கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அய்யா சொன்னது நீங்கள்தானா....? சொல்லுங்கள் அய்யா சொல்லுங்கள்....

1992ம் ஆண்டு புரட்சியாளர் பழனிபாபா அவர்கள் எழுதிய ஹிந்துஸ்தானத்திற்கு- ஹிந்துவுக்கு ஆபத்து!?!?!? என்ற நூலில் அய்யா மருத்துவர் ச.இராமதாஸ் அவர்கள் எழுதிய நூல் மதிப்புரை. காலத்தின் தேவை கருதி புரட்சியாளரின் பிள்ளைகள் இன்றைக்கு மறு வாசிப்பு செய்கிறோம்.


நூல் மதிப்புரை
டாக்டர் ச.இராமதாஸ், எம்.பி.பி.எஸ்.,
நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி
திண்டிவனம்.

அன்பிற் சிறந்த அருமைச் சகோதரர் அல்ஹாஜ் பழனி பாபா அவர்கள், சனாதன இந்துமத வெறியன் இராமகோபாலய்யர் என்ற பார்ப்பனன் எழுதிய “ இந்துஸ்தாணத்திற்கு –இந்துவுக்கு ஆபத்து(!?!?!?) என்பதற்கு மறுப்பாக இச் சிறு நூலை எழுதியுள்ளார்.

மோச மதங்களுக்கிடையே நேச மார்க்கமாகத் திகழும் இஸ்லாமிய நன் மார்க்கத்தையும்,அதைப் பின் பற்றும் சிறுபான்மையினராகிய முஸ்லீம் சகோதரர்கள் மீதும் பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்து மதவெறியைக் கிளப்பி அதற்குப் பெரும்பான்மைகளின் நலன் என்ற மேற்பூச்சு பூசி, தொடர்ந்து தங்களை சமுகத்தின் மேல் தட்டிலேயே தக்க வைத்துக்கொள்ளும் சூழ்சிகளை இந்துக்கள் என்று தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் உணரத்தொடங்கவில்லை.

இந்து என்றாலே அது பார்ப்பானுக்குதான் பலனைத் தரும், என்ற உணமை என்றைக்கு வெகுமக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட, மற்றும் முன்னேறிய சமூகத்தாருக்கு தெளிவாகிறதோ, அன்றைக்குதான் இந்த மண்ணில் தோழமையுணர்வுகள் துளிர்க்கத் தொடங்கும்.

வாளேந்தியக் கூட்டத்தையே இன்றைக்கு நூலேந்தியக் கூட்டம் வளைத்து காலில் விழுந்து வணங்க வைத்து விட்டது என்றால், அந்த “புல்லு”ருவிப் பார்ப்பனர்களின் நரிதந்திரம் எவ்வளவு நாசமானது என்பது விவரமானவர்களுக்குப் புரியும்.

“நான் பார்ப்பாத்திதான்” உங்களால் என்ன புடுஞ்க முடியுமோ புடுங்குங்கடா பார்க்கலாம் என்பது போல் ஆணவத்தோடு சட்டமன்றத்திலேயே ஒரு அய்யங்கார் அம்மையாரால்(ஜெயலாலிதா) துடுக்காகப் பேச முடிந்தது. வந்தேறிகளுக்கு உள்ள இந்த பசுங்கொழுப்பு வளர்ந்தும் தளர்ந்தும் போன இந்தச் சொந்த மண்ணின் சொரணை கெட்டவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று எண்ணி வேதனைப்படுகிறேன். மண்டியிட்டே மாசடைந்து போய்க் கொண்டிருக்கும் என் மண்ணின் மைந்தர்களின் மார்ப்பைக் கண்ணீர் விட்டாவது கழுவ வேண்டும் என்கிற ஆதங்கம்தான் எனக்கு ஏற்படுகிறது.

அரசியல் சட்டத்திலேயே அண்ணல் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விதி 340-இல் ஒரு பாதுகாப்பு அளித்தார். அப்படியிருந்தும் கடந்த 45 ஆண்டுகளில் 43 ஆண்டுகளுக்கு மேலாகப் பார்பனர்களே பிரதமர்களாக நேரு முதல் நரசிம்மராவ் வரை ஆண்டும், இன்னும் மண்டல் அறிக்கை பரிந்துரை கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பயன்படாமல் சூழ்சியாகத் தடுக்கப்படுகிறது என்றால், கானல் நீரை நம்பி ஓடும் மானைப் போல ’இந்து’ ’இந்து’ என்று நாக்கைத் தொங்க விட்டு ஓடுக் கொண்டிருக்கும் எனது மக்களின் பரிதாப நிலைக்கு யார் பரிகார தேடுவது.

இஸ்லாத்தைப் போல கட்டித் தழுவிக் கொள்ளக் கூட வேண்டாம்; இந்துமதம் தன் பிள்ளைகளுக்குள் தொட்டுக் கொள்ளவாவது இதுவரை வழி கண்டதுண்டா? படிகட்டு முறை போலப் பல்லாயிரம் சாதிகள். இவர்களின் மேலே குதிரையேறும் பார்ப்பனச் சாதிகள். அனைவரும் சமம் என்கிற ஆண்டவன் சன்னிதானத்திலாவது கீழ்ச்சாதியொருவனுக்கு அர்ச்சகராகிட அனுமதித்தது உண்டா?

தகுதி-திறமை என்று தகிடுதத்தம் பேசிடும் தர்ப்பைப் புல்லர்கள் ஏரோட்டுதல், துணி துவைத்தல், முடிவெட்டுதல்,கருமர்,தச்சு வேலைகள் முதலான மனித உழைப்புகளுக்கு மரியாதை தந்ததுண்டா? மந்திரம் ஓதும் தொழிலில் மட்டும் அப்படி என்னடா பெரிய மகத்துவம் இருக்கிறது? மந்திரத்தால் மாங்காய்தான் விழுந்திடுமொ என்று பகுத்தறிவோடு பழமொழி பேசிய நாட்டில் இன்று திருமணத்திலிருந்து திவசம்-திதிவரையில் மந்திரம் ஓதும் பார்பானுக்குச் சிறப்பிடம் தந்த சீரழிவு எப்படி ஏற்பட்டது?

தமிழழனின் தடித்துப் போன தோலுக்கும், உலுத்துப்போன மூளைக்கும் ஒருபெரியார்- ஒரு அம்பேத்கர் போதாது ஊருக்கு ஊர்-தெருவுக்கு தெரு அத்தகைய வாழ்வியல் வழிகாட்டிகள் மிகவும் தேவை.

தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு திரு.பழனிபாபா போன்றவர்களின் கண்ணியமான கருத்துக்கள் கலங்கரை விளக்கம்போல் இருந்து கடைத்தேற்றும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

“இழந்த பழம்பெருமை மீட்கத்தான் வேண்டும்; இனி இரண்டில் ஒன்றைப் பார்க்கத்தான் வேண்டும்” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூறியதைப் போல் தமிழ் மக்கள் தங்களின் நன்மை தரும் பழம் பெருமைகளான வீரத்தையும், அன்பையும் மீட்டெடுக்கவேண்டுமெனில், முதலில் நமக்கு எதிர் யார்? நண்பன் யார்? என்று இனம் காண வேண்டும். இதை கண்டறிவதில் மயக்க ஏற்பட்டால் நிலவராமகிவிடும். அப்படி அடையாளம் காண்பதற்கு அல்ஹாஜ் பழனிபாபா அவர்கலின் இந்த சிறு நூல் பெரும் வழிகாட்டியாக அமையும்.

மனிதநேயத்தினும் சிறந்த மார்க்கமொன்று இல்லை என்பது எனது எண்ணமாக்ம். அதை வளர்க்கப் பாடுபடும் யாராயினும் எமது நண்பர்களே மனிதநேயத்தை அழிக்கத் துணையிருப்பவர் யாராயினும் அவர்கள் எம் எதிரிகளே.

அந்த வகையில் எமக்கு உயிர்த் தோழராக வாய்த்த அன்பர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் இந்த நூல் பரந்து பட்ட அறிவையும்,பண்பட்ட உள்ளத்தையும்,சிறப்பாகஎடுத்துக்காட்டும் நூலாகும்.

பார்ப்பன வந்தேரிகள் உட்பட பலரும் இந்நூலை நடுநிலைச் சிந்தனையோடு நின்ரு படித்துப்பார்த்தால் தங்கள் முனேற்றத்தின் முட்டுக்கட்டைகள் யார்? துணையிருப்பவர்கள் யார்? என்கிற அடையாளத்தை மிகச் சுலபமாக கண்டுகொள்ள முடியும்.

விலைவாசி நாளுக்கு நாள் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற பிரச்சனையை சிக்கலுக்குட்படுத்தி நயவஞ்சகப்பார்ப்பனர்களை நம் மக்கள் புரிந்து கொண்டு கூடிய விரைவில் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க தவற மாட்டார்கள்.

ஆனந்த் முந்திரா ஊழிலிருந்து ஹர்ஷத் மேத்தா ஊழல் வரையிலும், டான்சி ஊழலிருந்து சசிகலா எண்டர்பிரைசஸ் ஊழல் வரையிலும் பார்ப்பனர்கலின் சுயநலமும் ஊழல் மோசடிகளும் வெட்ட வெளிச்சமாயிருந்தும் இன்னும் இவர்கள் இந்த நாட்டைக் கெடுப்பதற்கு என்ன பாக்கிவைத்திருக்கிறார்களோ தெரியவில்லை, மாறி மாறிக் கோட்டையாளத் துடிக்கிறார்கள்.

நம் கைவிரலைக் கொண்டே நம் கண்ணைக் குத்தும் பார்ப்பனர்களின் சாகசங்களைப் புரிந்துகொள்ள திரு.பழனிபாபா அவர்களின் இச்சிறு ஆய்வு நூல் பெரிதும் பயன்படும்.

எனவே இந்நூலை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப் படிப்பதுடன், படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும் இந்நூலில் உள்ள கருத்துக்களை எடுத்துக்கூற வேண்டும் அதுபோலவே அல்ஹாஜ் பழனிபாபா அவர்களுக்கு வெகுமக்களுக்கு பயன்படும் வகையில் இதுபோல் பல பயனுள்ள நூல்களை தமிழ்ச் சமுதாயத்திற்கு அடிக்கடி கொடையாக வழங்கிட வேண்டுகிறேன்.
                                                                                                              -அன்பன்  
                                                                                                        ச.இராமதாஸ்
உமர்கயான். தமிழினியன். சே.ஜெ முகநூலில் இரூந்து
                                                                                                                                                                                                                                                                                          

0 கருத்துகள்: