கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநாடு: பிப்ரவரி மாதம் நடக்கிறது

கும்பகோணத்தில் வருகிற பிப்ரவரி மாதம் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநாடு நடைபெறும் என்று முன்னாள் வக்பு வாரிய தலைவர் கவிக்கோ.அப்துல்ரகுமான் கூறினார்

இஸ்லாமிய இலக்கிய கழக தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான கவிக்கோ.அப்துல்ரகுமான் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கியக்கழகம் சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் பன்னாட்டு மாநாடு நடத்தப்படுகிறது. 1974ம் ஆண்டு திருச்சியில் இலக்கிய கழகம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 7 பன்னாட்டு மாநாடுகளும், 3 மாநில மாநாடுகளும் நடத்தியுள்ளோம்.

முஸ்லிம்களின் பங்கு தமிழ் இலக்கியத்தில் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இது தவறு என்பதை வெளிப்படுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் முஸ்லிம்களின் உலக இசை வரலாறு, இலக்கியத்தின் பங்கு போன்றவற்றையும், 1000 புலவர்கள் தமிழ் இலக்கியத்தில் 29 காவியங்களை படைத்துள்ளனர் என்பதை வெளிப்படுத்த உள்ளோம்.

சங்க இலக்கியங்களில் எத்தனையோ முஸ்லிம்கள் புலவர்களாக இருந்துள்ளனர். முஸ்லிம் புலவர்கள் மற்ற சமுதாயங்களை தாக்கி எழுதியதே கிடையாது. தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் புலவர்கள் பல நூல்களை படைத்துள்ளனர். பல நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் வெளியிடப்படவில்லை. பல நூல்கள் அச்சிடப்படாமலும் உளளன.

கும்பகோணத்தில் மாநில மாநாடு நடத்துவதாக இருந்தோம். ஆனால் மலேசியா, சிங்கப்பூர், அரபு நாட்டிலிருந்து புலவர்கள், கவிஞர்கள் வர உள்ளதால் பன்னாட்டு மாநாடாக நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல்சமது, பொருளாளர் ஷாஜஹான், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் ஆகியோர் இருந்தனர்

0 கருத்துகள்: