கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பொது சிவில் சட்டம் வரவேண்டும் என்ற கருத்தை திணிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு திரும்பப் பெறப்பட வேண்டும்

கும்பகோணம், பிப்.24- ``இந்திய அரசியல் சாச னத்தில் 44-வது பிரிவில் கூறப்பட்டுள்ள இந்தியா முழுவதற்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு முயற் சிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நடைமுறைப் படுத்தக் கூடிய வகையில் சிறார் நீதிபரிபாலன சட்டம் அமைந்துள்ளது’

என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு திரும்பப் பெறப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 கும்பகோணம் ரயில் நிலையம் எதிரில் உள்ள பி.எல்.ஏ. ரெஸிடென்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைய தள நண்பர்கள் சந்திப்பு மற்றும் காயிதெ மில்லத் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சிக்கு தலைமை யேற்க வருகை தந்திருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளரும், தமிழ் நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசிய தாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைய தள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.23 ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற் றது. காயிதெ மில்லத் ஆவணப்படம்

காலை நிகழ்வில் ஆளூர் ஷாநவாஸ் உருவாக்கிய காயிதெ மில்லத் ஆவணப்படம் இங்கு திரையிடப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948 மார்ச் 10 அன்று சென்னை ராஜாஜி ஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக இந்த இயக்கத்தை மலரச் செய்து இந்திய முஸ்லிம்களை வழி நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களு டைய வரலாறு தமிழ்நாட்டின் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்தது. 

காயிதெமில்லத் என்றால் யார்? அவர் செய்த மகத்தான தியாகங்கள், இளைஞர்களுக் கும், மாணவர்களுக்கும் இதன் மூலம் அறிந்து கொள்ளக்கூடிய அருமையான வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் அந்த பாடத்தை அப்புறப்படுத்தி விட் டார்கள். இது ஒரு மிகப் பெரிய மனக்குறையாக இருந்தது. இந்த மனக்குறையை எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் போக்கியிருக்கிறார். ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய காயிதெ மில்லத் பற்றிய ஆவணப் படத்தை அவர் அற்புதமாக தயாரித்துள்ளார். அது இங்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. 

இங்கு நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநில நிர்வாகிகள் மட்டுமின்றி சன் தொலைக்காட்சி அரசியல் விமர்சகர் வீரபாண்டியன், எழுத் தாளர் மார்க்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். 

முகநூல் உள்ளிட்ட இணைய தளங்களை பயன்படுத்தக் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞர்கள் இணைய தளங்கள் மற்றும் அச்சு, காட்சி ஊடகங்களை எப்படி கையாள வேண்டும். அதன்மூலமாக சமூகத்துக்கும், தாங்கள் சார்ந்துள்ள இயக்கத் திற்கும் எப்படி பயனளிக்கலாம் என்கின்ற விளக்கம் இங்கே தரப்பட்டது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லட்சியங்களான தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக் கம், சிறுபான்மையினரின் தனித் தன்மைகளை காத்தல் என்பனவற்றிற்கு எத்தகைய இடையூறும் வரலாமல் இளைஞர் கள் ஊடகங்களை கையாள வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எங்களுடைய லட்சியங்களில் நாங்கள் மிகச் சரியாக இருக்கி றோம். ஆனால், சரியாக இருக்க வேண்டியவர்கள் எல்லாம் வரம்பு மீறுகிறார்கள். 

உச்சநீதிமன்ற தீர்ப்பு

கடந்த 19-ம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்திய முஸ்லிம்களின் உணர்வு களை உசுப்பி விட்டுள்ளது.

ஷப்னா ஹஸ்மி என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதி மன்றத்தில் தொடுத்திருந்த ஒரு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி நிரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.சிங் ஆகிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் தத்தெ டுப்பதற்கு அனுமதி தராத முஸ்லிம் தனியார் சட்டத்தை பின்பற்றி நடப்பதற்கு முஸ்லிம் களுக்கு உரிமை இருப்பது போல், சிறார் நீதிபரிபாலன சட்டத்தின் மூலம் ஒரு குழந் தையை தத்தெடுத்துக் கொள் ளும் உரிமையும் இருக்கிறது என்பதே அத்தீர்ப்பாகும். 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வாசகங்களோடு மட்டும் தங்கள் தீர்ப்புரையை முடித்து விடவில்லை. அதற்கும் மேல் ஒருபடி போய், ``இந்திய அரசியல் சட்டம் 44-வது ஷரத்தில் கூறப்பட்டுள்ள இந்தியா முழுவதற்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு முயற்சி செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை நடைமுறைப் படுத்தக்கூடிய வகையில் இந்த சிறார் நீதி பரிபாலன சட்டம் ஒரு படிக் கல்லாக அமைந்திருக்கிறது. பொது சிவில் சட்டம் என்ற குறிக்கோள் இன்னும் நடை முறைக்கு வராமல் இருக்கி றதே? என்றும் வேதனைப்பட் டுள்ளது. 

இந்த தீர்ப்புரைகள்தான் முஸ்லிம்களின் உணர்வுகளை யும், உள்ளங்களையும் புண் படுத்தியுள்ளது. எந்த ஒரு முஸ்லிமும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். அதற்கு சொத்துக்களை எழுதி வைக்கலாம்; தனது சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தை மரண சாசனமாகவும் (வஸிய்யத்) எழுதி வைக்கலாம். ஆனால், இந்த வளர்ப்பு பிள்ளை என்ற தகுதி சொந்த பிள்ளை என்ற அந்தஸ்துக்கு வராது என்பதால் இஸ்லாமிய சட்டப்படியான வாரிசுரிமை இதற்கு பொருந் தாது என்பதே இஸ்லாமிய சட்டமாகும்.

ஆனால், இதனை புரிந்து கொள்ளாமல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தை திணித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 

எத்தனையோ வழக்குகளில் சீராய்வு மனுக்களை கொண்டு வந்து தீர்ப்புகளை மறுபரி சீலனை செய்ய கோருகிற மத்திய அரசு இந்த தீர்ப்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்து தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய கோரவேண்டும் அல்லது முஸ்லிம்களின் உணர்வுக ளுக்கு மதிப்பளித்து உச்சநீதி மன்றமே இத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தனியார் சட்டங்கள் என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல; அது பல்வேறு மதத்தவர் களுக்கும் இருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பின் கடந்த 66 ஆண்டு காலமாக நடைமுறை யில் இருக்கிறது. இந்த சட்டங்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பும் இருக்கிறது. இவ்வளவையும் கொடுத்து விட்டு சிறார் நீதிபரிபாலன சட்டம் என்கின்ற பெயரால் பொது சிவில் சட்டத்தை திணிப்பது என்பதை முஸ்லிம் கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

தூக்கு கைதிகள் 

விடுதலை பிரச்சனை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்ற நால்வர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். 

தீர்ப்பளிக்கப்பட்டு இத்தனை நாட்களும் சிறையில் அடைத்து அவர்கள் அன்றாடம் மனவேதனைக்கு ஆளாக்கப் பட்டு ஓராண்டு, ஈராண்டல்ல இருபத்து மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு பின்னர் தூக்கிலிடுவது என்பது நீதியும் அல்ல; தர்மமும் அல்ல. இன்ன மும் சொல்லப் போனால் இது நீதியை தூக்கிலிடுவதற்கு சமம். 

எனவே, நீண்ட காலம் சிறையில் அனுபவித்து விட்ட அவர்களை விடுதலை செய்வது தான் நீதிக்கு நாம் செய்யும் மரியாதையாகும் .

நாடாளுமன்ற தேர்தல்

நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலில் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிய நரேந்திர மோடி ஒருபோதும் பிரதமராக முடியாது. பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி அம்மை யார் உள்ளிட்ட பெருமேதை களெல்லாம் அலங்கரித்த பிரதமர் பதவியை அனுபவிக் கும் தகுதி மோடிக்கு இல்லை. 

900 கிராமங்களை நிர்மூலமாக்கி 600-க்கும் மேற்பட்ட மத வழிபாட்டு சின்னங்களையெல்லாம் தகர்த்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதியும், இழப்பீடும் குறைந்தபட்சம் மன்னிப்பும், கேட்கக்கூடிய மனப்பக்குவம் இல்லாத நிலை யில் இறந்தவர்களை காரில் அடிபட்ட நாய்க்குட்டிகள் என வர்ணிக்கும் குரோத மனப் பான்மை கொண்டவரை நாட்டு மக்கள் ஒருபோதும் தேர்வு செய்ய மாட்டார்கள். 

தமிழகத்தைப் பொறுத்த வரை தி.மு.க. தலைமையிலான அணி கருத்துக் கணிப்பு களையெல்லாம் தகர்த்து மாபெரும் வெற்றி யடையும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டார்.

0 கருத்துகள்: