நான் உங்களை போன்ற ஒரு சாதாரண மனிதனே என தன்னை அழைத்துக் கொண்டு மானுட சமு தாயத்தின் நல்வாழ்வுக்காக மகத்தான சேவையாற்றிய மாபெரும் சாதனையா ளராக மனிதரில் புனிதராக விளங்கியவர் மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை சார்பில் மீலாது நபி விழா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை சைதாப் பேட் டையில் நடைபெறுகிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் வாழ்த் துரை வழங்கினார்.
அப்போது அவர் கூறிய தாவது-
மனித குலம் ஒற்றுமை யுடனும் - நல்லிணக்கத்து டனும் சகோதரப் பாசத்து டனும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத் தோடு சான்றோர்கள், ஆன்றோர்கள் பலரும் பாடுபட்டு வருகின்றனர். மக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நல்லி ணக்கத்துடன் வாழ்வதற்கு தேவையான வழிமுறை களை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலி ருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது. இங்கே பேசிய தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் முனை வர் நாகநாதன் அவர்கள் ஆற்றிய உரையானது மிக சிறப்பான ஆய்வுரையாக அமைந்திருந்தது.
நாமெல்லாம் அறிய வேண்டிய பல அற்புதமான செய்திகளை அவர்கள் எடுத்துரைத்தார்கள். இந்த கருத்துக்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளை யும் நாம் ஒவ் வொருவரும் மேற் கொள்ள வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னை குறித்து கூறும்போது, `நான் உங்களைப் போன்ற சாதாரண மனிதன்தான்� என்றே அழைத்துக் கொண்டார்கள்.
அண்ணலாரின் பெருந் தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடாகவே இதனை எடுத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் தன்னை சாதாரணமாக அழைத்துக் கொண்டா லும் அவர்கள் அளவுக்கு மானுட சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக சேவையாற்றிய மற்றோர் மனிதரை நபிகளாரோடு ஒப்பிட்டுக் காட்ட இய லாது என்ற அளவுக்கு அவர்கள் மனிதரில் புனிதராக - மாமனிதராக வாழ்ந்து காட்டியவர்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த இறை நெறி கோட்பாடானது நமது தமிழ் நெறிக்கு மிகவும் நெருக்கமானதாக இன்னும் சொல்லப் போனால் தமிழ் நெறியின் மறுவடிவமாகவே அமைந்திருக்கிறது. திருமூலர் பாடல்களில் இடம் பெற்றுள்ள பகுத்த றிவு கருத்துக்களை ஒத்த தாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போத னைகள் அமைந்துள்ளன. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த இறைக்கோட்பாடு புதிதாக உருவாக்கப்பட்ட கோட்பாடல்ல. ஆதி மனிதர் காலம் தொட்டு படிப்படியாக வளர்ச்சி யுற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பூர்த்தி செய் யப்பட்ட வழிமுறையாக மார்க்கமாக விளங்குவதே இஸ்லாமிய மார்க்கமாகும்.
இஸ்லாத்தைப் பின் பற்றுவோர்களை மேற்கத் திய நாடுகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் `முஹம்ம தியன்� என்றும், `முஹம் மதன் ரிலீஜன்� என்றும் எழுதுகிறார்கள். இது அவர்களது அறியாமை யும், தவறான புரிதலையுமே வெளிப்படுத்துகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் மார்க்கம் உருவாக்கப்பட வில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்ப தற்கு முன்பிருந்தே ஆதி மனிதர் ஆதம் காலம் தொட்டே இஸ்லாம் மார்க்கம் இருந்து வரு கிறது.
அம் மார்க்கத்தின் இறுதித் தூதராக மனித குலம் அனைத்திற்குமான பொதுவான தூதராக வருகை தந்தவர்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். மானுட சமுதா யத்தின் நல்வாழ்வுக்காக மகத்தான சேவையாற்றிய நபிகள் (ஸல்) அவர்களின் பெருமைகளை எடுத்து ரைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் அதிகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசினார்.

நன்றி;http://www.muslimleaguetn.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக