இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.
தமிழகத்தில் 1967ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்தது. அந்த கட்சியின் தலைமையில் தான் தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. ஆனால், 1967ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக. 25 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசை வீழ்த்தியது.
தற்போது, 45 ஆண்டுகள் ஆன நிலையிலும், காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் எழுந்திருக்க முடியவில்லை.
தமிழகத்தில், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிதான் அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது.
அதே நேரத்தில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் (சிதம்பரம், திருவள்ளூர்), புதிய தமிழகம் கட்சி (தென்காசி), மனிதநேய மக்கள் கட்சி (மயிலாடுதுறை), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (வேலூர்) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட மீதமுள்ள 35 தொகுதிகளிலும் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
மொத்தமாக பார்க்கும்போது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில், புதுச்சேரி உள்பட 35 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகிறது.
பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் அதிமுக – திமுக அதிகப்படியான தொகுதிகளில் மோதுவது இதுவே முதல்முறையாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக