கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பாவிப் பயலுக…!

www.samooganeethi.org என்ற இணையத்தில் வந்ததை அப்படியேஉங்களின் பார்வைக்கு தருகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
போன தடவ என் கடிதத்தை ஒங்க பத்திரிக்கையில அப்படியே போட்டுட்டிங்களாமே! எங்க பயலுக வந்து கத்திகிட்டு கெடந்தானுக. இனி என் மனசுல வர்ரது எல்லாத்தையும் எழுதரேன். நல்லார்ந்தா போடுங்க.
முந்தா நாளு என் ஊட்டுக்கு எங்க சொந்தக்காரங்க கும்பலா வந்தாங்க. அவங்க பொண்ணுக்கு கலியாணம் மூச்சி மூனு மாசமாகல, அதுக்குள்ள அந்த பாவிப்பய தலாக் உட்டுட்டானாம்! நம்ம சமுதாயத்துல இப்ப இதுமாதிரி நெறைய நடக்குதுங்க.
நல்லா படிச்ச பயலுகதேன்… இப்படி பன்றானுக. என்னாத்த படிச்சானுகளோ தெரியல. எத படிக்கனுமோ அதபடிக்காம வேற எல்லாத்தையும் படிக்கிறானுக. பொசுக்கு பொசுக்குனு தலாக் உடுறானுக. பொண்டாடிக்கு சோறு ஆக்க தெரியலனா தலாக்! சோத்துல உப்பு இல்லனா தலாக்! இப்படி உப்பு சப்பு இல்லாததுக்கு எல்லாம் தலாக் உடுறானுக.
ஏம்மா ஒன்ன தலாக் உட்டான்னு… கேட்டேன். அந்த பயலோட அம்மா முன்னால இந்த பொண்ணு கால்மேல கால்போட்டு ஒக்கார்ந்து இருந்ததாம். அதனால அவ புருசன் தலாக் உட்டுட்டானாம்! ஒன்னோட கால்மேல தானே ஒன்னோட காலபோட்டேன்னு கேட்டேன், அந்த புள்ள சிரிக்குது.
இதுக்கெல்லாம் தலாக் உட்ட அந்த பயல எதால அடிக்குறதுன்னே தெரியல. புதுசா கெடச்ச பூவ இப்படி கசக்கி எடுத்துட்டு தலாக் உட்டுட்டானே உருப்படுவானா அவன்?
அந்த பொண்ணுக்கு நடந்த மாதிரி தான் இப்போ எல்லா எடத்திலேயும் அதிகமா நடக்குது. இத யாராலையும் தடுக்க முடியல. கலியாணத்துல லட்சம் லட்சமா வெக்கமில்லாம காசு வாங்குரானுக… நாங்க வயிறு எரிஞ்சு நாசமா போகனும்னு சொல்லித்தேன் தர்ரோம். அப்ப கூட எங்க பொண்ணுகள வெச்சு ஒழுங்கா குடும்பம் நடத்த மாட்டேனுங்காரனுக. சில ஊர்கள்ல ஹஜரத்துமார்களும் கைக்கூலி வாங்குறாங்க. இந்த அநியாயத்தை எந்த ஜமாத்காரங்களும் ஹஜரத் மார்களும் கேக்கமாட்டேங்கராங்க.
கலியாணம் பண்ணி 6 மாசம் 1 வருசதுல எல்லாம் தலாக் உடுறானுக பாவிப்பயலுக. ஷரிஅத் கோர்ட்டுன்னு மவுண்ட் ரோடு, மக்கா பள்ளியில நடத்துராங்க/ அவங்க எவ்வளவு சொன்
னாலும் இந்த பயலுகளும் அவனுகள பெத்தவங்களும் யாருக்கும் கட்டுப்பட மாட்டேங்கராங்க… இவனுகள யாராலையும் கட்டுப்படுத்த முடியல.
இந்தப் பொண்ணுகளும் சும்மா இருக்க மாட்டாளுக. இப்ப மொளச்சு வர்ரது எல்லாம் பிஞ்சியிலேயே பளுத்ததுக. படிச்சுப் புட்டோம்ங்கர திமிரு ஜாஸ்தி. மாப்புள்ள கிட்ட எதுக்கு எடுத்தாலும் சண்டைக்கு நிக்கிராளுக. மாமியாகாரிய மதிக்கிறதே இல்ல.
கலியாணம் மூச்ச உடனே ‘வா தனிக்குடித்தனம் போவோம்’னு மாப்பிள்ளகிட்ட தலையாண மந்திரம் ஓதுறதுன்னு அநியாயம் பன்றாளுக. இப்படி பன்னினாக்க எங்கேந்து சேர்ந்து வாழரது? குடும்பம் எப்படி உருப்படும்.
அல்லா தான் காப்பாத்தணும்.
காசு பணம் சம்பாதிக்கிறது எப்படின்னுதேன் இப்ப உள்ள பயலுக தெரிஞ்சு வெச்சிருக்கானுக. பொண்டாட்டி, புள்ள,  குடும்பம், ஒறவுக்காரங்க இதைப் பாக்குறதுக்கு அவனுகளுக்கு எங்க நேரம்?
கலியாணம்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுறோம். ஆனா இந்த காலத்துல ஆறு மாசங்கூட சேர்ந்து ஓட மாட்டேங்குது.
எனக்கு கலியாணம் மூச்சி 45 வருமாச்சு. தெனமும் எனக்கும் என் ஊட்டுக்காரருக்கும் சண்டை வரத்தேன் செய்யும். ஆனா ஒரு நாளு கூட அவரு இல்லாம நான் சாப்பிட்டதில்லை. அடிச்சாலும் புடிச்சாலும் என் மாப்புள்ளனா எனக்கு உசுரு. அது தானுங்க வாழ்க்கை.
இத தானே நபியும் சொன்னாங்க!
- பாப்பம்பட்டி பாத்திமுத்து ஜெகாரா

0 கருத்துகள்: