கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை அல்லது விபத்தினால் ஏற்படும் மரணத்தின்போது அவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, நிரந்தர ஊனத்தால் பாதிக்கப்படும்போது நிதி அளித்தல் ஆகிய திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களுக்கு காப்பீடு அளிக்கும் மகாத்மா காந்தி பிரவாஸி சுரக்சா என்ற திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் சேர தொழிலாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் மத்திய அரசும் தனது பங்களிப்பாக நிதியுதவி அளிக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதி யம் பெற விரும்பும் தொழிலாளர் கள் ஆண்டு தோறும் ரூ.1,000 முதல் 12 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். தாய்நாடு திரும்பிய பின் மறுகுடியேறுதல் உள்ளிட்ட வற்றிற்கு பணம் பெற விரும்பி னால், ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆயுள் காப் பீடுக்கு பணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

18 முதல் 50 வயதுக்கு உள் பட்ட இந்திய தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.
http://tamil.thehindu.com/

0 கருத்துகள்: