கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

828 மீட்டர் உயர துபாய் புர்ஜ் கலிபாவில் இருந்து பேஸ் ஜம்ப்: புதிய உலக சாதனை

828 மீட்டர் உயர துபாய் புர்ஜ் கலிபாவில் இருந்து பேஸ் ஜம்ப்: புதிய உலக சாதனைஉயரமான கட்டிடங்களில் இருந்து கீழே குதிப்பது ‘பேஸ் ஜம்ப்பிங்’ என்றழைக்கப்படுகிறது. ‘ஸ்கை டைவிங்’ போன்ற சாகச விளையாட்டாக கருதப்படும் இந்த முறையில் கீழே குதித்து சாதனை படைக்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை துபாய் நகரில் நடைபெற்றது.

துபாயின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா வணிக வளாகத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு சாகச வீரர்கள் அக்கட்டிடத்தின் மேல் தளமான 828 அடி உயரத்தில் இருந்து குதித்ததன் மூலம் இந்த புதிய உலக சாதனையை ஏற்படுத்தினர்.

வின்ஸ் ரெஃபெட் மற்றும் ஃப்ரெட் ஃபுகென் இரட்டையர்கள் மஞ்சள் நிற உடையில் இந்த கட்டிடத்தில் இருந்து குதித்து முந்தைய உலக சாதனையை முறியடித்தனர். இவர்கள் இதுவரை சுமார் 600 முறை இதுபோன்ற சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புர்ஜ் கலிபாவில் இருந்து குதிப்பதற்காக சுமார் ஓராண்டு பயிற்சி மேற்கொண்ட இவர்கள், கடந்த 2010-ம் ஆண்டு அரபு எமிரேட்டை சேர்ந்த இருவர் இதே புர்ஜ் கலிபா கட்டிடத்தின் 672 அடி உயரத்தில் இருந்து குதித்ததன் மூலம் ஏற்படுத்திய பழைய சாதனையை தற்போது முறியடித்துள்ளனர்.

                  

0 கருத்துகள்: