கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முஸ்லிம்களுக்கு ரிசர்வு தொகுதி வேண்டும் TNTJ மாநிலப் பொதுக்குழு


2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பொதுக்குழு நிகழ்வுகள் பற்றிய விரிவான தகவல் அறிய புத்துணர்வூட்டிய டிஎன்டிஜே பொதுக்குழு!

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
முஸ்லி ம்களின் ஜீவாதார கோரிக்கை
1.    கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலி தா வாக்களித்தார். இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லி ம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

2.    அவ்வாறு அதிகப்படுத்தித் தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலி ல் முஸ்லி ம்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு பெற்றுத் தர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அயராது உழைக்கும் என்று இப்பொதுக்குழு உறுதியளிக்கின்றது.

3.    நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் முஸ்லி ம்களுக்கு பத்து சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று காரண காரியங்களுடன் பரிந்துரை செய்திருந்தார். மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதாக காங்கிரஸ் வாக்களித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லி ம்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

4.    முஸ்லி ம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், முஸ்லி ம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு 4.5 சத இட ஒதுக்கீடு என்று கூறி வஞ்சகமாக ஏமாற்றும் மத்திய அரசின் துரோகத்தையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.,

5.    இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் முன்னேறிய சமுதாயங்களான பார்சிகள், சீக்கியர்கள், மற்றும் கிறித்துவர்கள் தான் பயனடைவார்கள். முஸ்லி ம்கள் இதனால் பயனடைய மட்டார்கள் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.

6.    முஸ்லி ம்களுக்கு 6 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போர்ராட்டங்கள் நட்த்திய பின் புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் இன்னொரு பகுதியில் அறவே இட ஒதுக்கீடு இல்லை எனவும் அறிவித்தது. ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் ஆகிறது.  புதுவை அரசின் இந்த துரோகத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. புதுவை சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு ஆறு சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு புதுவை அரசை வலி யுறுத்துகிறது.

மாபெரும் அறப் பேராட்டம்
7.    தமிழகத்தில் முஸ்லி ம்களின் இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்திலி ருந்து ஏழு சதமாக உயர்த்த மாநில அரசை வலி யுறுத்தியும் இந்திய அளவில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டை சட்டாமாக்க மத்திய அரசை வலி யுறுத்தியும் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மாபெரும் அறப்போராட்டம் நடத்துவது என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

அப்சல் குரு தூக்குக்குக் கண்டனம்
8.    நாடாளுமன்றத் தாக்குதலி ல் தொடர்பு இல்லாத அப்சல் குருவுக்கு தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது நீதிபதிகள் சட்டப்படி இந்த வழக்கை அணுகவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இந்தியாவின் நீதித்துறை மீது உலகமே காரித்துப்பும் வகையில் இதுபோல் சட்டத்துக்கு அப்பாற்பட்டு தங்கள் இஷ்டத்துக்கு நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கேற்ப தக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

9.    அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை தீர்ப்புப் பெற்ற பலரது மனுக்கள் நிலுவையில் இருக்க வரிசைக்கு மாற்றமாக அப்சல் குருவின் மனுவை மட்டும் அவசரமாக நிராகரித்த குடியரசுத் தலைவரின் செயலையும், இதற்குக் காரணமான மத்திய அரசையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

10.    கருணை மனு நிராகரிக்கப்பட்ட பலர் உடனே தூக்கில் போடப்படாமல் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவி வருகிறது. ஆனால் அப்சல் குருவுக்கு மட்டும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் இரகசியமாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய மத்திய அரசின் அயோக்கியத்தனத்தையும்மதவெறிப் போக்கையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது

11.    தூக்குத் தண்டனை கைதிகளை தூக்கில் போடுவதற்கு முன்னர் அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து கடைசி சந்திப்புக்கு  ஏற்பாடு செய்யும் மரபை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கடைப்பிடித்து வருகின்றன. இந்த மரபை மீறி அப்சல் குருவின் குடும்பத்தினரில் யாருக்கும் தெரிவிக்காமல் இரகசியமாக தூக்கில் போட்ட காங்கிரசின் கயமைத் தனத்தை முஸ்லி ம்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

12.    எந்த மனிதனாக இருந்தாலும் அவனது மத நம்பிக்கைப்படி அவனுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட வேண்டும். கைதிகளாக இருந்தாலும் அது அவர்களின்   கடைசி உரிமையாகும். ஆனால் அப்சல் குருவுக்கு இஸ்லாமிய முறைப்படி ஜனாஸா தொழுகை நடத்தாமல் இந்துக்களின் பிணத்தைப் போல் புதைத்து இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராக காங்கிரஸ் அரசு போர் தொடுத்துள்ளதையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்கள்
13.    முஸ்லி ம்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரித்து உண்மைக்கு மாறான வகையில் திரைப்படம் எடுக்கும் கமலஹாசன், விஜய், விஜயகாந்த், அர்ஜுன் ஆகிய கூத்தாடிகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இதன் விளைவுகள் இனிமேல் கடுமையாக இருக்கும் என்று கண்டிப்பதுடன் மேற்கண்ட கூத்தாடிகளையும் அவர்களின் திரைப்படங்களை இயக்குபவர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் இப்பொதுக்குழு கடுமையாக எச்சரிக்கின்றது.

14.    முஸ்லி ம்களுக்கு எதிராக விஸ்வரூபம் திரைப்படம் அமைந்துள்ளது என்று ஒட்டு மொத்த முஸ்லி ம் சமுதாயமும் கருதும் போது இப்படத்தை தடை செய்திருக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

15.    விஸ்வரூபம் என்ற திரைப்படம் இஸ்லாம் மார்க்கத்தையும் முஸ்லி ம்களின் வேதமான திருக்குர்ஆனையும் ஒட்டு மொத்த முஸ்லி ம்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. இந்தப் படம் வெளியானால் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அனைத்து முஸ்லி ம் இயக்கங்களும் இக்கோரிக்கையை வைத்தன.

இதனை ஏற்று உடனடியாக இப்படத்தை தடை செய்த முதல்வர் ஜெயலலி தாவின் உறுதியான நடவடிக்கையை இப்பொதுக்கு பாராட்டுகிறது. இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க நடிகர் கமலஹாசன் இறங்கி வரச்செய்த தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

16.    விஸ்வரூபம் என்பது தனிப்பட்ட ஒரு நடிகனுக்கும் முஸ்லி ம்களுக்குமான பிரச்சனை. இது இந்து முஸ்லி ம் பிரச்சனை அல்ல. இந்துக்களை உயர்த்தி முஸ்லி ம்களைத் தாழ்த்தி இப்படம் எடுக்கப்படவில்லை. ஆனாலும் இப்படத்துக்கு முஸ்லி ம்கள் எதிர்ப்பு தெரிவித்ததைக் காரணம் காட்டி ஒட்டு மொத்த இந்துக்களை முஸ்லி ம்களுக்கு எதிராக தூண்டி விட்ட ஊடகங்கள் அனைத்தையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பரபரப்புக்காக உண்மைக்கு மாற்றமான வகையில் செய்திகளை திரிக்க வேண்டாம் எனவும் இப்பொதுக்குழு ஊடகங்களுக்கு அறிவுரை சொல்கிறது.

17.    முஸ்லி ம் பெயர் தாங்கி இயக்குனர் அமீர் உள்ளிட்ட திரைத்துறையினர் அனைவரும் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களைச் செய்திருந்தும் கூட இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் சீமான் ஆகிய இருவர் மட்டும் துணிவாக உண்மையை உடைத்துப் பேசியதற்கு இப்பொதுக்குழு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்லாமிய சட்டத்தை இழிவுபடுத்துவோரைக் கண்டித்து
18.    பச்சிளங்குழந்தையைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த குற்றத்துக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா என்ற பெண்ணுக்கு ஆதரவாகப் பேசி இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை விமர்சனம் செய்த கருணாநிதிக்கு இப்பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

19.    மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என்றால் அது குறித்து எங்களோடு விவாதிக்க தயாரா என்று கருணாநிதிக்கும் அறிவு ஜீவிகள் போர்வையில் உளறி வருவோருக்கும் பகிரங்க விவாத அழைப்பு கொடுத்தும் அதை ஏற்காத இவர்களின் கோழைத்தனத்தையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

20.    இலங்கையில் இந்துத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சிகளும் அங்கே முஸ்லி ம்கள் புத்த பிக்குகளால் தாக்கப்படுவதற்கும் பள்ளிவாசல்களை அடித்து நொறுக்குவதற்கும் எதிராக எவ்விதக் கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை என்பதை முஸ்லி ம்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என முஸ்லி ம் சமுதாயத்தை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

பாபரி மஸ்ஜித்
21.    பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லி ம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி  நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையைத் துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இப்பொதுக்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.

22.    பாபர் மசூதி குறித்த அலஹாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்து அநியாயத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை துரிதமாக விசாரித்து முடிக்க மத்திய அரசு முயல வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் ஆறப்போட்டு அநீதியிழைக்காமல் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

வக்ஃபு வாரியத்தை முற்றாகக் கலைக்கக் கோரி
23.    கிறித்தவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் கிறித்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. அதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஆனால் முஸ்லி ம் சமுதாய சொத்துகளை அரசின்  வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும் சுரண்டல்  பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என மாநில மத்திய அரசுகளை இப்பொதுக்குழு  கேட்டுக் கொள்கிறது.

24.    உள்ளூர் ஜமாஅத்துகள் வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்தால் மட்டுமே வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

முஸ்லி ம் தனியார் சட்டம்
25.    பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் திருமணத்துக்குத் தயாராகிறார்கள். பருவ வயதை அடைந்து 18 வயதை அடையாத பெண்கள் காதல் வலையில் விழுந்து சீரழிந்து போகிறார்கள். இந்த நிலை ஏற்படாமல் தடுக்க பொறுப்புள்ள சில பெற்றோர்கள் தங்கள் புதல்விகள் 16 வயதை அடைந்தவுடன் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் இது போன்ற திருமணங்களை குழந்தைகள் திருமணம் என்று சொல்லி  அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர் மீது வழக்கும் பதிவு செய்கிறார்கள். திருமணம் விவாகரத்து உள்ளிட்ட சில சட்டங்களில் முஸ்லி ம்களுக்கு தனியாக சட்டம் உள்ளதால் பருவ வயதை அடைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய முஸ்லி ம்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்படுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திருமண பதிவுகளில் கெடுபிடி
26.    உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருமணங்களை பதிவு செய்ய வேண்டுமென மாநில அரசு சட்டம் இயற்றியது. திருமணத்தை பதிவு செய்ய போகும் போது முஸ்லி ம்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். தற்காலத்தில் முஸ்லி ம்கள் திருமண பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கிறார்கள். திருமண பத்திரிக்கை கொண்டுவர வேண்டுமென அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர்.

நமது நாட்டில் ரேஷன் கடைகளில் உள்ள குளறுபடிகளை உலகமே அறியும். பெயரையும் வயதையும் தவறாக எழுதுதல், குடும்ப உறுப்பினர்கள் சிலரது பெயர்களை சேர்க்காமல் விட்டுவிடுதல் போன்ற குறைபாடுகள் ரேஷன் கார்டில் உள்ளது. திருமணத்தை பதிவு செய்யும் போது ரேஷன் கார்டில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு மாற்றமாக உள்ளதால் ரேஷன் கார்டில் பெயர் இல்லை என்பன போன்ற காரணங்களை கூறி திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது.

அதிகமான முஸ்லி ம் பெண்கள் ஆரம்ப கல்வியை தாண்டுவதில்லை. ஆரம்ப கல்வியை கற்ற சான்றிதழ்களையும் பாதுகாப்பதில்லை. திருமணத்தை பதிவு செய்யும் போது கல்வி சான்றிதழ்களை கேட்டு வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற நெருக்கடிகளால் முஸ்லி ம் திருமணங்களை பதிவு செய்வதை தவிர்ப்பதுதான் இச்சட்டத்தால் கிடைத்த நன்மை. எனவே இச்சட்டம் முழுமையாக பயனளிக்க வேண்டுமானால் முஸ்லி ம் நிறுவனங்கள், ஜமாஅத்துகள் முன்னிலையில் பதிவு செய்த திருமணச் சான்றையே ஆதாரமாகக் கொண்டு திருமணத்தை பதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை
27.    இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும்  இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
28.    இந்த தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.

முஸ்லி ம்களுக்கு ரிசர்வு தொகுதி
29.    சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லி ம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலி த் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லி ம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லி ம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

வன்கொடுமை சட்டங்கள்
30. பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக வன்கொடுமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை தலி த் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த சிறு பிரச்சனையானாலும் சாதியின் பெயரைச் சொல்லி  திட்டியதாக புகார் கொடுக்கின்றனர். ஜாதி வேறுபாடு காட்டாமல் தலி த் மக்களுடன் நட்புடன் பழகி வரும் முஸ்லி ம்கள் மீதும் இது போல் பல பொய்ப்புகார்கள் அளிக்கப்பட்டு ஜாமீனில் வரமுடியாத நிலையை முஸ்லி ம்கள் சந்திக்கின்றனர். முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சட்ட்த்தை அடியோடு நீக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது,

நோன்புக் கஞ்சிக்கு இலவச அரிசி
31. ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அரிசி வழங்கலி ல் தேவையற்ற கெடுபிடிகள் செய்து முஸ்லி ம்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.

இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்போர்
32.    காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலி ல் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

இஸ்லாத்தைத் தழுவியோருக்கான அரசு வேலைவாய்ப்பு
33.    பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தை தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை தழுவினால் அவர்கள் பிற்பட்ட சமுதாயமாக கருதப்படுவார்கள் என்று அரசாணை இல்லாததால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நடராஜ் அவர்களை சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை இபொதுக்குழு கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

பூரண மதுவிலக்கு
34.    மதுபானங்களும் இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும் கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டை குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி  முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த பொதுக்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும் நிம்மதியும் ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தப் பொதுக்குழு வற்புறுத்துகிறது.

35.    மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மதமாற்றம் செய்யும் கிறித்தவ கல்விக்கூடம்
36.    சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காமப் போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். அவர்கள் படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தைச் சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்து வராத கோஎஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

37.    சிறுபான்மை மக்கள் தனியாக கல்விக்கூடம் நடத்த அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையை அதிகமான கிறித்தவப் பள்ளிக்கூடங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன, கிறித்தவ மத வழிபாட்டை முஸ்லி ம்களும் இந்துக்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். தங்கள் சமுதாய மக்களை கல்வியில் உயர்த்திடவே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மத மாற்றம் செய்வதற்கு அல்ல. இப்படி சட்டத்துக்கு எதிராக நடக்கும் கல்விக் கூடங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன் இதுபோன்ற கல்விக்கூடங்களின் அனுமதியை ரத்து செய்யுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

38.    சட்டம் ஒழுங்குப்பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள இது போன்ற பள்ளிக்கூடங்களை அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இலங்கையிலும் பர்மாவிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை
39.    இலங்கையில் சிங்கள மக்களுடன் முஸ்லி ம்கள் நல்லி ணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லி ம்களுக்கு எதிராக புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை இடித்தும் முஸ்லி ம்களுக்கு எதிரான வன்முறையிலும் இறங்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கையின் இந்த அராஜகத்தை உடனே தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் எனவும், முஸ்லி ம் நாடுகளில் வாழும் தமிழ் கூறும் மக்கள் அந்தந்த அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துமாறு இப்பொதுக்குழு கடல் கடந்து வாழும் முஸ்லி ம்களைக் கேட்டுக் கொள்கிறது.

40.    அதுபோல் மியான்மர் எனப்படும் பர்மாவில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லி ம்களை விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உலகமெங்கும் வாழும் புத்த துறவிகள் மீது எதிர்வினை உலகமெங்கும் நடந்தால் அதற்கு மியான்மர் அரசும் இலங்கை அரசும் தான் பொறுப்பாவார்கள் என்று இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள தாலய்லாமா உள்ளிட்ட புத்த பிக்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு முஸ்லி ம்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

மத்திய அரசின் ஹஜ் மானியக் கொள்ளை
41.    ஹஜ் பயணிகளிடம் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அதில் 20 ஆயிரத்தை முஸ்லி ம்களுக்கு கொடுத்து அதை மானியம் எனக் கூறி முஸ்லி ம்களையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் மத்திய அரசின் இந்த வஞ்சகத்தை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. விமானக் கட்டணம், உணவு தங்கும் வசதி அனைத்தும் 70 ஆயிரத்துக்குள் அடங்கும் போது மேலும் 80 ஆயிரம் அதிகமாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. முஸ்லி ம்களிடம் காசு பறித்து அதில் சிறிதளவை அவர்களுக்குக் கொடுத்து அதை மானியம் என்று சொல்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

வளைகுடா பணியாளர் அவலம்
42.    வளைகுடா பணியார்களின் அதிகமானோர் குறைந்த ஊதியத்தில் கடினமான வேலைகளை செய்கின்றனர். இவர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்கு
43.    அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும் ஆணவத்துடனும் பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

44.     தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய துதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அணுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை
45.    சிறுபான்மையானாலும், பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லி ணக்கத்த்தைப் பேண முடியும் என்று அரசுக்கு இபொதுக்குழு ஆலோசனை கூறுகிறது.

கலவர தடுப்பு மசோதா
46.    ஆட்சிக்கு வந்தால் மதக்லவரத் தடுப்பபு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் வாக்களித்ததை தாமதமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

0 கருத்துகள்: