கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மோடியை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர். பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையால் நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13 ஆதாரங்களையும் சிறப்பு புலனாய்வுக் குழு வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடியை சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றம் சாட்டவில்லை என்ற பிரச்சாரம் பொய் என்பது தெளிவாகிவிட்டதால் கடமை தவறி கலரத்தை  முன்னின்று நடத்திய நரேந்திர மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
நன்றி;கொள்ளுமேடுxpress

0 கருத்துகள்: