கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஆயுத போராட்டத்தை நோக்கி தள்ளப்படும் இந்திய முஸ்லிம்கள்!!

கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங் தாகூர் என்பவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இவரை சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மற்றும் இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்ட சுனில் ஜோஷி என்பவரை சுட்டு கொன்ற வழக்கில் மீண்டும் சிபிஐ வழக்கு பதிவு செய்து தங்களது கஸ்டடியில் எடுத்துள்ளது.யார்? இந்த சுனில் ஜோஷி!! ஏன்? இவரை ஹிந்துத்துவா இயக்கத்தை சேர்ந்த பெண்சாமியார் சாத்வி பிரக்யா சிங் சுட்டு கொல்ல வேண்டும்! இதுதான் நம் ஒவ்வொருவரிடமும் எழும் கேள்வி. இதுதான் பாசிச ஹிந்துதுவாவின் மற்றொரு கோரமுகம். இந்த சுனில் ஜோஷி என்பவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். இவரை கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த திட்டம் தீட்டியது. அதன்படி அஜ்மீர் தர்கா, சம்ஜெளதா எக்ஸ்பிரஸ், மலோகேன், ஹைதராபாத் மக்கா மசூதி உள்ளிட்ட பத்து இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். நடாத்தியது. இந்த குண்டுவெடிப்புகளில் சுனில் ஜோஷி மட்டும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நேரடி தொடர்புடையவர். மற்ற நபர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்புகளை சேர்ந்தவர்கள். இந்த குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டதில் அதிகமானோர் முஸ்லிம்களே! இருந்தும் இந்த குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் நடத்தியதாக குற்றம் சாட்டி இந்தியாவின் பாசிச காவல்துறையால் முஸ்லிம்கள் பெருவாரியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்கள்.

இப்படி தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு என்ன? லாபம்! என்று உங்களுக்கு இயல்பான ஒரு சந்தேகம் வரலாம். இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு பலவிதமான லாபங்கள் உண்டு. ஒன்று இதன் மூலம் முஸ்லிம்களை கொன்று குவிப்பது. அடுத்து இந்த குண்டு வெடிப்புகளின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களை குற்ற பரம்பரை ஆக்கி மனரீதியாக சோர்வுற செய்வது. மற்றும் இந்த வழக்கின் மூலம் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கைது செய்து சிறையில் தள்ளுவது. இதை வைத்து இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தும் அநீதங்களை பார்த்தீர்களா? என்று கூறி தங்களது ஹிந்துத்துவா வெறியை வளர்ப்பதன் மூலம் தங்களது இயக்கத்தை வளர்ப்பது. சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்று பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடிப்பது இதுதான் இவர்களது முக்கிய குறிக்கோள்.

எனவே இந்த குண்டு வெடிப்பின் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷியை எஸ் ஐ டி சிறப்பு புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்து நெருங்கும் வேளையில் இவர் மர்மாமான முறையில் சுட்டு கொல்லபட்டார். இவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனது துணை அமைப்பை சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் மூலம் சுட்டு கொன்றது. தங்களது சொந்த இயக்கத்தை சேர்ந்தவர்களையும் இந்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். கொல்ல தயங்குவது இல்லை. இதன் மூலம் இவர்கள் இவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை அறிய முடியும். இது தொடர்பான வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ரோஹிணி சாலியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூரை, மத்திய பிரதேச மாஜி முதல்வர் உமாபாரதி சந்தித்து பேசினார் என்பதும் இவரைபற்றி உமாபாரதி கூறுகையில், பிரக்யாசிங் தாகூர் ஒரு அப்பாவி பெண் மகாராஜ் அவ்தேசஷ் ஆன்ந்த என்பவரின் அமைதி தியானத்தை பின்பற்றுபவர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவருக்கு எந்த தொடர்பு இருக்காது இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் இவரை சி.பி.ஐ. சுனில் ஜோஷி சுட்டு கொல்லபட்ட வழக்கில் மீண்டும் கைது செய்திருப்பது குறிப்பிட தக்கது. தங்களது ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் இவர்கள் எப்படி எல்லாம் பேசுகிறார்கள்.

இது போன்ற செய்திகளை ஹிந்துத்துவா ஆதரவு நாளேடுகளான தினமணி, தினமலர், இந்தியா டுடே போன்ற நாளேடுகளும், ஹிந்துத்துவா செய்தி நிறுவனங்களும் திட்டமிட்டு மூடி மறைகின்றன. இன்று பத்திரிகை துறை என்பது ஹிந்துதுவாவின் கைகளில் உள்ளது. இது போன்ற செய்திகளை முழுவதுமாக வெளியிடாமல் ஏதோ ஒரு மூலையில் ஒரு துண்டு செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்கின்றன. இந்த தினமணி, தினமலர் பத்திரிக்கையை படியுங்கள் முழுவது உலக நாடுகளின் நடக்கும் பயங்கரவாதம் பற்றி எழுதுவார்கள். இங்கு சொந்த நாட்டில் தங்களது ஹிந்துத்துவா இயக்கங்கள் செய்யும் கலவரங்களை, குண்டு வெடிப்புகளை திட்டமிட்டு மறைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். ஏதாவது ஒரு வழக்கில் முஸ்லிம் பெயர் வந்தால் போதும் இவர்கள் அல்கொய்தா, லஸ்கர் தொய்பா, என்று கற்பனை குதிரையை ஓடவிட்டு கவர் ஸ்டோரி எழுதுவார்கள்

இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ள கூடிய ஒரு மோசமான பிரிவினைவாத சக்தியாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் திகழ்கிறது இதுவே உண்மை. சிங்கள பேரினவாத பயங்கரவாததிற்க்கும், ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாததிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையில் என்ன? நடந்தது. சிங்கள பேரினவாதம் சிறுபான்மை இனமான தமிழர்களை அடக்கி ஒடுக்கியதன் விளைவுதான் இந்த ஈழ தமிழர் போராட்ட வரலாறு. இனி தனி தமிழ் ஈழநாடே தீர்வு என்ற நிலை உருவாகிவிட்டது. இதுபோல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கும், பயங்கரவாத தாக்குதலுக்கும் ஆளாக்கபட்டால், இந்த மதசார்பின்மை மீது உள்ள நம்பிக்கை தகர்க்கபட்டால் முஸ்லிம்களுக்கு ஆயுதம் தூக்குவதை தவிர வழியில்லை என்ற நிலைமை உருவாகும். இதை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும். இந்திய அரசும், நீதி மன்றங்களும், காவல்துறையும் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல், தடை செய்யாமால் அவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் ஒரு நிலை எடுப்பார்களே ஆனால்! இந்தியா ஒரு உள்நாட்டு யுத்தத்தை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி நகரும் என்பது காலத்தின் காட்டாயமகி விடும். இந்த அரசும், நீதிமன்றங்களும், காவல்துறையும், முஸ்லிம்களை ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளிவிடுவார்களோ என்பதே நடுநிலையாளர்களின் கவலை.

அன்புடன்: மணிமாறன்.
நன்றி;மணற்கேணிடைம்ஸ்

0 கருத்துகள்: