கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மல்லிபட்டினம் கலவரம் – நேரடி ரிப்போர்ட் !

மீனவ கிராம பகுதியாகிய மல்லிபட்டினத்தில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகமாக நல்லிணக்கத்துடன வாழ்ந்து வருகின்றனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் இந்த பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் இன்று பகல் வருகை தந்துள்ளார். இவரோடு பிஜேபியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் வாக்கு சேகரிக்க வந்து இருக்கின்றனர்.

வாக்கு சேகரிக்க வந்தவர்களிடம் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்று கொண்டிருப்பதால் இந்த வழியே செல்ல வேண்டாம் என்று அங்கு கூடியிருந்தவர்கள் அறிவுறுத்தியதாகவும், இதை சட்டைசெய்யாதவர்கள் தொடர்ந்து சத்தத்துடன் கோஷமிட்டவாறு அந்தவழியே செல்ல முற்பட்டதால் இருதரப்பினரிடேயே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு நடந்துள்ளது. இதில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பள்ளிவாசல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலவர செய்தி காட்டுதீயை போல் பரவியதால் மல்லிபட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹபீப் முஹம்மதுக்கு சொந்தமான படகுக்கு மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிசைக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

மரைக்காவுக்கு சொந்தமான டீசல் பங்கையும் சேதப்படுதியுள்ளனர். நிலைமை மோசமாவதை தொடர்ந்து போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டு மல்லிபட்டினம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கண்காணிக்கபட்டு வருகிறது. கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி தொழுகைக்கு வந்தவர்களையும், அங்கு நின்ற அப்பாவிகள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் 

நன்றி அதிரை நியூஸ்

0 கருத்துகள்: