கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கப்பலுக்கு போன மச்சான்

வண்ணமயமான வாழ்க்கை கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இந்த பாலைமண்ணிலே வந்திறங்கிய என்னருமை சகோதர, சகோதரிகளே!

உங்களின் கணவுகள் எந்த இடத்தில் இருக்கின்றது.
நனவாகிவிட்டதா? இல்லை அது இந்த பாலைவெளியின் கானலை போன்ற கணவுகள் தானா?
அமுதுடன் அன்பையும் ஊட்டி வளர்த்த உன் அன்னை, நீ படிக்கவேண்டும் என்று தன் ஆசைகளை சுருக்கிக் கொண்ட உன் தந்தை, நீ மேற்படிப்பு படிக்க தன் படிப்பை விட்ட உன் சகோதரன், உன் கல்லூரி செலவுகளுக்காக நான் காட்டன் மில் வேலைக்கு செல்கிறேன் என்று சென்ற உன் சகோதரி.

கப்பலுக்கு போன மச்சான் கண்ணிறைந்த ஆசை மச்சான் எப்பத்தான் வருவீங்களோ எனக் காத்திருந்து காத்திருந்தே தலை முடி நரைத்துப் போகும் உன் ஆசை மனைவி.

உன்னை கண்டு அஞ்சி தாயிடம் ஒடி ஒளியும் உன் குழந்தை இப்படி பல உறவுகளையும் மொத்தமாக விட்டு விட்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வந்திருக்கின்றாய்.
வந்திறங்கிய நாள் முதலே நீயோ உன்னுடைய ஆசைகளையும் அவசியங்களையும் பின்னால் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த மண்ணிலே ஏதோ பெரும் புதையல் போன்று புதைத்து வைத்து விட்டு உழைத்து உழைத்து ஓடாக தொடங்கிவிட்டாய். உன் மனதுடன் என்றாவது பேசிப் பார்த்திருக்கின்றாயா? அது தினசரி அழுகின்றதே. என்றேனும் அதை சமாதானப்படுத்த மாற்று வழியை தேடியிருக்கின்றாயா? இந்த பாலை மண்ணிலாகட்டும் அல்லது தாய் மண்ணிலாகட்டும் பெரு மழையே பெய்தாலும் ஒரு சில நாட்களில் அதன் ஈரம் காய்ந்து விடுகின்றது.


ஆனால் உன் நெஞ்சுக்குள் உள்ள ஈரம் மாத்திரம் எப்படி 48 டிகிரி செல்சியஸில் சுட்டெரிக்கும் சூட்டிலும் ஈரமாகவே இருக்கின்றது. உன் குடும்பத்தின் சூழ்நிலை உன்னை அந்த சூரியனையே திருப்பிச் சுட்டெரிக்க வைக்கின்றதோ?

ஒண்ட இடமில்லாமல் ஒலை குடிசையிலே உன் பெற்றோரையும், உன்னுடன் நாள்கணக்கில் மாத்திரம் இல்லற ரேஷன் அனுபவித்த உன் மனைவியையும் அதன் மூலம் நீ பெற்ற உன் வாரிசு பள்ளிக்கு படிக்க போயும் அதன் முகமறியாதிருக்கும் நீ அவர்களை விட்டு விட்டு வந்து உழைத்துக் கட்டிய வீட்டின் கடன் உன்னை இங்கிருக்கச் செய்கிறதோ!

வீட்டை கட்டிய நீ அதில் வசிக்கும் உன் பெற்றோர் கொண்ட நோய்களுக்கு செய்த செலவுகள் உன் நெஞ்சின் ஈரத்தை காயவிடாமல் உன் பயணத்தை தடை செய்கின்றதோ!

நீங்கள் (மணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடைகளை மகிழ்வோடு கொடையாக கொடுத்துவிடுங்கள்) என்று இறைவன் நம் மீது மஹரை கடமையாக்கியிருக்க உன் சகோதரியை பெண் கேட்டு வந்தவன் கேட்ட வரதட்சணையை கொடுத்து உன் இறைவனின் வாக்கை விட உன் சகோதரியின் வாழ்வே முக்கியம் என்று செய்வித்த திருமணக் கடன் இன்னும் உன்னை இங்கேயே தங்கிடச் செய்துவிட்டதோ!

தாய்நாட்டிலே கிடைக்கும் வேலைகளெல்லாம் நான் படித்த படிப்புக்கு தக்க சம்பளத்தை தரவில்லை. நான் வெளிநாட்டில் மட்டும் தான் வேலை செய்வேன் என்று வீம்பு பிடித்த உன் சகோதரனுக்கு நீ எடுத்த பயண டிக்கட்டும் விசா செலவினங்களும் உன் தாய்நாட்டை எட்டிப்பார்க்;க விட வில்லையோ!

 அடடே! கல்லூரியிலே மெத்த படித்துவிட்டு கக்கூஸ் கழுவும் வேலை மட்டும் தான் கிடைத்தது என்று அலுத்துக்கொள்ளும் உன் சகோதரன் கூடவா உன் பயண டிக்கட்டுக்கு உதவவில்லை!

நாலாயிரம் வாங்கும் அவன் ஊருக்கு போனால் செய்யும் பந்தா ஏதோ இவன் தான் அரபு ஷேக்கின் நேரடி பணியாளன் போல் அங்குள்ளவர்களை நினைக்க வைக்கின்றதே. பின் ஏன் அங்குள்ளவர்கள் இவனிடம் வாசைன திரவியமும் சிகரெட்டும்; கேட்காமல் விடுவார்கள்?

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி, உழைத்தால் பெறுகாதோ சாகுபடி! என்ற கவிஞன் மருதகாசியின் வரிகளை மறந்துவிட்டு இங்கிருந்து தூக்க முடியாமல் லக்கேஜ் தொகை கட்டி தாயக கஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அள்ளி வழங்கினானே பாரிவள்ளல் உன் சகோதரன் அவன் திரும்பிவர பயண டிக்கட்டுக்கு எந்த உறவும் ஏன் உதவவில்லை!

கட்டிக்கொடுத்த உன் சகோதரி வீட்டில் பத்தாயிரம் சீனி வடை, எட்டாயிரம் பணியாரம் என்று வெட்கமில்லாமல் கேட்டதுதான் நீ கட்டிய புதுவீட்டை உன்னால் எட்டிப்பார்க்க வைக்கவில்லையோ! சீனி வடையும் பனியாரமும் தன் வீட்டில் செய்து திங்க வழியில்லாத வக்கற்றவனுக்கா நீ உன் சகோதரியை திருமணம் செய்து கொடுத்தாய்? அவன் கேட்பதை நிறுத்த விரும்பினாலும் அவன் தாயும் சகோதரிகளும் கேட்பதை விடப்போவதில்லை. நீயும் தாயகம் செல்லப் போவதில்லை.

ரேஷன்? அது அரிசிக்கும் சர்கரைக்கும் மாத்திரமில்லை எங்கள் இல்லறத்துக்கும் தான் என்று கண்கலங்கியிருக்கும் மனைவியை திருப்திபடுத்த வேண்டி பக்கத்து வீட்டுக்காரிக்கு அவளது கணவன் வாங்கியனுப்பிய சேலையின் சிறு துண்டை கிழித்து அனுப்பிய உன் மனைவியின் ஆசைக்கு அடிபணிந்து கடை கடையாய் ஏறி இறங்கி அயர்ந்து போய் கிடைக்கவில்லை என காரணம் சொல்ல பயந்து, ஊருக்கு செல்வதை தள்ளிப் போடுகின்றாயோ!


நாள் கணக்கில் மட்டும் உன்னை அறிந்த உன் மகனுக்கும் மகளுக்குமான அடுத்த வருட கல்லூரி செலவை நினைத்து உன் அடுத்த வருட பயண தேதியையும் தள்ளி வைப்பாயோ?


நீ கட்டிய புது வீட்டின் ஹாலில் தொங்கிய பல காலண்டர்கள் குப்பைக்கு போய்விட்டது. வெள்ளையாய் அடித்த சுண்ணாம்பும் பாசி பிடித்து ஆங்காங்கே பச்சையாய் மாறி விட்டது. வீட்டு மராமத்து வேலைக்கு நீ என்ன செய்வாய்? உன் வேலை முடிந்தவுடன் இருக்கவே இருக்கிறது பகுதி நேர வேலைகள். லேபர் செக்கிங் வந்தால் சாமான் வாங்க வந்தேன் என்று சொல்லிக் கொண்டால் ஜெயிலில் இருந்து தப்பி விடலாம் ஆனால் நீ உன் பழைய பாசி படிந்த வீட்டை வெள்ளை அடித்து விடலாமே! நீ இப்பொழுது ஊருக்கு போகத்தான் வேண்டுமா?

சோர்ந்துப் போயிருந்த உன்னை வியாழன் தோறும் நடைபெறும் இஸ்லாமிய பயான் நோட்டிஸ் இழுத்ததினால் நீ இன்று தர்காவையும் கொடிமரத்தையும் விட்டுவிட்டு ஒரே இறைவனின் பால் திரும்பி தொழத் தொடங்கியுள்ளாய். இறைவன் உன்னை நரக நெருப்பிலிந்து காப்பாற்றியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும். ஆனால், நீ மாத்திரம் இணைவைப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு உன் குடும்பத்தினர் தர்கா, கொடிமரம், சந்தனக்கூடு என்று அலைவதை தடுக்காமல் மேலதிகமாக செலவுக்கும் கொடுக்கின்றாயே. அவர்கள் நரகத்திற்கு போகட்டும் நாம் மட்டும் சொர்கத்திற்கு போவோம் என்ற சுயநலம் இதில் மாத்திரம் உனக்கு எப்படி வந்தது?
ஹீட்டர் இல்லாமலே பைப்பை திறந்தால் வரும் சூட்டு நீரில் தோல் நோயையும், சிறிய அறையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய கட்டிலில் சர்க்கஸ் செய்து உறங்கி ஆஸ்துமாவையும், மெஸ்ஸில் போடும் வேகாத ஆட்டையும், 8மாததுக்கு முன் குளிரூட்டத் தொடங்கிய கோழியையும் தின்று தின்று பெற்ற பிரஷரும், உப்புக் கலந்த நீரில் குளித்து இழந்துவிட்ட உன் தலைமுடியும், 10,000 இந்திய ரூபாய்கள் கேட்கின்றானே!

பிடிங்கிவிடு என்று இழந்த உன் பல்லும் உன் 40 வயது ஆரோக்கியத்தை 60 ஆக காண்பிக்கின்றதே. உன்னால் அடுத்த வருடம் வரை தாக்குப்பிடிக்க இயலுமா?


உன் தந்தையின் அகால மரணத்துக்கு செல்ல முடியாமல் இரண்டு பகல் ஒரு இரவு உன் வரவுக்காக காத்திருந்த உன் தந்தையின் ஜனாஸா நீயில்லாமலே அடக்கம் செய்யப்பட்டதே, அவரை நினைத்து உன் தாய் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவளருகிலிருந்து உன் மனைவி செய்ய மறுத்த பணிவிடைகளை உன்னால் செய்ய முடிந்ததா?

உனக்கு சட்டையை தேய்த்துக் கொடுத்தும், மளிகை கடைக்கு ஒடி நீ சவரம் செய்ய பிளேடு வாங்கியும் சம்பளமில்லா ஊழியனாய் உழைத்த உன் சகோதரனின் திருமணத்திற்கு கூட விடுமுறை கிடைக்கவில்லை என்று செல்லாமல் நீ சாதித்தவை என்ன?
பட்ட மேற்படிப்பு படித்த உனக்கு பெங்க@ரிலும் சென்னையிலும் ஏழாயிரம், எட்டாயிரம் என்று கொடுத்ததை வேண்டாம் என்று விட்டு விட்டு விசிட்டில் வந்து மற்றவர்களின் அறிவுத்திறனுடன் போட்டியிட இயலாமல் இந்த இங்கிலீஸை வைத்து கொண்டு நீ அரபுலகில் வேலை வாங்கிவிடுவாயா என்று கேட்டானே இன்டர்விய+ ஆபிஸர் அவனுக்கெதிராக நீ வெறும் 11,250 இந்திய ரூபாய் பெறுவதற்காக காலை 6மணிக்கு ஆரம்பித்து இரவு 10மணி வரை பார்க்கையும் கழிவறையையும் சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றாயே இது தான் உன் வெளிநாட்டு வாழ்க்கை சாதனையா?

மிகக் குறைந்த சம்பளம் 4,825 ரூபாய் வாங்கும் சகோதரனை விட நான் பரவாயில்லை என்கிறாயே இந்த அரபுலகில் மற்றொருவர் 1,50,000 ரூபாய் மாத சம்பளமாக பெறுகிறார் என்பதை நீ ஏன் மறந்துவிட்டு முன்னேற மறுக்கின்றாய்.

60 நாள் விடுப்பில் சென்றுவிட்டு 10 நாளில் பெண் தேடித் திருமணம் செய்து 50 நாட்கள் அவளுடன் வாழ்ந்து வந்திருக்கும் உனக்கும் அவளுக்கும் என்ன அந்நியோன்யம் ஏற்பட்டு விட போகிறது. திருமணங்கள் எளிமையாக நடத்தப்படவேண்டும் என்ற நாயகத்தின் வாக்கை மறந்துவிட்டு கோட்டையார் தன் மகள் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தியது போன்று நீயும் உன் திருமண விருந்தை அட்டகாசமாய் நடத்தி அதில் பாதிக்கு மேல் இலையில் வீணாக்கினார்களே அந்த தெண்டச் செலவுகளுக்கு நீ இன்னும் எத்தனை வருடம் உழைக்கப் போகின்றாயோ! நபிகளார் காலத்தில் நபிக்கும் கூட அறிவிக்கப்படாமல் நடந்தேறிய சஹாபாக்களின் திருமணங்களின் எளிமையிலிருந்து நாம் திருந்த வேண்டாமா?

வெள்ளிக்கிழமை வந்தால் ஜூம்மா பாங்கு சொல்லும் வரை ஒர் உறக்கம். தொழுதபின் நல்லதொரு பரியாணி அதன் பின் உறவுகளுக்கும் மனவிக்கும் தொலைபேசியில் ஒரு உரையாடல். மனைவியிடம் போனில் பேசிவிடலாம் என்று போன் செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒவ்வொருவராக பேசி கடைசியாக அவள் முறை வரும் சமயம் உன் அலைபேசியில் போதுமான தொகையில்லை என்று பதிவுசெய்யப்பட்ட வேறு ஒரு பெண்ணின் குரலைக்கேட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதை தவிர உனக்கு வேறென்ன சந்தோஷம் இந்த பாலைவெளியில் கிடைத்திருக்கின்றது. தவறிப்போய் உன் மனைவியிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்து அவள் மாமியார் மற்றும் நாத்தனாரின் அடக்குமறையை பற்றி பேசும் பொழுது நீ நொறுங்கிப் போயிருப்பாய். அவளுக்கு ஆறுதல் சொல்லும் முன் உன் அலைபேசியில் மனைவியின் குரலுக்கு பதிலாக மீண்டும் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் உன்இயலாமையின் மீது ஓங்கி ஒலிக்கும்.


இந்திய திரு நாட்டில் பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளிநாட்டு அழைப்புகளின் தொகையை குறைத்திருந்தும் நீ இன்னமும் வெளிநாட்டின் தொலைபேசியிலேயே இருமடங்காக செலவழித்துக்கொண்டு இருக்கின்றாயே. உனக்கென்ன இந்த வாழ்க்கை நிரந்தரம் என்ற எண்ணமோ? நீ மாதா மாதம் அனுப்பும் தொகையில் தாய் நாட்டிலிருந்து உன்னை அழைக்கச் சொல். அவர்கள் உன்மீது வைத்திருக்கும் பாசம், அன்பை அறிய உனக்கு இனி வாய்புகள் அமையலாம்.


மாதா மாதம் சரியாக பணம் அனுப்பி விட்டால் போதும் என்றிருக்கின்றாயே. நீ இல்லாமல் உன் குடும்பத்தார் தினசரி அத்யாவசிய வேலைகளுக்கு எத்தனை சிரமப்படுகிறார்கள் என்பதை நீ ஏன் சிந்திக்க மறுக்கின்றாய். அதுவும் பெண்கள் வெளியுலக வேலைகளை நிறைவேற்ற எத்தனை கஷ்டப்படுகின்றார்கள் என்பதை நீ அறிவாயா?


27 வருடமாக நீ இங்கிருந்து இழந்ததில் உன் குழந்கைகளின் கல்வியும் அடக்கம். நீ ஊரில் இருந்த போது 30 நாட்கள் ஒழுங்காக படித்த உன் கடைக்குட்டிப் பையன் நீ விடுமுறை முடிந்து வந்தவுடன் மீண்டும் நகர்வலம் செல்லத் தொடங்கி விட்டான், அவன் 12வது தேறுவது கடினம் என்று வருந்துவதை விட்டு விடு. வளைகுடா நாட்டின் தெருக்களை சுத்தம் செய்ய உன் மகன் அங்கு தயாராகி வருகின்றான். இனி அவன் முறை வருகின்றது. அவன் வந்து உன்னை தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பான்.
65 வயதாகிவிட்டவர்களுக்கு இனி அக்காமா அடிக்க முடியாது என்று அரசாங்கம் இட்ட ஆணையை தொடர்ந்து 34 வருடமாக இங்கு உழைத்துக் கொட்டிய தெற்குத் தெரு டெய்லர் மாமா நல்ல உடல் நிலையுடன் தாயகம் கேன்ஸலில் திரும்பியவருக்கு உடல் நிலை மோசமாகி படுக்கையில் கிடக்கின்றார். அவருடைய வங்கியில் ஏதுமில்லை. அவருடைய மகன்தான் இன்று வைத்திய செலவுகளை பார்கின்றான். ஏதோ அவன் புத்திசாலியாய் இருந்ததினால் இங்கு ஒரு தொழிலை பலருடன் சேர்ந்து கூட்டாக ஆரம்பித்து அதன் வருவாயில் ஊரில் நலமுடன் இருக்கின்றான். அவனைப் பார்த்தாவது நாம் படிப்பினை பெற வேண்டாமா?


எத்தனை காலம் தான் இந்த பாலைவெளியின் 13டிகிரி குளிரிலும் 48டிகிரி சூட்டிலும் மற்றவர்களுக்காகவே உன்னை நீ அழித்துக்கொள்வாய். நீ உனது வாழ்வையே இழந்து நிற்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.


என் உடன் பிறவா சகோதர, சகோதரியே இனி மேலும் நீ இழப்பதற்கு ஏதுமில்லை. எனவே இன்றிலிருந்து வீணான செலவுகளை தவிர்த்துவிடு. உன் வருமானத்தில் ஒரு பகுதியை ஏதேனும் ஒரு வழியில் சேமித்து வை. 3 வருடம் அல்லது 5 வருடம் கழித்து அதனை எடுத்து உன்னைப் போல் ஆர்வமுள்ளவர்களுடன் கூட்டுச் சேர்ந்து இந்த வளைகுடா நாட்டிலோ அல்லது தாயகத்திலே ஒரு தொழிலை ஆரம்பித்து நீ இங்கு மாற்றவருக்Ĩ
thanks:ambai webs

1 கருத்துகள்:

ER. K.P.M. ABDUL HALEEM சொன்னது…

சிறப்பான பதிவு தாஜுதீன்