(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
16.12.2012 அன்று புது டெல்லியில் மருத்துவப் படிப்புத் மாணவி அம்ருதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையும், அந்தப் பெண்சிங்கப்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகும் பிழைக்க வைக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் நெஞ்சை உருக்கிய சம்பவம் தான். அதேபோன்ற சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் காவல் நிலைய எல்கைக்குள்ளும், திருவாரூர் மாவட்டம்
வேதாரண்யத்தில் பள்ளி மாணவிகளுக்கும் தமிழ் நாட்டில் நடந்து அதனால் கண்டனங்கள் எழுப்பி , கவலையும் மக்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் மறுக்க முடியாது.
வேதாரண்யத்தில் பள்ளி மாணவிகளுக்கும் தமிழ் நாட்டில் நடந்து அதனால் கண்டனங்கள் எழுப்பி , கவலையும் மக்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் மறுக்க முடியாது.
ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்த சிலர் அதுவும் குறிப்பாக மகளிர், துபாய், சௌதி அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் போன்று இயற்றப் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு பெண்மணி கூறும்போது, ‘தான் துபையில் பல ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், அங்கே குற்றம் செய்தவர்களுக்கு மக்கள் மத்தியில், குற்றவாளிக்கு கசையடியும், மரண தண்டனையும் நிறைவேற்றுவதினைப் பார்த்ததாகவும் கூறினா’ கூறினார்.
அது மட்டுமல்லாமல் சில அரசியல் தலைவர்கள் குறிப்பாக இந்திய நாட்டு ஜனாதிபதி மகனும், பாராளுமன்ற உறுப்பினரானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மந்திரியும், மதுரை ஆதீனமும் பெண்கள் கண்ணியமான உடை அணிந்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று கூறி முற்போக்கு மகளிரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இன்னும் சிலர், பெண்கள் இரவு நேரத்தில் கணவரில்லாத ஆண்களுடன் செல்வதால் இதுபோன்ற குற்றம் நடக்கின்றது என்றனர்.
மதுரை ஆதீனம் ஒருபடி மேல் போய் பெண்கள் முஸ்லிம் மத பெண்கள் போல் உடை அணிய வேண்டும் என்று கருத்துக் கூறி இருக்கிறார். அப்போது தான் இசை முரசு நாகூர் அனிபா பாடிய பாட்டு, ‘முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே, முகத்தினை மறைத்திடு முஸ்லிம் பெண்ணே’ என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு மத்திய சமூக நலத் துறை அமைச்சர் பாலியல் குற்றம் செய்யும் மைனர் சிறுவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னும் சிலர் சினிமா, தொலைக் காட்சியில் வரும் பாலியல் தூண்டும் செய்திகள் தான் இளைஞர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று கூறுகின்றனர்.
மத்திய அரசும் இதுபோன்ற குற்றம் வராது தடுக்க அல்லது தண்டனை வழங்க என்ன செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி நியமித்துள்ளது.
நான் கூறிய அனைத்து தகவல்களும் தீ பற்றிய பின்பு அணைக்கும் செயலாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைகின்றேன்.
ஆனால் இஸ்லாமிய சரியாத் சட்டம் வருமுன் காக்கும் சட்டம் என்றால் மிகையாகாது.
ஏக அல்லாஹ் இறக்கி வைத்த திருக் குறானும், மனித வாழ்விற்கு நன்னெறி போதித்த நபி பெருமானாரின் நற்போதனைகளும் மனிதனை மாக்காளாக மாறாது பாதுகாத்துக் கொள்ளும் கேடையமாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது. போதை தலைக்கேறிவிட்டால் தாயென்றும், தாரமென்றும் குடிகாரர்கள் பார்ப்பதில்லை என்பதால் குடியினை தடை செய்து உள்ளது, உடல் அங்கங்கள் கணவருக்கு மட்டும் தான் காட்டவேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதினால் பெண்கள் கண்ணியமாக இருக்க வழி செய்துள்ளது, தனக்குத் திருமணமானவளைத் தவிர அடுத்தப் பெண்களைப் பார்க்கும்போது தலை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றும், பெண்களிடம் கண்ணியம் தவறும் மிருக குணம் படைத்தவர்களுக்கு அவர்கள் உணரும் படி கடுமையான சட்டங்கள் வரையறுக்க பட்ட சட்டப் பொக்கிஷம் தான் சரியத் சட்டம்.
அது சரி நமது நாட்டிலும் கற்பழிப்பிற்கு கடுமையான சட்டங்கள் குற்றவியல் சட்டத்தில் கேட்கலாம். நமது நாட்டில் பாலியல் குற்றவாளிகளை முகத்தினை மறைத்து நீதி மன்றத்திற்கு அனுப்பும் செயலினைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் சரியத் சட்டத்தில் குற்றம் செய்யும் நபர் வெட்கி தலை குனியும் அளவிற்கு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவதால் அவன் எங்கு என்றாலும் அவனை சமூக புறக்கணிப்புக்கு ஆளாக நேருடுகிறது. அவ்வாறு செய்யாததினால் ஆழ்வார் திருநகரில் பள்ளிச் சிறுமியினை கற்பழித்து கொன்ற கயவன் ஏற்கனவே அதுபோன்ற குற்றம் செய்து ஜாமீனில் விடுதலையாகி மறுபடியும் குடி வெறியில் அதே தவறினைச் செய்திருக்கின்றான்.
மனிதனால் இயற்றப் பட்ட சட்டத்தினுக்கும், இறைவனால் வழங்கப் பட்ட சரியத் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கிறேன்:
1) மனிதனால் இயற்றப் பட்ட சட்டம் பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவைகளின் கைப்பாவையாகி உள்ளது.அது காலப் போக்கில் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.
ஆனால் சரியத் சட்டம் ஏக அல்லாஹ் அருளால் இறக்கி வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு நிலையான சட்டம். மனிதன் வாழ்வில் அத்தனை தேவைகளுக்கும் வழி காணப்பட்டுள்ளது.
2) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நிலையானதல்ல. உதாரணத்திற்கு மது காங்கிரசு தமிழகத்தில் ஆண்டபோது திறந்து விடப் படவில்லை. ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகள் மதுவினை ஒரு வருமானம் வரும் துறையாக கருதினர். இன்றைக்கு மது விற்பனையால் ஆண்டுக்கு பதினெட்டுக் கோடி வருமானம் என கணக்குக் காட்டப் படுகிறது.
ஆனால் சரியத் சட்டத்தில் மதுவினைக் குடிப்பதிற்கும், விற்பனை செய்வதிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப் பாடு நேரத்திற்கு, அரசுக்கு ஏற்ப மாறுபட்டதில்லை.
3) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் வருங்கால சந்ததி பற்றி சிந்திப்பதில்லை. ஏனெறால் அந்தச் சட்டத்தினால் பயன் பெறுபவர் பெரும்பாலும் அரசியல் வாதிகள் என்பதால்.
ஆனால் அல்லாஹ்விற்கு வருங்கால சந்ததியினைப் பற்றிய சிந்தனை இருப்பதால் அவர்கள் பயன்படும் படி சட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பெண்கள் தங்கள் அங்க அடையாளங்கள் தன்னால் கைப்பிடிக்கும் கணவனுக்கு மட்டும் தெரிய வேண்டும் என்ற அளவிற்குத் தான் உடை உடுத்த வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. கணவனுடன் தான் பெரும்பாலும் பயணம் செய்யவேண்டும் அல்லது பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோருடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. அதுபோன்று செய்யது தனிப் பட்ட ஆணுடன் இரவு நேரத்தில் பயணம் செய்ததால் டெல்லியில் துரதிஷ்டமான சம்பவம் நடந்தது என்றால் மிகையாகாது.
4) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் குறிப்பிட்ட ஒரு நாடு, அதன் மக்களைச் சார்ந்து இருக்கும்.
ஆனால் இஸ்லாமிய நாடு அனைத்திற்கும் பொதுவான சட்டமாக சரியத் சட்டம் அமையும். இஸ்லாமில்லாத நாடுகளிலும் சரியத் சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தினைத் தவிர கடைப் பிடிக்கப் பட்டு வருவதினைக் காணலாம்.
5) மனிதனால் இயற்றப் படும் சட்டம் பொது இடத்தில் நன்னடத்தையும், அநாகரியத்தினை தடுப்பதாக அமைந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைவதில்லை.
சரியத் சட்டம் நன்மையினைக் காத்து, தீமையினை தடுப்பதாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு ஜினா என்ற விபச்சாரம் இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் மனிதனால் ஏற்படுத்திய சட்டம் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் வழங்கும் அளவிற்கு உள்ளது.
6) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நீதிப் படிப்பினை போதிக்கும் சட்டமாக அமையவில்லை.
ஆனால் சரியத் சட்டம் நீதி படிப்பினை போதிக்கும் சட்டமாக அமைந்துள்ளது.
7) மனிதனால் வடிவமைக்கப் பட்ட சட்டம் பொது அமைதிக்குப் பங்கம் வராதவரை அல்லது அந்தக் குற்றம் வெளி உலகிற்கு தெரியாதவரை குற்றமாகாது. திருமணமாகாத இருவர் ஒப்புதலுடன் உடல் உறவு கொள்வது குற்றமில்லை.
ஆனால் மறைவானவற்றை அறியும் திறன் கொண்ட அல்லாஹ்வால் இயற்றப் பட்டச் சட்டம் மறைவான தீய செயலிலிருந்தும் மனிதனை காக்கின்றது. கணவன் அல்லாத வேறு ஒருவருடன் உடல் உறவு கொள்வதினை சரியத் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை.
8) மனிதனின் சுயக் கட்டுப் பாடு தளரும்போது தவறுகள் நடக்கின்றன. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனும் சந்தர்ப்பம் கிடைக்காத பாலியல் குற்றவாளியாகத் தான் இருக்கின்றான். ஆனால் சரியத் சட்டமும், நபி பெருமானாரின் போதனைகளும் மனித ஒழுக்கத்தின் நீரூட்டாகும். ஆகவே தான் தனி மனிதனும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் நிதானம் இழப்பதில்லை.
இஸ்லாமிய சரியத் தண்டனை என்று சிலவற்றினைப் பார்க்கலாம்:
1) ஜினா: மனவியினைத் தவிர கள்ள உடல் உறவு கொண்டவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அவன் வெக்கித் தலை குனியும் அளவிற்கு நூறு கசையடிகள் தரப்படும்.
ஹோமோசெக்ஸ் என்ற புணர்விற்கு மரண தண்டனை உண்டு. ஆனால் உலகில் பல நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன என்பது வெட்ககேடு என்றால் மிகையாகாது.
2) மது குடித்தால் இருபது முதல் நாற்பது வரையிலான கசையடி.
3) சரிக்: திருடளுக்கு வலது கை வெட்டப் படும். நான் மக்க மாநகருக்கு 1999 முதல் தடவையாக சென்றபோது சில வலது கை வெட்டப் பட்ட கருப்பினத்தவரினைக் கண்டேன். விசாரித்ததில் அவர்கள் திருடியதால் கை வெட்டப் பட்டதாக சொன்னார்கள். அதுபோன்ற தண்டனை கொடுத்ததால் தான் இன்றும் ஹரம் சரிப்பில் தொழுகைக்கு பாங்கு சொன்னதும் தங்கள் வியாபாரம் செய்யும் நகைக் கடையினை கூட மூடாமல் விட்டு விட்டு தொழுகையினை முடித்து வரும்போது திருடு போகாமல் இருப்பதினைக் காணலாம்.
ஆனால் நமது நாட்டில் திருடர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்தும் சிறைச் சாலைகள் தான் அதிகம்.
4) காத் அல் டாரிக்: நெடுஞ்சாலைக் குற்றங்களுக்கு இடது கை, வலது கால் வெட்டப் படும்.
ஆகவே இஸ்லாமியர் மற்றவர்களுக்கு வழி காட்டும் நன்னடத்தை உள்ளவர்களாக திகழ வேண்டும். ஆனால் நம்மிடையே சிலர் மது குடிப்பிதினை பெருமையாகவும், ஜினா செய்வதினை உயர்ந்த அந்தஸ்து மனிதர் செய்யும் செயலாகவும், படித்த, பணக்கார இளைஞர்கள் மற்றவர்கள் போல் கண்ணியம் தவறும் உடை அணிவதும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது.
மாற்று மதத்தினவர் கூட இஸ்லாமிய மார்க்க நற்பண்பு, ஒழுக்கக் கட்டுப்பாடு பற்றி புகழும் பொது இஸ்லாமியர் முறை தவறி நடக்காது காக்கும் பொறுப்பு ஒவ்வொரு இஸ்லாமியருடைய கடமை என்பது சரிதானே தோழர்களே!
http://mdaliips.blogspot.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக