கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முஸ்லிம் லீகிற்கு 3 தொகுதிகள் முதல்வர் கலைஞர்-தலைவர் பேராசிரியர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்

MUSLIM
தமிழக சட்டமன்ற தேர்த லில் தி.மு.க., தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதி களில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உடன்படிக்கை யில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான டாக்டர் கலைஞர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் கையெ ழுத்திட்டனர்.

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்த லில் திமுக தலைமையி லான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

பேச்சு வார்த்தை
திமுக-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையி லான முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த கடந்த 22ம் தேதி நடைபெற்றது. தலைவர் பேராசிரியர், மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இன்று பகல் 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத் தில் நடைபெற்றது.


திமுக தலைவரும் முதல் வருமான டாக்டர் கலை ஞர், திமுக பொருளாள ரும் துணை முதல்வரு மான தளபதி மு.க.ஸ்டா லின், அமைச்சர்கள் ஆற் காடு வீராசாமி, துரை முரு கன், பொன்முடி மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகி யோரும், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய் யது அஹ்மது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயல் மகபூப், கமுதி பஷீர், அணி களின் அமைப்பா ளர்கள் கே.எம்.நிஜாமுதீன், வழக் கறிஞர் வெ.ஜீவகிரித ரன், வட சென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்று தொகுதிகள்
நடைபெறவுள்ள 2011ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங் களில் தமிழகத்தில் நடை பெறவுள்ள சட்டப் பேர வைத் தேர்தலையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்களும்-இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தலைவர் பேராசிரி யர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களும் இன்று 26.2.2011 தொகுதி உடன் பாடுகள் குறித்து கலந்து பேசி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக 3 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த உடன்பாட்டில் திமுக தலைவர் கலைஞ ரும், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தலைவர் பேரா சிரியரும் கையெழுத்திட்ட னர்.

உள்ளாட்சி தேர்தல்கள்
இந்திய யூனியன் முஸ் லிம் லீகிற்கு நாடாளு மன்ற மேலவையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை உரிய நேரத் தில் உரிய கவுரவம் தாய்ச் சபைக்கு நிச்சயம் வழங்கப் படும் அதில் உங்களைப் போன்ற உணர்வோடு நாங்களும் உள்ளோம் என் றும் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் உறுதி யளித்தனர்.

தமிழக சட்டப் பேர வையை தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் மேயர், நகராட்சி தலைவர், உள்ளாட்சி தலைவர்கள், போன்ற பொறுப்புக்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உரிய இடங்களும் உறுப்பினர் பதவிகளுக்கு அதிகமான இடங்களும் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட் டது.

இதனை நிச்சயம் ஏற் றுக் கொள்வோம் என்று திமுக தரப்பில் உறுதியளிக் கப்பட்டது

. உள்ளாட்சி தேர்தல் களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சின்னத்தில் அதன் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. தலைவர் களிடம் தலைவர் பேராசிரி யர் கூறினார்.

பேராசிரியர் பேட்டி
திமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தலைவர் பேராசிரியர் கூறி யதாவது:

முதல்வர் கலைஞரு டைய ஆட்சியில் சிறு பான்மை சமுதாயத்திற்கு எல்லா வகையான நன்மை களும் கிடைத்துக் கொண் டிருக்கின்றன. அதில், நான் சிலவற்றை குறிப்பிட்டே சொல்ல வேண்டும்.

சமீப காலமாக சிறு பான்மை மக்களுடைய உணர்வு பூர்வமான பிரச் சினைகளாக இருந்த சமச் சீர் கல்வி, கட்டாய திரு மண பதிவு சட்டம் போன் றவற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டு கோளை ஏற்று உரிய தீர்வுகள் ஏற்பட்டுள்ளன.

சமச்சீர் கல்வியில் சிறு பான்மை மொழிகளான உருது,கன்னடம், தெலுங்கு, மலையாளம், செம்மொழி களான அரபி, சமஸ்கிருதம் ஆகியவை கற்பதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு தமிழைப் போன்று அம் மொழிகளுக்கும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு உத்தர விடப்பட்டுள்ளது.

அதேபோன்று திருமண கட்டாய பதிவு சட்டத்தி லும் பதிவு செய்வதில் ஏற் படக் கூடிய சிரமங்களை தவிர்ப்பதற்காக இஸ்லா மிய திருமண பதிவுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்காரணமாக சிறு பான்மை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

சுயநிதி கல்வி நிலையங்கள்
சிறுபான்மையினர் மற்றும் சுயநிதி கல்வி நிலை யங்களில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு 1991 முதல் அரசு ஊதியம் வழங்கப்படு வது நிறுத்தப்பட்டது.

தற்போது, 11 ஆயிரம் ஆசி ரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும் என அரசு இன்று அறிவித்துள் ளது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி யுள்ளது.

இதுபோன்ற நல்ல காரியங்களை தொடர்ந்து செய்து வரக் கூடிய முதல் வர் கலைஞரின் அரசு மீண் டும் தொடர வரும் தேர்த லில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு-மக்களுக்கும் இருக்கிறது அதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னின்று பாடுபடும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட் டார்.

0 கருத்துகள்: