இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழு கூடியது இயக்கம், சமுதாயம், அரசியல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..
இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில பொதுக் குழு கூட்டம் மாநில தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் இன்று கூடியது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள இந்த பொதுக் குழு கூட்டத்தால் நாகூர் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இயக்கம்-சமுதாயம் அரசியல் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்படவுள்ள இந்த பொதுக்குழு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள் ளது.இது பற்றிய விவரம் வருமாறு:
நாகூர் நகரம் விழாக்கோலம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூட்டம் நாகப்பட்டினம் மாவட் டம் நாகூர் மாடர்ன் மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் இன்று 24.2.2011 காலை 10.30 மணி யளவில் தொடங்கியது.
மாநில பொதுக்குழுவை ஒட்டி நாகூர் நகரமே விழாக் கோலம் பூண்டுள் ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 1,176 பொதுக்குழு உறுப் பினர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகித்தார். மௌ லவி ஏ.கே.எஸ். இப்ராஹிம் கலீலுல்லாஹ் பைஜி இறை மறை (கிராஅத்) ஓதி நிகழ்ச்சியை தொடங் கிவைத்தார்.
இரங்கல் தீர்மானம்
இந்திய யூனியன் முஸ் லிம் லீகிற்காக பல்வேறு சேவைகளை ஆற்றி சமு தாய முன்னேற்ற காரியங்களில் ஈடு பட்டு மறைந்த பெருமக் களுக்கு இரங்கல் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்தவர்களின் சிறப்புகள் குறித்து தலை வர் பேராசிரியர் உருக்கத்து டன் எடுத்துரைத்தார். அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க மாநில மார்க்க அறிஞர் அணி செய லாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார்.
மூன்றாண்டு சாதனை
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் 2.2.2008 முதல் 22.2.2011 முடிய உள்ள மூன்றாண்டு காலத்தில் இயக்கம் ஆற்றிய பணிகள் குறித்த இயக்க செயல் பாடுகள் குறித்து அறிக்கை யினை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தாக்கல் செய்தார்.
மாநில மாநாடு அறிக்கை
தொடர்ந்து 2010 டிசம் பர் 11 அன்று தாம்பரத் தில் நடைபெற்ற இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு தொடர்பான அறிக்கையினை மாநாட்டு விழா குழு தலைவரும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்தார்.
மஹல்லா ஜமாத்
அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் தொடர்பான அறிக்கையினை மாநில செயலாளர் கமுதி பஷீர் தாக்கல் செய்தார்.
வரவு செலவு
அதனைத் தொடர்ந்து 1.9.2008முதல் 31.1.2011 வரை யிலான மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரவு-செலவு தொடர்பான அறிக் கையினை மாநில பொரு ளாளர் வடக்கு கோட்டை வ.மு. செய்யது அஹ்மது தாக்கல் செய்தார்.
மேற்கண்ட அறிக்கை களை பொதுக்குழு உறுப் பினர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக தக்பீர் முழக்கங்கள் எழுப்பி ஒப்பு தல் வழங்கினர்.
இயக்க தீர்மானம்
தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சியில் இயக் கம் தொடர்பான கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1. இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் சமர்ப்பித்த 02.02.2008 முதல் 22.02.2011 முடிய உள்ள அறிக்கையை இக்கூட்டம் அங்கீகரிக்கி றது.
2. 01.09.2008 முதல் 31.01.2011 முடிய தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையை இக்கூட்டம் அங்கீகரிக்கிறது.
3. இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு, பிரைமரிகள்அமைக்கப்பட்டு மாவட்ட நிர்வாக தேர்தல் களும் முடிந்த 1. காஞ்சிபுரம்
2. தூத்துக்குடி 3.திருவள் ளூர் 4.மதுரை புறநகர் 5. கரூர் 6. விருதுநகர் 7. திருப் பூர் மாநகர் 8. பெரம்பலூர் 9. தேனி 10. நாகை வடக்கு 11. தஞ்சை 12. திருவாரூர் 13. கடலூர் 14. மதுரை மாந கர் 15. இராமநாதபுரம் 16. சிவகங்கை 17. திண்டுக்கல் 18. நீலகிரி 19. கோவை மாந கர் 20. கோவை புறநகர் 21. திருவண்ணாமலை 22. திருப்பூர் புறநகர் 23. ஈரோடு மாநகர் 24. சேலம் 25. திருச்சி மாநகர் 26. திருச்சி புறநகர் 27. திருநெல் வேலி 28. நாகை தெற்கு 29. ஈரோடு புறநகர் 30. தென் சென்னை 31. தருமபுரி 32. கிருஷ்ணகிரி 33. விழுப்புரம் மேற்கு 34. விழுப்புரம் கிழக்கு 35. வடசென்னை 36. வேலூர் மேற்கு 37. வேலூர் கிழக்கு ஆகிய மாவட்டங் களின் தேர்தல்களை இப் பொதுக்குழு அங்கீகரிக்கி றது.
4.இதுவரை மாவட்ட தேர்தல்கள் நடைபெறா மல் இருக்கின்ற 1. கன்னி யாகுமரி 2. நாமக்கல் 3. புதுக்கோட்டை 4. அரிய லூர் ஆகிய மாவட்டங் களில் விரைவாக தேர்தல் களை நடத்தி முடிக்க வேண்டுமென சம்மந்தப் பட்ட மாவட்ட நிர்வாகி களை இக்கூட்டம் கேட் டுக் கொள்கிறது.
5. வரும் 2011 ஜூன் 5-ஆம் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில புதிய பொதுக்குழு கூட் டத்தை கூட்டி புதிய நிர் வாகிகளை தேர்ந்தெடுப்பதென்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.
6. தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர் பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை கள், தோழமை கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துதல் வேட்பாளர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது.
7. கடந்த 11.12.2010 அன்று சென்னை தாம்பரத் தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு எல்லா வகையிலும் சிறப்புடன் அமையும் வகையில் வர லாறு படைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்…
இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த மாநில மாவட்டங்கள் மற்றும் பிரைமரிகளின் நிர்வாகி கள், அணிகளின் பொறுப் பாளர்கள், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள், அனைவருக்கும் மாநாட்டிலும் மஹல்லா ஜமாஅத் கருத்தரங்கிலும் பிறைக்கொடி பேரணியி லும் பங்கு கொண்டு சிறப் பித்த சமுதாய பெருமக்கள், சங்கைக்குரிய ஆலிம்கள், மஹல்லா ஜமாஅத் நிர்வா கிகள் அனைவருக்கும் இப் பொதுக்குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், சமுதாயம் மற்றும் அரசியல் தொடர் பான பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற் றப்படும் வகையில் பொதுக்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக