கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?

 உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஔி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கின்றனர், இயற்கை வைத்தியர்கள்.

தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது. உடலில் இருந்து ஜீவ சத்துக்களைக் கரைத்து திரவமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.

மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்களுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமாகாமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது.

மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.

"மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔி பட்ட தண்ணீர்தான்" என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர். இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

சூரிய ஔி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன.

சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர். உடலைச் சுத்தபடுத்துவது குளிப்பதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது
நன்றி;பாலைவனத்தூது

0 கருத்துகள்: