தூக்கம் என்பது இரவானதும் நமது உடல் இளைப்பாறக் கிடைத்த விஷயம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தூக்கத்திற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலர் படுத்ததும் தூங்கி விடுவர். சிலர் மணி 12ஐ தாண்டினால் தான் தூங்கவே செல்வர். சிலர் புரண்டு புரண்டு படுத்து தூக்கத்துடன் போராடி கடைசியாக தூங்குவர். தூங்குவதிலும் பல வகைகள் உண்டு. ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போல பல உண்டு.
பொதுவாக கனவுகள் இல்லாத தூக்கமே சிறந்த தூக்கமாகும். கனவுகள் இல்லாமல் தூங்கி எழுந்தால்தான் உண்மையில் ஆழ்ந்த தூக்கத்தை தூங்கினீர்கள் என்று அர்த்தப்படும். கனவுகள் இல்லாத தூக்கத்தைக் கான சுவாசம் சீராக இருக்க வேண்டும். சீரான சுவாசம் இருப்பின் நல்ல தூக்கம் ஏற்படும். சுவாசத்தில் சிதைவு ஏற்பட்டால் தூக்கத்திலேயே மனம் அதிகம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். மனம் வேலை செய்வதுதான் கனவுகளின் அடிப்படையே.
சரி தூக்கத்தில் சுவாசத் தடை ஏற்பட என்னக் காரணம் இருக்கும். நமது உணவு முறைதான். தூக்கத்தைக் கெடுக்கும் பல உணவுகள் உள்ளன. தூக்கத்தைக் கொடுக்கும் உணவுகளும் உள்ளன. அவற்றைத் தேர்வு செய்து அளவோடு உண்பதுதான் தூக்கத்திற்குத் தேவையான சீரான சுவாசத்தை அளிக்கும்.
இரவில் சாப்பிடும் உணவானது அளவு குறைவான உணவாகவும், காரமில்லாத, வாயு சேர்க்காத உணவாகவும் இருப்பது மிகவும் முக்கியம்.
உடல் சுத்தமும், நல்ல காற்றோட்டமும் கூட தூக்கத்திற்கு அடிப்படையாகும். உறங்கப் போகும் முன் முகம், கை கால்களை சுத்தப்படுத்திக் கொள்வதும், நாம் படுக்கும் இடம் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவும்.
சாப்பிட்டவுடன் களைப்போடு சென்று படுக்கையில் விழுவது, சோம்பலையும், கெட்ட கனவுகளையும் அளிக்கும். பகல் தூக்கம் நிச்சயமாக இரவுத் தூக்கத்தைக் கெடுக்கும். சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு படுக்கச் சென்றால் நிச்சயமாக நல்ல தூக்கம் வரும்.
தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, மனத்திற்கும் ஓய்வளிக்கிறது. அதே போல தூங்காத மனிதர்களின் மனமும் சோர்வடைவதை காணலாம். சரியான தூக்கம் இல்லையே என்ற எண்ணமே, மனதிற்குள் கோபமாகவும், துக்கமாகவும் மாறக் கூடும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
நல்ல சீரான தூக்கம் மனதை ஆனந்தமான நிலையில் வைத்திருக்க உதவும். மனமே நமது அன்றாட காரியங்களுக்கு உறுதுணையாக இருக்கும். மனம் ஆனந்தமாக இருந்தால் நமது வேலையும் திருப்தியாக இருக்கும்.
தூக்கம் வராத நிலையில் புரண்டு புரண்டு படுப்பதை விட, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை செய்து பாருங்கள். மனம் உற்சாகம் அடைவதால் வராத தூக்கமும் விரைவில் வந்து சேரும். பிடித்த வேலை என்றால் பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது போன்றவை. தொலைக்காட்சி பார்ப்பதால் பலரது தூக்கம் பாதிக்கப்படுகிறது.
தூக்கம் கெட்டு எந்தப் பணியை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியாது. எனவே, தூக்கத்திற்குத் தேவையான விஷயங்களை நாம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
நன்றி:வெப்துனியா

0 கருத்துகள்:
கருத்துரையிடுக