அஸ்ஸலாமு அழைக்கும்
தற்போது இந்திய நாட்டின் அனைவரின் கவனமும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே இருக்கின்றதுநமது நாட்டின் நாளைய பிரதம மந்திரியார் ? நமது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யார் ? என்று பல கேள்விகளோடு நாம் அனைவரும் முக நூலில் ஒரு கருத்து யுத்தம் நடத்தி வருகின்றோம் .அதே சமயம் முக நூலில் ஒரு ஆரோக்கியமற்ற மோதல் நடந்து வருவது நமது சமுதாய மக்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி நம்மை நாமே வீழ்த்துகின்றோம் .
நீயா நானா ?
இது விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தலைப்பு என்று எண்ணி விடாதிர்கள். இந்த தலைப்பு சரியாக பொருந்த கூடியது தமுமுக விற்கும் , ததஜ விற்கும் மட்டுமே தான் .
ஒரு தேர்தலில் இவர்கள் ஆ தி மு க வை ஆதரிக்கின்றனர் மற்றொரு தேர்தலில் தி மு க வை ஆதரிக்கின்றனர் .தொடர்ச்சியாக இவர்கள் இருவரும் மாறி மாறி ஆளும் கட்சியையும், எதிர்கட்சியையும் ஆதரித்து வரும் தருவாயில் .இரு சமுதாய அமைப்பினரும் முக நூலில் கருத்து பரிமாற்றம் என்ற பெயரில் அமைப்பின் நல்ல பணிகளை எல்லாம் வீணடித்து இரு அமைப்பினரையும் சமுதாய துரோகி என்ற முறையில் சித்தரித்து வருவது கண்டத்திற்குரியது ........
இஸ்லாமிய அமைப்புகளில் இன்று வலிமையான அமைப்புகளாக உள்ள தமுமுக வும் , ததஜ வும் எண்ணற்ற பல நன்மைகளை செய்துள்ளதை நாம் யாரும் மறுக்க முடியாது . நாம் மற்ற அமைப்புகளை குறைவாக சொல்லவில்ல , மற்ற அமைப்புகளும் பல நற்பணிகளை செய்துள்ளதை மறுக்கவில்லை .குறிப்பாக இந்த இரு அமைப்பை பற்றி விமர்சனம் செய்கின்றேன் என்றால் , இரு அமைப்பை சார்ந்தவர்களின் தவறான கருத்து பரிமாற்றத்தை சுட்டி காட்டுவதற்காக மட்டும் தான் .
இந்த அமைப்புகளில் ஒரு அமைப்பை சார்ந்தவர் சுனாமி ஊழல் என்கின்றார் ? , மற்றொரு அமைப்பை சார்ந்தவர் பெட்டி வாங்கி கொண்டு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்ற புகார் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது .இந்த கருத்து மாற்றம் சமுக வலைத்தளத்தில் நடப்பது நம் சமுதாயம் மீது மாற்று மத சமுதாய மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை குழி தோண்டி புதைக்கின்ற வகையில் உள்ளது .
இறையச்சம் கொண்ட சகோதரர்களே , நம் சகோதரர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும் , அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் அவர், ஒரு இஸ்லாமியர் என்ற முறையில் நாம் அனைவரும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.குறிப்பாக , மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர், முஸ்லிம் லீக் வேட்பாளர் , சோசியல் டெமாக்ரடிக் வேட்பாளர் ஆகியோரை நாம் ஆதரிக்க வேண்டும் .இன்ஷா அல்லாஹ் அவர்கள் அனைவரும் நம் சமுதாயத்திற்காக குரல் கொடுப்பார்கள் .
குறிப்பாக ஒன்றை சிந்தித்து பாருங்கள் , பல கட்சிகளை சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊழல் என்பதை மட்டுமே தங்களது பணிகளாக செய்துவரும் தருவாயில் , மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் , முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவையையும் ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் ! உங்கள் ஓட்டு ஊழலுக்கும் , பாசிசத்திற்குமா ? அல்லது நம் சமுதாய மக்களின் உயர்வுக்கா ? சிந்தியுங்கள் !!!
மரியாதைக்குரிய தமுமுக , ததஜ சகோதார்களே தயவு செய்து உங்களது கருத்து யுத்தத்தை நிறுத்துங்கள் .சமுதாய நலனுக்காக சிந்தியுங்கள் . அதைவிடுத்து ,மரியாதைக்குரிய சகோதரர்கள் பீஜெ அவர்களையும் ,ஜவாஹிருல்ல்லாஹ் அவர்களையும் தவறாக சித்தரித்த புகை படங்களை வெளியிட்டு உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதிர்கள் ..
உங்களின் ஒரு வாக்கு கூட மோடிக்கு துணை போக கூடாது .....தமிழகத்தை மீண்டும் ஒரு குஜராத்தாக மாற்ற ஒரு துளி அளவு கூட வாய்ப்பளிக்க கூடாது .....
எதாவது தவறாக சுட்டி காட்டியிருந்தால் மன்னிக்கவும் ! சிந்தித்து வாக்களியுங்கள் ! மீண்டும் சலாம் ,
உங்கள் நண்பன் அய்யுப்
முகநூலில் இருந்து
0 கருத்துகள்:
கருத்துரையிடுக