கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தஞ்சையில் இமாம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர்,ஜன.19-பட்டுக்கோட்டை அண்ணாநகர் பள்ளிவாசல் இமாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் தஞ்சை ரெயிலடி முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட தலைவர் அப்துல் பாசித் பைஜி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஆபீருத்தின் மன்பயி கண்டன உரையாற்றினார். முடிவில் மாவட்ட செயலாளர் முகம்மது இஸ்மாயில் ஜைனி நன்றி கூறினார். 

ஆர்ப்பாட்டத்தில் திரளான இமாம்கள் கலந்து கொண்டு, தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர்.
http://www.maalaimalar.com/

0 கருத்துகள்: