இந்தியா விடுதலைப் பெற்ற நேரத்தில் அரபு நாடுகளின் மையப் பகுதியில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாக திணக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வல்லரசுகளின் இந்த அடாவடித்தனத்தை அந்த நேரத்தில் புதிதாக சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அரபு நாடுகளோடு பாரம்பரிய தொடர்பு வைத்துள்ள இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து யூதர்களுக்கென்று மத ரீதியாக உருவாக்கப்படுவதை கொள்கை ரீதியாக எதிர்த்தது.
தேசத் தந்தை காந்தியடிகள் யூதர்களோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தாலும் மத அடிப்படையில் ஒரு நாடு உருவாவதை கடுமையாக எதிர்த்தார். காரணம் அந்த நேரத்தில் மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. அது மட்டுமல்லாமல் வேறொரு வேறொரு வலுவான காரணமும் இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்ப்பதற்கு இந்தியாவிற்கு இருந்தது. இந்திய நாடு பிரிவினையின் போது முறையாக தீர்க்கப்படாமல் விடப்பட்ட கஷ்மீர் பிரச்சினை மிகப் பெரிய அளவில் வெடித்து சுதந்திரம் பெற்ற உடனேயே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. இதனால் கஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்கு இந்தியா எடுத்துச் சென்றது.
கஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் என்பதால், இதில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அரபு நாடுகள் அனைத்தும் கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று இந்திய அரசியல் வல்லுனர்கள் கருதியதால் இஸ்ரேல் உருவாக்
கத்தை தொடக்கத்தில் இந்தியா எதிர்த்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் உருவாவதை இந்திய அரசியல் தலைவர்கள் பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள், அந்த அமைப்போடு சிந்தாந்த ரீதியாக தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் என்று பலரும் ஆதரித்தனர் வரவேற்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் 1950ல் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்து பம்பாயில் இஸ்ரேல் நாட்டின் துணை துதரகம் அமைத்திட ஒப்புதல் அளித்தது.
கத்தை தொடக்கத்தில் இந்தியா எதிர்த்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் உருவாவதை இந்திய அரசியல் தலைவர்கள் பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள், அந்த அமைப்போடு சிந்தாந்த ரீதியாக தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் என்று பலரும் ஆதரித்தனர் வரவேற்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் 1950ல் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்து பம்பாயில் இஸ்ரேல் நாட்டின் துணை துதரகம் அமைத்திட ஒப்புதல் அளித்தது.
ஜவஹர்லால் நேரு அவர்கள் 1954ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில்; “இஸ்ரேலின் உருவாக்கம் என்பது ஒரு சர்வதேச விதிமீறல் என்ற சட்ட முன்வடிவை ஒரு கட்சி என்ற முறையில் ஆதரிக்கமாட்டோம்” என்று பகிரங்கமாக கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் இந்திய வெளியுறவுக்குறித்த தெளிவான கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்ற வாதம் எழுந்தது. அதன் பிறகு உருவானது தான் முதலாளித்தும் வல்லரசு சாராத சுதந்திரமான அணி சேராக் கொள்கை.
கட்சியிலும் நாட்டிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டதிற்கு இந்தியா பகிரங்க ஆதரவு தெரிவித்து வந்தாலும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுடன் மறைமுகமான தொடர்புகளை வைத்திருந்தனர். இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் பகிரங்கமாகவே தொடர்பு வைத்து வந்தனர் என்பதும் வெளிப்படையாக தெரிந்த செய்தி தான்.
வல்லரசுகளுக்கு மத்தியில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில் சோவியத் ஆதரவு நிலையை எடுத்திருந்த இந்தியா தனது அண்டை நாடுளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள சோவியத் ரஷ்யாவிட மிருந்து தனது இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை பெற்று வந்தது. இன்றைக்கும் இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் ஏற்றக்குறைய 70 விழுக்காடு ஆயுதங்கள் சோவியத் ரஷ்யா தயாரிப்பு தான். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு அந்நாட்டில் நவீன ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் சீர் கெட்டு போர் அபாயம் அதிகரித்தது. சோவியத் ரஷ்யா எந்த அளவிற்கு இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ததோ அதற்கு சற்றும் குறையாமல் பாகிஸ்தானுக்கும் சற்று கூடுதலாக சீனாவிற்கும் வழங்கியது. இது இந்தியாவிற்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது.
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் அதன் ஆயுதங்களுக்கு மாற்றாகவும் அதைவிட நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாட்டின் உறவு இந்தியாவிற்கு தேவைப்பட்டது. சோவியத் யூனியனோடு இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவிற்கு நவீன ஆயுதங்கள் கொடுப்பதற்குத் தயங்கிய நிலையில் அமெரிக்காவின் தயவால் பல நவீன ஆயுதங்களை வைத்துள்ள இஸ்ரேலின் பக்கம் இந்தியாவின் கவனம் திரும்பியது.
ஏற்கனவே இஸ்ரேல் அரசுடன் இரகசிய உறவு வைத்திருந்த இந்தியாவிற்கு (பார்க்க : இரகசிய உறவு) இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது. இஸ்ரேலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தயவு கிடைப்பதின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதோடு அரபு நாடுகளுடனான இந்திய உறவில் விரிசல் ஏற்படுத்த முடியும் என்று திட்டமிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இந்தியாவிற்கு பெருகி வரும் ஆபத்துகள் என அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது இஸ்ரேல். அதன்பிறகு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் காரணமாக இன்றைய நிலையில் இந்தியாவிற்கு இராணுவ தளவாடங்கள் விற்பதில் உலகின் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. இதை துறை வாரியகப் பார்ப்போம்.
இரகசிய தொடர்பு :
1969-ல் “ரா” என்ற உளவு அமைப்பை தொடங்கிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ராமேஷ் வர் நாத் காவோ என்ற அதிகாரியை அதற்கு தலைவராக நியமித்தார். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் உடன் இரகசிய உறவுகளை உருவாக்கிட காவோ விற்கு பிரதமர் இந்திரா உத்திரவிட்டார். “ரா”-மொஸாத் கூட்டணி சீனா, பாகிஸ்தான் வட கொரியா ஆகிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இரகசியமாக தொடர்ந்த இந்த “ரா” – மொஸாத் உறவு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த நேரத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டது.பாகிஸ்தான் அரசு கட்டா என்ற இடத்தில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை இரகசியமாக நிறைவேற்றி வந்தது. இதை அறிந்த அன்றைய அமெரிக்க ஜிம்மி கார்டர் அரசு பிரான்ஸ் உதவியை தடுத்துவிட்டது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு இதை இரகசியமாக வைத்திருந்தது. இந்தச் செய்தியை மோப்பம் பிடித்த மொஸாத் “ரா” காதில் போட அது நேராக மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வர அவர் நேரிடையாக பாகிஸ்தான் அதிபர் ஜியா-வுல் ஹக்கிடம் “நீங்கள் கட்டா நகரில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று எனக்கு தெரியும். எங்களது “ரா” அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று வெளிப்படையாக தெரிவித்ததற்கு பிறகு தான் “ரா” மொஸாத் உளவு அமைப்புகளின் கள்ளக் கூட்டு வெளி உலகிற்கு தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு மொஸாத்தோடு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் உறவு ஏற்படுத்திக் கொண்டது வேறுகதை.
திருப்பு முனை :
Organaisation of Islamic Conference (OIC)என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு 1986ல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்திய – இஸ்ரேல் உறவுகளில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஐ.நா. சபையின் அறிக்கையின் அடிப்படையில் கஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து ளிமிசி அறிக்கை வெளியிட்டது. இந்தியா இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ளிமிசி குற்றம் சுமத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்தச் செய்தி இந்திய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட இந்தியா, இது பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின் காரணமாக எழுதப்பட்டது என்று கருத்துக் கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு தொடர்பான தனது அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்திய அரசு.
துதரக தொடர்பு :
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக 1992 ஜனவரியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இஸ்ரேலோடு முழுமையான துதரக உறவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்து வந்த அரசுகள் இஸ்ரேலோடு பல்வேறு துறைகளில் பல உடன்படிக்கைகளை செய்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர் வருகை :
1997 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதர் ஐஸர் வைஸ்மென் இந்தியா வந்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் இவர் தான். முதன் முறையாக ஆயுத ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பராக் – 1 என்ற நவீன ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் கப்பலில் இருந்து பாயும் ஹார்ப்பூன் என்ற ஏவுகணையை இடை மறித்து தாக்கும் வல்லமை பெற்றது இந்த பராக் – 1 ஏவுகணை. இந்திய – இஸ்ரேலின் இந்த ஒப்பந்தத்தை கண்டு கதி கலங்கிய பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து றி3-சிமிமி ளிக்ஷீவீஷீஸீ என்ற போர் விமானத்தையும், மேம்படுத்தப்பட்ட ஹார்ப்பூன் ஏவுகணைகள் 27 ஐயும் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பலமுறை இஸ்ரேலிற்கு பயணம் செய்து புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்து வந்து உருவாக்கப்பட்ட பிருத்வி மற்றும் அக்னி ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டது.
கடற்படை :
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்திய கடற்படைக்கு மேலும் வலுவூட்டி தங்களது நாட்டின் சரக்கு போக்குவரத்து மற்றும் கடல் வழி போக்கு வரத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்திட இந்திய கடற்படையோடு சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் இஸ்ரேலிய கடற்படை சுதந்திரமாக ஈடுபட்டு வருகிறது. காரணம், மத்திய தரைக் கடல் பகுதியில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அங்கே, இஸ்ரேலால் சுதந்திரமாக செயல்பட முடியலவில்லை. சமீப காலமாக இந்திய பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணைச் சோதனைகளை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
விமானப் படை :
1997 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 32 ஆளில்லா உளவு விமானங்கள் வாங்கப்பட்டன. றிலீணீறீநீஷீஸீ கிணிகீமிசி என்ற அதி நவீன ராடார்கள் வாங்கப்பட்டன. இவை பாகிஸ்தான் உடனான கார்கில் போரின் போது இந்திய இராணுவத்திற்கு பெரிதும் உதவியாய் இருந்தது. ரஷ்யாவின் மிக் 32 ரக விமானங்களை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில் நுட்பமும் பெறப்பட்டன. இந்திய வான் எல்லையிலிருந்தே பாகிஸ்தான், மற்றும் சீனாவின் 400 கிலோ மீட்டர் து£ரத்தில் இருக்கும் இடங்களை மிக துல்லியமாக கண்காணிக்கும் அதி நவீன கிகீகிசிஷி என்ற 6போர் விமானங்களை இந்தியா இஸ்ரேலிடமிருந்து பெற்றுள்ளது.
உளவு சாட்டிலைட் :
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் சந்திராயன் விண்கலம் ஏவுவதில் உதவி செய்வது மேலும் இஸ்ரேலின் Tec SAR என்ற உளவு சாட்டிலைட்டை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO கடந்த 2008 ஜனவரி 22 அன்று விண்ணில் ஏவியது. இஸ்ரேலில் ராக்கெட் ஏவுதளம் இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஏவுவது பாதுகாப்பானதும் செலவு குறைவானதுமாக கருதப்படுகிறது. 2008ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவியோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட RISAT – 2 அதி நவீன சாட்டிலைட்டை இந்தியா ஏவியது. இந்த சாட்டிலைட்டிலிருந்து இரவு நேரத்தில் கூட அடர்ந்த மேக மூட்டம் காணப்பட்டாலும் அவற்றையும் தாண்டி மிக துல்லியமாக படமெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
இந்துத்துவ தொடர்பு :
2007ல் உலக யூத – இந்து மத தலைவர்கள் சிந்திப்பு என்ற பெயரில் யூத – பிராமணர்கள் சந்திப்பு நடைபெற்றது. 2007 பிப் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற இச்சந்திப்பில் இஸ்ரேலின் தலைமை ராபி யோனா எட்ஸ்கர் மற்றும் பிராமண சாமியார் தயானந்த சரஸ்வதி ஆகியோர் தலைமையில் யூதர்களும் பிராமணர்களும் சந்தித்து. யூத மதம் மற்றும் பிராமணர்களின் ஆரிய மதம் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
விடுதலை பெற்ற இந்தியாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடக்க காலத்தில் ஜவஹர்லால் நேரு வகுத்து தந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் முதலாளித்துமும் சோசலிசமும் கலந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றி வந்தது. பின்னர் அந்த வழிமுறைகளிலிருந்து மாறி சோசலிஸ ரஷ்யா சார்பு வெளியுறவுக் கொள்கைகையும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றி வந்தது. பின்னர் 1992ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையையும் உலக மயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கையையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே இந்திய அரசின் கொள்கையாகவும் மாறிப்போய் விட்டது. இந்தியாவின் துவக்ககால கொள்கை நிலைப்பாடுகளால் உலகின் பல நாடுகளிடம் பாரம்பர்யமாகக் கொண்டிருந்த தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டது இந்தியா. ஆனால் பிற்காலத்தில் அந்தக் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதால் உலக நாடுகளிடம் கொண்டிருந்த பாரம்பர்யத் தொடர்புகளை இழந்தது மட்டுமல்லாமல் சில எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டுவிட்டது. அந்த எதிர்ப்புகளில் தீவிரவாதமும் அடங்கும். மேலும் துவக்க காலத்தில் அமெரிக்க, ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் இஸ்ரேலின் உருவாக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்த இந்தியா, பிற்காலத்தில் அவற்றோடு சமரசம் செய்து கொண்டது. குறிப்பாக உலக சமுதாயத்தாலும் 180 கோடி முஸ்லிம்களாலும் கடுமையாக வெறுக்கப்படுகிற பயங்கரவாத இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும்.
நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் சமூக வாழ்க்கையை மேம்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டுமே தவிர வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக வல்லரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதால் உண்மையான வளர்ச்சி ஏற்படாது. நம் நாட்டின் பாரம்பரியத்தன்மைக்கும் மரபு சார்ந்த உறவுகளுக்கும் ஒவ்வாத சிந்தனை உள்ளவர்களோடு கூட்டு சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல… இன்றைக்கும் இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தந்து அதன் மூலமாக அதிக அளவிற்கான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரபு நாடுகள்தான் இந்தியாவின் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாகவும் திகழ்கின்றன. அத்தகைய அரபுநாடுகளின் அதிருப்தியையும் இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களின் வெறுப்பையும்தான் இந்திய இஸ்ரேல் உறவு வெளிப்படுத்தி உள்ளது.
CMN சலீம்
நன்றி;சமூகநீதி
நன்றி;சமூகநீதி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக