கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் பக்கவாதம்

உலகளாவிய நிலையில் பக்கவாத நோய்க்கு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். 65 வயது கடந்தவர்களையே பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதம் என்பது இன்றைய காலத்தில் பொதுவான ஒரு நோயாகிவிட்டது. பக்கவாதம் உடலின் எந்த பாகத்தை பாதிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நோயாளியும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

பொதுவாக பக்கவாதம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
மனிதனின் மூளைக்கு பிராணவாயுவைக் கொண்டு செல்லும் இரத்தக் குழாயில் இரத்தம் உறைந்து நின்று விடுவதாலோ அல்லது இரத்தக் குழாய் வெடித்து விடுவதாலோ உடலின் ஒரு பகுதி உறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்து விடுகின்றன. இதனையே பக்கவாதம் என்கிறோம்.

இரவிலோ அதிகாலையிலோ ஏற்படும் இந்த திடீர் தாக்குதல், சிலருக்கு மரணத்தையே ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது. சிலருக்குப் பார்வைக் கோளாறு, பேச்சு குழறுதல், நினைவாற்றல் பாதிப்பு, உணர்வு மற்றும் நடவடிக்கைளில் மாற்றம் போன்றவையும் பக்கவாதத்தால் ஏற்படுகிறது.

பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். முதலில் பக்கவாதம் என தெரிய வந்தவுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு செல்ல வேண்டும்.  

அவ்வாறு கொண்டு சென்றால்,  உடனடியாக ரத்தக் கட்டை நீக்கி, இரத்த ஓட்டத்திற்கான சிகிச்சை அளிக்கப்படும்.

பக்கவாத நோய் ஏற்பட்ட நோயாளியை ஏறக்குறைய மூன்றரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது அவசியம். இதன்மூலம் 34% சதவிகிதம் முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம்.

எனவே, துரிதமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் தினமும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கும். முதியவர்கள் நடைபயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

அவ்வாறு இயலாதவர்கள், வீட்டு வேலை, தோட்ட வேலைகளை சிரத்தை எடுத்து செய்து உடலுக்குப் பயிற்சி கொடுக்கலாம். 

0 கருத்துகள்: