கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கலீபாக்களின் ஆட்சி எங்கே?

நம் நாட்டுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன், "சுதந்திரம் கிடைத்த பின், இந்தியாவில் எப்படிப்பட்ட ஆட்சி நடக்க வேண்டும்' என, காந்தியிடம் நிருபர்கள் கேட்டபோது, "கலீபாக்களின் ஆட்சி போன்று இருக்க வேண்டும்' எனக் கூறினார்.ஆம்... கலீபாக்கள் யாருமே, பத்தடுக்கு மாளிகையிலும், பஞ்சு மெத்தையிலும், குளு குளு அறையிலும் உட்கார்ந்து லஞ்சம், ஊழலில் புரண்டு ஆட்சி நடத்தியதாக வரலாறு இல்லை.
 ஒவ்வொரு கலீபாவும், ஏழையோடு ஏழையாக, எந்த பிரதிபலனும் பார்க்காமல், மக்களுக்காக அல்லும், பகலும் உழைத்தனர்.ஏன்... தன் வீட்டு உணவிற்குக் கூட மூட்டைத் தூக்கிய கலீபாக்களும் உண்டு. அப்படிப்பட்ட கலீபாக்களை போன்ற ஆட்சியாளர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என, காந்தி விரும்பினார்.

ஆனால், காந்தி ஜெயந்தியன்று மட்டும் அவருடைய புகழ்பாடும் இன்றைய ஆட்சியாளர்கள், அவருடைய கொள்கையை நினைக்க மறுக்கின்றனர்.அன்று விட்டுச் சென்ற அதே காங்கிரஸ் தான், இன்றும் ஆட்சி செய்கிறது. இதில் வித்தியாசம் என்னவென்றால், அன்று தியாகிகள் இருந்தனர்; இன்று, மக்கள் பணத்தை மனிதாபிமானமே இல்லாமல் திருடும் துரோகிகள் உள்ளனர். காந்தியும், கடவுளும் சேர்ந்து இவர்களை மன்னிக்கவே போவதில்லை.

இளைஞர்களே... இந்த கருப்பு ஆடுகளை துரத்தி, கலீபாக்களின் ஆட்சியமைப்போம். நம்மால் முடியாதது எதுவுமே இல்லை. நாளைய வரலாறு நம்மை போற்ற போராடுவோம்
நன்றி;மணற்கேணிடைம்

0 கருத்துகள்: