கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

விஸ்வரூபத்துக்கு 15 நாட்கள் தடை! சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே அனுமதி!



முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு 15 நாட்களுக்குத் தடைவிதித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை நேற்றுப் பார்வையிட்ட 21 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், அதில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினர். இந்தத் திரைப்படத்துக்குத் தடைவிதிக்கக் கோரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர், தமிழக உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

அதில், விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்குப் பாதிக்கப் படக்கூடும் என அச்சம் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

இதற்கு முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தமிழக உள்துறைச் செயலாளர் ராஜகோபாலுக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைத்தார். அதில் கோவை மாவட்டம் பதட்டமான பகுதியாகும்.இங்கு தற்போது அமைதி நிலவுகிறது. ஆனால் விஸ்வரூபம் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகும். எனவே அப்படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

ஒரு பெரிய பிரச்சினையை, அது உருவாகும் முன்பே இஸ்லாமிய அமைப்புகள் தடுத்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனால் அச்சம் அடைந்தது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. நல்லிணக்கம், அமைதியை விரும்பும் நடு நிலையாளர்களும் அச்சம் அடைந்து இருந்தனர்.

இந்த நிலையில் அந்த படம் இஸ்லாமிய தலைவர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டது. படம் பார்த்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

படம் பார்த்தவர்களில் ஒருவரான உயர்திரு ஜவாஹிருல்லா கூறுகையில் இந்த படம் முஸ்லிம்களை புண்படுத்துவதாக கூறினார்.

முஸ்லிம்கள் தம் உயிர் என போற்றும் குர்ஆன், பயங்கரவாதிகளின் கையேடாக சித்திரிக்கப்பட்டுள்ளது

சர்வதேச பயங்கரவாதி முல்லா உமர், தமிழ் நாட்டில் ஓர் ஆண்டுகள் தங்கி இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.

12 வயதேயான இஸ்லாமிய சிறுவன் ஆயுத அறிவு பெற்றுள்ளதாக காட்டப்பட்டு, சின்ன வயதில் இருந்தே முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக வளர்வதாக காட்டப்படுகிறது.

மாமன், மச்சான் என உரிமையுடன் பேசி நல்லிணக்கத்துடன் வாழும் நம் மண்ணில் இது போன்ற படங்கள், அமைதியை கெடுத்து விடும்.

முழுக்க முழுக்க பிரச்சார நோக்கத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் வரலாற்ற்றில் இப்படி ஒரு பிரச்சாரப்படம் வந்தது இல்லை.

இவ்வாறு அவர் பிபிசிக்கு பேட்டி அளித்தார்.

இந்த நிலையில்தான், நடு நிலையாளர்கள் அச்சம் அடைந்தனர். தேவையில்லாமல் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற பீதி ஏற்பட்டது. போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றால், அமைதி கெடுவதுடன், படத்துக்கு விளம்பரமாகவும் அமைந்து விடுமே என நினைத்தனர்.

ஆனால் முஸ்லிம்கள் மிகவும் கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக ஏதும் பேசவில்லை. யாராவது தவறாக பேசினால், மற்றவர்களுக்கு முன்பு நாங்களே கண்டிப்போம் என கடுமையாக எச்சரித்தனர்.

உயிரைக்கொடுத்தாவது படத்தை தடுப்போம் என அறிவித்த இஸ்லாமிய தலைவர்கள், வன்முறையை நாடாமல் சட்டத்தை மதித்து செயல்பட்டதில்தான், தம் முத்திரையை பதித்து விட்டார்கள்.

ஜன நாயக் முறைப்படி எதிர்ப்பை தெரிவித்த கையோடு, கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

இதன் விளைவாக படத்துக்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே, அனுமதி கிடைக்கும் என தெரிகிறது.

ஜாதி பலம், பண பலம், ஆள் பலம், சினிமா கவர்ச்சி என அனைத்தையும் மீறி அவர்கள் பெற்றி பெற்றாலும், அவர்கள் கமலுக்காக பிரார்த்தனை செய்யவே விரும்புகிறார்கள்..

தவறான எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம் என்பதே அவர்களின் செய்தி.



0 கருத்துகள்: