கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நோயாளிகள் மருத்துவ நிதி உதவி ரூ 25,000/- பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு !

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பெரிய நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள மாநிலநோயாளர் நிதி உதவி அமைப்பின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய வாழ்வு அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அனைத்து வகை புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மூலம் குணப்படுத்தும் ரத்த புற்றுநோய், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, மூளை நரம்பு, தண்டுவட நரம்பு அறுவை சிகிச்சை, இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை, தீவிர எலும்பு முறிவு மற்றும் எலும்பு சிகிச்சை, சிறுநீரக பாதையில் கல் மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் உள்ளிட்ட 11 வகையான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலிருந்து நோயாளியின் முகவரி, மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை விவரம், சம்பந்தப்பட்ட மருத்துவரின் கையொப்பத்துடன் மருத்துவமனையின் முத்திரையுடன் கூடிய அறுவை சிகிச்சை செய்ததற்கான அசல் டிஸ்சார்ஜ் சம்மரி மற்றும் மருத்துவமனைக்கு செலுத்திய தொகைக்கான அசல் ரசீதுகளும் இணைக்கப்பட வேண்டும். குடும்ப அட்டை நகல், நோயாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட அசல் வருமானச் சான்று, வேறு எந்த திட்டத்திலும் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி பெறவில்லை என்பதற்கான சான்று ஆகியவை இணைக்க வேண்டும். மனுதாரர் சமர்ப்பிக்கும் அனைத்து சான்றுகளிலும் ஒரே முகவரி இருக்க வேண்டும். எனவே மாநில நோயாளர் நிதி உதவி அமைப்பின் மூலம் நிதி உதவி பெற தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 
source:http://www.thanjavur.tn.nic.in/dist_news_headline.html

0 கருத்துகள்: