கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அடுத்தோருக்கில்லை அல்ஹம்துலில்லாஹ்!


ஆண் குழந்தை தனக்கு பிறந்திருக்கு அல்ஹம்துலில்லாஹ். அழகான வீடு கட்டி குடி போறேன் அல்ஹம்துலில்லாஹ். மனைவிக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். மருமகளாக நல்ல பெண் அமைஞ்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். காலேஜ்ல மகனுக்கு சீட் கெடச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். கார் வாங்கியிருக்கேன்
அல்ஹம்துலில்லாஹ். பெரிய கம்பெனியில் பையனுக்கு வேலை கெடச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். பெரிய இடத்து சம்பந்தம் பேசி முடிச்சிருக்கேன் அல்ஹம்துலில்லாஹ். பேரனுக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கெடச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். வீட்டுக்கு நேற்றுதான் ஏ/சி பொருத்தியிருக்கேன் அல்ஹம்துலில்லாஹ்.

ஆலம் & உலகம். ரப்பு & பரிபாலிப்பவனால் கிடைத்த நன்மைகள். விளைந்த செல்வங்கள் தனக்குக் கிடைக்கும் போது மட்டும் அல்ஹம்துலில்லாஹ் கூறப்படுகிறது. பொது நன்மை விளைவுகளுக்கு, அடுத்தோருக்கு அல்ஹம்துலில்லாஹ் மொழியப்படுவதில்லை. நினைவுகள். செயல்கள் அனைத்தும் தன்னை மையப்படுத்தியே பார்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கானதாகவும் நினைவுகள் மாறவேண்டும்.

உணவுப் பொருட்கள். பெட்ரோல் விலை குறைந்திருக்கிறது. நீண்ட காலம் குண்டும் குழியுமாக இருந்த ரோடு புதுப்பிக்கப்படுகிறது. பஸ் வரத்து இல்லாமலிருந்த பகுதிக்கு பஸ் விடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் ஒரு இடத்தை கடக்க மக்கள் சிரமப்படுகின்றனர். அங்கு பாலம் கட்டப்படுகிறது. இவற்றுக்காக அல்ஹம்துலில்லாஹ் வெளிப்படுத்தப் படுவதில்லை.

நாட்டின் பொருளாதாரம் மேலோங்கியிருக்கிறது. பொது மருத்துவமனை கட்ட முடிவெடுத்துள்ளனர். இரு நாடுகளுக்கிடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. நாட்டின் தலைவர் நோயின் வாயிலிருந்து மீண்டுள்ளார். தக்காளி, வெங்காயம் அதிகமாக விளைந்து சந்தைக்கு வந்திருக்கு. புது வழித்தடம் அமைத்து ரயில் விட்டிருக்கின்றனர். இவைகளுக்காகவும் அல்ஹம்துலில்லாஹ் சொல்லப்படுவதில்லை.

எனது பிள்ளை பஸ், இரயில், விமான விபத்திலிருந்து தப்பிவிட்டான் அல்ஹம்துலில்லாஹ். அதே விபத்திலிருந்து மீண்ட மற்றவர்களுக்கு அல்ஹம்துலில்லாஹ் கூறமாட்டேன் போக்கு மாறவேண்டும். எல்லோருடைய நன்மைகளுக்காகவும் ‘‘அல்ஹம்துலில்லாஹ்’’ கூறுவேன் எண்ணம் மனத்தில் ஏற்படவேண்டும்.
 ஜெ. ஜஹாங்கீர்
முஸ்லிம் முரசு செப்டம்பர் 2012
http://jahangeer.in/?m=201209

0 கருத்துகள்: