கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

புகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம்!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் மூலம்  இனி புகார்களை ஆன்லைனிலேயே பதிவு செய்ய இயலும். இதுவரை தமிழக முதல்வர் தனி பிரிவிற்கு ஏதேனும் துப்பு அல்லது புகார் தரவேண்டுமெனில் அவற்றை நேரடியாகவோ, தொலைபேசி  மற்றும் கடிதம் வாயிலாகவோ தான் அனுப்ப இயலும். அதுவும் அவற்றின் நிலை குறித்து நம்மால் அறிய இயலாது.

முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்களை அனுப்ப உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைப்பேசி இருந்தால் போதுமானது. முதல்வரின் தனிப்பிரிவு தளமான  http://cmcell.tn.gov.in/  என்ற தளத்திற்கு சென்று உமது பெயர் மற்றும் கடவு சொல் பதிவு செய்து பின் புகார்களை அனுப்ப இயலும். புகார்களை அனுப்பிய உடன் உமது மின்னஞ்சலுக்கு புகாருக்கான சான்று அனுப்பப்படும். உமது புகாரின் நிலை குறித்தும் அவ்வப்போது அறிந்து கொள்ள இயலும்.

0 கருத்துகள்: