குவைத் காயிதெமில்லத் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் முப்பெரும் விழா சிறப்புடனும் எழுச்சியுடனும் நடந்தேற வாழ்த்துவதாக அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி தெரிவித்துள்ளார்.குவைத் காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதன் முதலில் காயிதெமில்லத் பேரவை உருவாகியது ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் என்பதை அனைவரும் நன்கறிவோம்,அன்று நம்முடைய தலைவர்கள் இந்த பேரவை அனைத்து வெளிநாடுகளிலும் துவக்கப்பட வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு துவக்கியதன் விளைவு இறைவன் அருளால் இன்று அது நிறைவேறியதன் பலனை அடைந்துக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
அயல் நாடுகளில் பணிபுரியும் நமது சமுதாய சொந்தங்களின் தேவைகளையும், நலன்களையும் அரசின் கவனத்திற்கு அவ்வப்போது எடுத்துச் செல்லும் நமது தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்களை அழைத்து இந்த விழாவை நடத்த முனைந்திருப்பதை மகிழ்வோடு பாராட்டுகிறேன்.
குவைத் காயிதெமில்லத் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் முப்பெரும் விழா செய்தி அரபுலகில் பணிபுரியும் தமிழக முஸ்லிம்களின் கவனத்தை ஈர்ந்துள்ளதை காணமுடிகிறது.இந்த நிகழ்வின் வாயிலாக வெளிநாடு வாழ் தமிழக சமுதாயத்தின் கோரிக்கைகள் அரசாங்கத்தின் காதுகளுக்கு செல்லும் என்பதில் மாறுபட்ட கருத்திற்கு இடமில்லை.
விரிவான ஏற்பாடுகளை செய்து முப்பெரும் விழாவை எதிர் நோக்கி காத்திருக்கும் குவைத் காயிதெமில்லத் பேரவையினருக்கும், இந்த நல்ல நிகழ்வில் கலந்து கொண்டு சமுதாய அரசியல் தெளிவை பெற இருக்கும் நெஞ்சங்களுக்கும் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
அன்புடன் ஏ.லியாகத் அலி.
தலைவர் - அமீரக காயிதெமில்லத் பேரவை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக