கோணுழாம்பள்ளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்த குரங்குகள் தற்பொழுது கூட்டம் கூட்டமாக ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றித் திரிந்து மரங்களில் இருக்கும் காய்களையும், வீட்டு மாடி மற்றும் திறந்த வெளி பகுதிகளில் காய வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களையும் நாசம் செய்து வருவது வாடிக்கையாகி விட்டது.
கோணுழாம்பள்ளம்.மெயின்ரோடு,மேலத்தெரு,வடக்குத்தெரு,பள்ளிவாசல்
தெரு,மற்றும் திட்டச்சேரி,இருமுலை,நெயக்குன்னம்,மதகுசாலை போன்ற
கிராமங்களையும் இக்குரங்குகள் அட்டவணை முறையில் அட்டகாசம் செய்து
வருகிறது மேலும் வீட்டு மாடி மற்றும் திறந்த வெளி பகுதிகளில் காய வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளையும் பாத்திரங்களையும் எடுத்து சென்று அடுத்தடுத்த வீட்டு மாடிகளில் எறிந்து விட்டு செல்கிறது. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொள்ளிடக்கரை,ராஜன்வாய்கால்ஆறுகளில் ஒரு காலத்தில் இருபுறமும் பலவகையான மரங்ககள் ஓங்கி வளர்த்து பசுமையான இயற்க்கை சூழலை எடுத்து காட்டியது,மழை,புயல்,போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாக பல மரங்கள் அழிந்து போயின,அங்கு வாழ்ந்த குரங்குகள் உணவுக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு உணவு தேடி படையெடுக்க ஆரம்பித்து விட்டது
சமீபத்தில் தமிழக அரசு குரங்குகளின் எண்ணிகையை குறைக்க கணிசமாக நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியின் மூலம் நமதூரில் இருக்கும் குரங்குகளை குறைக்கும் நடவடிக்கையை வனத்துறையினரால் எடுக்கப்படுமா..?

0 கருத்துகள்:
கருத்துரையிடுக