கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மணி சங்கர் பதவி எப்படி? பறிபோனது விக்கிலீக்ஸ்!!

பெட்ரோலியத்துறை அமைச்சராக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மணி சங்கர் அய்யரை அத்துறையிலிருந்து நீக்கக் காரணம் அமெரிக்காவின் நிர்பந்தமாகும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணச் செய்தி கூறுகிறது.

இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் எரிவாயு பைப்லைன் திட்டத்திற்காக முயற்சி மேற்கொண்ட அமெரிக்க எதிர்ப்பாளரான மணி சங்கர் அய்யரை பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முரளி தியோராவை நியமித்தது அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவுச் செய்ய இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது. இதனைக் குறித்து கருத்துத் தெரிவித்த மணிசங்கர் அய்யர் இச்செய்தியில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தார்.
thanks; http://www.sinthikkavum.net/

0 கருத்துகள்: