கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படு​ம் நிலை ஏற்படக்கூடா​து:அப்துர் ரஹ்மான் எம்.பி

ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படும் நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது வெளியுறவு அமைச்சர் நடத்திய கூட்டத்தில் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வலியுறுத்தல்

புனித ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படும் நிலை ஒரு போதும் ஏற்படக் கூடாது. ஹாஜிகளுக்கு பாஸ் போர்ட் வினியோக முறை எளிமையாக்கப்பட வேண் டும். ஹஜ் பயணிகளுக்கான தங்கும் இடங்கள் ஹரம் ஷரீப்களுக்கு அருகில் செய்து தர வேண்டும். என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., வலியுறுத்தியுள் ளார்.
ஹஜ் புனிதப் பயண ஏற்பாடுகளில் அரசு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடு குறித்த நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் அதிகாரிகள் இணைந்த கூட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூட்டியிருந்தார்.

இக் கூட்டம் நேற்று (மார்ச். 7) திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு நாடாளு மன்றத்தின் கருத்தரங்கு வளாகத்தில் நடைபெற் றது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத் தில் வெளியுறவுத்துறை இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரு மான இ.அஹமது, சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர் ஷித், சவூதி அரேபியாவிற் கான இந்தியத் தூதர் தல்மீஸ் அஹமது, ஈ.டி. முஹம்மது பஷீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), அஸீஸுதீன் உவைஸி (மஜ்லிஸுல் இத்திஹாதுல் முஸ்லிமின்), முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் கான் (பாரதீய ஜனதா), ஹதுல்லா சையது, ஷா நவாஸ் (காங்கிரஸ்) உள் ளிட்ட 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய வெளியுறவு துறையின் 20-க்கும் மேற்பட்ட அதி காரிகள் கலந்து கொண்ட னர்.
இக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசுகையில் குறிப்பிட்டதாவது- முக்கியமான ஒரு கால கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆலோசனை கூட்டத்தை நம் வெளியுற வுத்துறை அமைச்சர் ஏற்பாடு செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்.
ஹஜ் புனிதப் பயணிக ளுடைய பல்வேறு நிலை கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த அக்கறையோடு பல விஷ யங்களை இங்கே எடுத்து ரைத்தார்கள். புனிதக் கடமையாக ஹஜ்ஜுக்கு செல்லும் பயணிகளின் ஏமாற்றத்தைத் தவிர்க்க வும், பயண ஏற்பாடுகளை எளிமையாக்கவும் சில ஆலோசனைகளை முன் வைப்பது என்னுடைய கடமையாகும்.
பாஸ்போர்ட் எளிமையாக்கப்பட வேண்டும்
ஹஜ் புனிதப் பயணத் திற்கு செல்கின்றவர்கள் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என இன்று வலியுறுத்தப் படுகிறது. இந்த பாஸ் போர்ட்டை பெறுவதற்கு ஹஜ் பயணிகள் படும் பாடு வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று. பாமர மக்கள் படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல.
தேவையே இல்லாமல் அவர்கள் மீது இந்த சுமை சுமத்தப்படுகிறது. சவூதி அரசு கேட்பது ஹஜ் பயணிகளாக வரக் கூடிய வர்கள் ஒரு வருடத்திற் கான அனுமதி சீட்டு வைத்திருக்க வேண்டும் என்பதுதான். ஏற்கனவே ஹஜ்பயணிகளுக்காக வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு 6 மாதம் என்ற கால அளவை கொண்டிருந்தது. இதை ஒரு வருடமாக நீடித்திருக்கலாம். ஹஜ் கடமைக்காக மட் டுமே வெளிநாடு செல்லக் கூடியவர்கள் இன்று சர்வதேச பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய கட்டா யத்திற்கு ஆளாக்கப்பட் டுள்ளனர். ஒன்று இவர்க ளுக்கு ஒரு வருட அனு மதிச்சீட்டு வழங்கி அதை அனுமதிக்கச் செய்யலாம். அப்படி இல்லையாயின், ஹஜ்ஜுக்கு செல்லுகின் றவர்கள் சர்வதேச பாஸ் போர்ட் பெறுவதற்கு விதிமுறைகள் எளிமை யாக்கப்பட வேண்டும். இதை நம் வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத் தில் கொள்ள வேண்டும். ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படக்கூடாது கடந்த காலங்களில் ஹஜ் புனிதப் பயணிகள் பலரும் ஏமாறும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு, மிகுந்த மனக் கவலையும், வேதனை யும் அனுபவித்துள்ளனர். இது தொடர்கதையாக கூடாது. ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர். அங்கீ காரம் இல்லாத பல்வேறு ஏஜென்சிகளும் பயண ஏற் பாடுகளை செய்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளுக்கு குறிப் பிட்ட கோட்டாக்கள் ஒதுக்கினாலும், அதைவிட அதிக எண்ணிக்கையில் பயணிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று எப்படியும் கடைசி நேரத் தில் வாங்கிவிடலாம் என்ற நிலையில் செயல்படுகின்ற னர். அங்கீகரிக்கப்பட் ஏஜெண்டுகளிடமிருந்து மீதமுள்ள கோட்டாக் களை பெற்று அங்கீகார மில்லாத ஏஜென்டுகள் பயண ஏற்பாடுகளை செய் கின்றனர்.
உதாரணத்திற்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுக்கு 100 கோட் டாக்கள் என்றால், அவர் கள் அந்த எண்ணிக்கைக்கு மேல் விண்ணப்பங்களை பெறுகின்றனர் எப்படியும் வாங்கி விடலாம் என முயற்சிக்கின்றனர். அது கிடைக்காமல் போனால் உங்கள் ஹஜ் விண்ணப் பத்தை அரசு ஏற்கவில்லை என அரசை குறை கூறு கின்றனர். இதனால் ஹஜ் பயணிகள்தான் ஏமாறும் சூழ்நிலைக்கு ஆளாக்கப் படுகின்றனர்.
கடந்த ஆண்டு ஹஜ் செல்ல இருந்து இப்படி ஏமாந்தவர்களுடைய எண்ணிக்கை தமிழ்நாட் டில் மட்டும் ஆயிரத்தை யும் தாண்டியது என்பது அதிர்ச்சிகரமான விஷய மாகும். அதிலும் குறிப்பாக, சொந்த கிராமங்களிலி ருந்து ஹஜ்ஜுக்கு செல்வ தற்காக எல்லா ஏற்பாடு களையும் செய்து இஹ்ராம் கட்டிய உடையோடு புறப்பட்டு வந்து சென் னையில் தங்கியிருந்து கடைசி நிமிடத்தில் ஹஜ் பயண ஏற்பாடு நடக்க வில்லை என்பது தெரிந்து இஹ்ராம் உடைகளை களைந்து ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு செல்வது எவ்வளவு பெரிய வேதனை யான விஷயம்? யார் பொறுத்துக் கொள்ள முடியும்.
எனவே, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. இனி, ஒருபோதும் ஹஜ் பயணி கள் ஏமாற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படக் கூடாது அதற்கு என்னுடைய ஆலோசனையாக ஒன்றை சொல்கிறேன்.
ஒவ்வொரு ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களுக்கும் அவர்களின் கோட்டா எண்ணிக்கைக்கு ஏற்ப வெளி விவகாரத்துறையே முறையான சான்றிதழ் களை வழங்கலாம். அப்படி செய்யும்போது, ஹஜ்ஜுக்கு விண்ணப்பிப்பவர்களிட மிருந்து அதற்குரிய கட்ட ணமும், பாஸ்போர்ட்டும் பெறும்போதே இந்த சான்றிதழை அவர்கள் வழங்கிவிட வேண்டும். இதனால், ஹஜ் பயணத் திற்கு செல்லுகின்றவர்க ளுக்கு தாங்கள் நிச்சயம் பயணம் செல்வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடும். ஏமாறும் சூழ்நிலை ஏற் படாது.
ஒரே நேரத்தில் பல விமானங்கள்
ஹஜ் புனிதப் பயணத் திற்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுவதால் மாநில ஹஜ் கமிட்டிகளும், ஹஜ் புனிதப் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள் ளாக்கப்படுகின்றனர். உதாரணத்திற்கு ஒரு விமா னத்திற்கு 400 பேர் என் றால் அதற்குரிய வசதிகள் மாத்திரமே மாநில ஹஜ் கமிட்டிகளால் செய்யப்படு கிறது. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று விமா னங்கள் என்றால் மாநில ஹஜ் கமிட்டிகள் பயண ஏற்பாடுகளை கவனிப்ப திலும், ஹஜ் பயணிகள் தங்குவதிலும் பல்வேறு சிரமங்கள் உருவாகின்றன. எனவே, வருங்காலங்களில் ஒரே நேரத்தில் ஒரு விமானத்தை மட்டுமே ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒரு மாநிலத்திற்கு ஒரே முஅல்லிம்
ஒரு மாநிலத்தின் ஹாஜி கள் ஒன்றாக பயணிக்கும் போது அவர்களை பல் வேறு முஅல்லிம்களிடம் பிரிப்பதால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. ஒரு முஅல்லிமிடம் 5 ஆயிரம் பேர் வரை கவனிக்கச் சொல்லுகின்றனர். இந்த எண்ணிக்கையிலான ஹாஜிகளை பல மாநிலங் களிடமிருந்து பல பிரிவு களாக பிரிப்பதால் ஏற் படும் சிரமங்களை தவிர்ப் பதற்காக ஒரு மாநிலத்திலி ருந்து ஒரே முஅல்லிம் என்ற அடிப்படையில் தமிழ்நாட் டிற்கு ஒரே முஅல்லிமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்கா – மதீனாவில் தங்கும் இடம்
ஹஜ் புனித பயணத்தில் தங்குமிடங்கள் கடைசி நேரத்தில் மிகவும் தாமத மாக ஏற்பாடு செய்யப்படுவ தால் மக்கா – மதீனாவில் ஹஜ் பயணிகள் தங்குமி டம் மிகவும் தூரமான இடங்களில் அமைந்து ஹாஜிகளுக்கு சிரமங் களை ஏற்படுத்துகிறது. எனவே, போதுமான கால அவ காசத்தில் முன்கூட் டியே திட்டமிட்டு மக்கா – மதீனாவில் ஹரம்ஷரீப் களுக்கு அருகிலேயே தங்குமிடங்களை ஏற்பாடு செய்ய அரசு தக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., குறிப் பிட்டார்.

0 கருத்துகள்: