கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பிளஸ் 2 தேர்வு இணையதள முகவரிகள்

சென்னை: வரும் மே 9ல் வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவை மாணவர்கள் இணையதளம் மூலம்  எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வுத் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது நான்கு இணையதளங்களில் தேர்வுத்துறை வெளியிடுகிறது;

மாணவர்கள் மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல்
ஆகிய நான்கு இணையதளங்களில் தேர்வு முடிவை பார்க்கலாம்.

இணையதளத்தில் பார்க்க தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம். இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.

மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன் எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது. மாவட்டங்களில் உள்ள தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் எந்த ஒரு பாடத்துக்கும்  விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மறு கூட்டல் செய்யவோ  விண்ணப்பிக்கலாம். அப்படி விரும்புவோர் 9ம் தேதி முதல் 14ம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும்  மாணவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க  கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல் மற்றும் மறு  மதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல்  பெறுவதற்கு பகுதி 1 மொழி ரூ.550, பகுதி 2 மொழி ஆங்கிலம்  ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த  வேண்டும். மறுகூட்டல் செய்ய பகுதி 1 மொழி, பகுதி 2 (ஆங்கிலம்)  மற்றும் உயிரியல் பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, மற்ற பாடங்கள்  ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

0 கருத்துகள்: