரையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன். கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜுமஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி .தமுமுக

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

valentineகிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)
மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல்  பாதுகாக்க வேண்டும்.
ஆனால்  மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை  பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க  யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!
ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.
மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு  ஏற்படுமா?
வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை”  அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு  தெரியும்.
இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக்  கொண்டிருப்பதினால்  தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.
ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
பிப்ரவரி 14  ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).
அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல்  கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

-தொகுப்பு:
எஸ்.எம் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி
 

இரவு மட்டும்.........

சமீபத்தில் ஒரு மருந்து கடை ரசீதின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த குறிப்புகள் மிகவும்உபயோகமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக மருந்து சீட்டில் மருத்துவர்கள் குறிப்பிடும் சில  சுருக்கங்களின் விளக்கம்:-
STAT(statim) - Start Immediately - உடன்  தொடங்கவும்.
O.M.  Omni mane (Morning Only) காலை மட்டும்.
O.D.  Omni die(Daily Only)  தினசரி ஒன்று மட்டும்.
B.D  Bis die(Daily twice) தினசரி இரண்டு.
T.D.S  Ter die sumendus (Thrice daily) தினசரி மூன்று.
Q.D.S  Quarter die sumendus (Four times only) தினசரி நான்கு.
Q.Q.H  Quarta quaque hara(Every four hours) நான்கு மணி நேரத்திற்கு ஒன்று.
A.C./B  Ante cibum (Before Food) சாப்பிடும் முன்.
P.R.N.  Pro re neta (when required) தேவைப்படும் பொது.
S.O.S  Only acute pain. வலி ஏற்படும் பொது.
H.S.  One at night இரவு மட்டும்.

மருந்து/மாத்திரைகள் உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:-

1. மருத்துவர் குறிப்பிட்ட காலம்வரை எழுதிக்கொடுக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இடைவிடாமல் சாப்பிடவும்.

2. மருந்துகள் வாங்கும்போது மருந்தின் பெயர்காலாவதியாகும் தேதி போன்றவற்றை அட்டையில் சரிபார்த்து வாங்கவும். போதிய வெளிச்சத்தில் மருந்தை சரிபார்க்காமல் உட்கொள்வதை தவிர்க்கவும்.

3. மாத்திரை அட்டையிலிருந்து பிரித்தேடுக்கும்போது மீதமுள்ள மாத்திரைகள் பக்கம் காலாவதியாகும் தேதி இருக்கும்படி பிரிக்கவும்.

4. மருந்துகளை குழந்தைகளின் கைகளில் எட்டாமலும்உலர்ந்த இடத்திலும் வைக்கவும்.

5. மருத்துவரிடம் செல்லும்  ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கிய மருந்து சீட்டையும்கடை ரசீதையும் தவறாமல் எடுத்து  செல்லவும்.

6. ஏதேனும் மருந்துகள் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால் மருந்தாளுனரிடம் தயக்கமில்லாமல் கேட்கவும்.   
நன்றி;அன்போடு உங்களை

தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி ஒரு பார்வை

tamil dailiyஊடகங்கள் பின்பற்றும் அரசியல் மற்றும் அவை வாசகர்களிடையே ஏற்படுத்தும் அரசியல் தாக்கம், விளைவு பற்றி பொதுவாகப் பேசப்படுகிறது. எனினும் அவற்றைக் கூர்ந்து நோக்கி நுட்பமாக அவை செய்துவரக்கூடிய அரசியல் செயல்பாட்டை தோலுரித்துக் காட்டுவது மிகவும் அவசியம்.
தமிழ் நாளிதழ் உலகில் பெரியஅளவுக்கு விற்பனையாகி பரவலான வாசகர்களைக் கொண்டிருக்கக்கூடியவை தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்டவை.
இதில் நடுநிலை நாளேடு எனப்படும் தினமணி வெகு காலமாக பார்ப்பனிய சிந்தனையை மையப்படுத்தி செயல்படும் நாளிதழ் என்ற விமர்சனம் உண்டு. எனினும் உலகமய கால மாற்றத்தில் தினமணி விற்பனையில் சுருங்கி, அது இன்று தள்ளாடித் தளர் நடைபோட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிற்கும் தினமணி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், படித்த மேட்டுக்குடியினர் நாளிதழ் என்ற அதன் பழைய அடையாளத்தை அநேகமாக இழந்து விட்டது என்று சொல்லலாம். எனவே அந்த நாளிதழின் மூலம் நிகழ்த்தப்படும் அரசியல் செயற்பாடு ஒரு குறுகிய வட்டத்துக்கு உட்பட்டது என்பதைச் சொல்ல வேண்டும்.
தினகரன் கலாநிதிமாறன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட தோற்றம் காட்டினாலும் அது பொதுவாக திமுக சார்புடையது என்பதை வாசகர்கள் தெளிவாக அறிவர். அதிலும் குறிப்பாக திமுகவிற்குள் நடக்கும் குடும்ப அரசியல் சதிராட்டத்தில், தங்களுக்குச் சார்பான பிரிவை தூக்கிப்பிடிக்கும் பணியை தினகரன் செய்து வருகிறது. (உ.ம்) கலைஞரை பிராண்ட்டாக பயன்படுத்துவது, ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அழகிரி, கனிமொழியை கழற்றி விடுவது. தினகரனைக் கூர்ந்து நோக்குவோர் இதை அறியமுடியும். ஆனால் இது மட்டுமே தினகரன் செய்யும் வேலை என்று நினைத்து விடக் கூடாது. இதனிலும் முக்கியமாக தினகரன் நவீன தாராளமயக் கொள்கையை மிக வலுவாக ஆதரித்து, இடதுசாரி முற்போக்கு சக்திகளை மிக இழிவாகக் காட்டி கீழே தள்ளும் வேலையை நன்கு திட்டமிட்ட முறையில் மிக, மிக கவனமாகச் செய்து வருகிறது. ஒவ்வொரு நாள் தினகரனையும் எடுத்துவைத்துப் பேசினால் இதை திட்டவட்டமாக நிரூபிக்க முடியும். இதுதான் நிரந்தர ஆபத்தானது. இதன் வாசகப் பரப்பு தமிழகத்தில் தினத்தந்தி, தினமலருக்கு அடுத்து மூன்றாமிடத்தில் தான் இருக்கிறது. (அதாவது விற்பனை அடிப்படையில் பிரதிகள் சற்று முன்பின் கூடுதலாக இருந்தாலும் வாசகர் வாசிப்பில் மேற்கண்ட இரண்டையும் அடுத்தது தான் தினகரன்.) எனவே ஒப்பீட்டளவில் தினகரனும் வரம்புக்கு உட்பட்டது தான்.
இப்போது தினமலர். இது தினமணி, தினகரனை விட ஆபத்தான நஞ்சேற்றும் காரியத்தைச் செய்து வருகிறது என்பதை பொதுவான முற்போக்கு நோக்கர்கள் அறிவர். தினகரன் செய்யத் தயங்கும் ஒரு விசயத்தை தினமலர் கூசாமல் செய்யும். அதுதான் மதவெறி நஞ்சேற்றுவது. பார்பனியத்தின் அரசியல், சமூக, கலாசாரக் கூறுகளை அதன் ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் இடத்தில் தனிமனிதத்துவத்தை நிறுத்துவது, ஆன்மிகம் என்ற பெயரில் மதப்பழமையைத் திணிப்பது, உலகமகா யோக்கியனைப் போல் தனக்கு முன்னால் இருக்கும் எல்லா விசயங்களையும் மிக மிகக் கீழ்த்தரமாகத் தாக்குவது, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது என்பதை விட அறிவுரை சொல்லும் தொனியில் வெளிப்படுத்துவது என அதன் ஒவ்வொரு அம்சமும், பாங்கும் வர்ணாஸ்ரமத்தின் நவீன வெளிப்பாடு தான்.
எனவே இடதுசாரி, திராவிட இயக்கங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட எதிர்க் கருத்தாளன் தினமலர் என்று சொல்ல முடியும். கண்ணுக்குத் தெரிந்த எதிரி என்பதால் இதை நாம் அறிந்து வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது. அதேசமயம் அரசியலை புரிந்து கொண்ட அல்லது அறிந்து கொண்ட வாசகர் பரப்பு மிக மிகக் குறைவு எனும்போது அதற்கு அப்பால் அது சென்றடையும் வாசகர்கள் (பெரும்பாலும் கீழ் மத்திய தர வர்க்கத்தார்) எத்தகைய தாக்கத்துக்கு இரையாக்கப்படுகிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இப்போது நாம் பேசப் போவது தினத்தந்தி பற்றி. தமிழ் நாட்டில் நாளிதழ் வாசிப்பைப் பரவலாக்கியதில் இந்த இதழின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி படித்துத் தான் தமிழ் கற்றுக் கொண்டேன் என்று திரைப்பட நடிகைகள் சொல்வதைப் பலர் படித்திருப்போம். பொதுவாக தினத்தந்தியை ஆளும்கட்சி நாளிதழ் என்று சொல்வதுண்டு. ஆட்சியாளர்களை ஆதரித்தால் அரசு விளம்பரம் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைப் பெறலாம் என்பது தான் இதற்கு பின்னணி என்பர். இந்த இதழ் நிகழ்த்தும் அரசியல் மிக மிக நுட்பமானது.
ஆளும்கட்சி பத்திரிகை என்று சொல்லப்பட்டாலும் முன்பெல்லாம் இவர்கள் செய்வது முன்னுரிமையை மாற்றிக் கொள்வது தான். அதாவது ஆளும்கட்சி செய்திகளை முதல் பக்கத்தில் அல்லது வாசகர்களின் பார்வைக்கு எளிதில் படும் வண்ணம் இடம் பெறச் செய்து, எதிர்க்கட்சிகள் செய்திகளை ஏதோ ஒரு மூலையில் போட்டிருப்பார்கள். எதிர்க்கட்சி செய்திகளை பின்னுக்குத் தள்ளுவார்களே அல்லாது போடாமல் விட்டுவிடமாட்டார்கள். ஆனால் தற்போது தினத்தந்தியின் இந்த செயல்பாட்டிலும் வேறுபாடு தெரிகிறது.
எந்தச் செய்தி எந்தப் பக்கத்தில் வர வேண்டும், எந்தப் படம் இடம் பெற வேண்டும், எது வரக்கூடாது என்பது உள்பட தமிழக முதல்வரின் கடைக்கண் பார்வைக்கேற்பத் தான் தினத்தந்தி வெளிவருகிறது. இது போகிற போக்கில் சேற்றை வாரிவீசும் குற்றச்சாட்டு அல்ல. தமிழகத்தின் சற்றேரக்குறைய ஒரு கோடி வாசகர்களை – அதுவும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த தமிழர்களைச் – சென்றடையும் நாளிதழ் என்பதால் கூர்ந்து கவனித்து, தொடர்ந்து படித்து வருவதால் இந்த மதிப்பீட்டை முன்வைக்கிறேன்.
அதற்கு ஒரேயொரு நிரூபணம் இன்றைய (நவம்பர் 27) தினத்தந்தி நாளிதழ். நீராராடியா தொலைபேசி உரையாடல் பதிவு பற்றி அதிமுக தலைவி ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அது திமுகவை அப்பட்டமாக அம்பலப்படுத்துவதாக உள்ளது. இந்த செய்தி தினத்தந்தியில் இடம் பெறவேயில்லை. அதாவது சற்றேரக்குறைய ஒரு கோடிப் பேரிடம் இந்த தகவல் மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுகவை யாரும் வீழ்த்த முடியாது என்ற கருணாநிதியின் செய்தி வாசகர் கவனத்தை ஈர்க்கும் இடத்தில் உள்ளது.
திமுக எதிர்ப்புணர்வு அல்லது அதிமுக ஆதரவு உணர்வு என்ற அடிப்படையில் இதைச் சொல்லவில்லை. இங்கு வலியுறுத்திக் கூற விரும்புவதெல்லாம், நான்கு முன்னணி நாளிதழ்களில் தினத்தந்தி நிகழ்த்தும் இத்தகைய அரசியல் செயல்பாடு தான் மிகுந்த விளைவை ஏற்படுத்தக்கூடியது என்பதுதான்.
ஒவ்வொரு நாள் இதழையும் எடுத்து வைத்து விலாவாரியாக விளக்கிக் கூறும் அளவுக்கு இந்த நாளிதழ்கள் அரசியல் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இதை அம்பலப்படுத்துவது மக்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமானது. மிகப் பெரும் கூட்டுச் செயல்பாட்டோடு இதை நடத்த வேண்டிய தேவை உள்ளது.
நன்றி:மாற்று&முத்துபேட்டை.org